இந்தியாவில் வெளியிடப்பட்டது 2024 Porsche Taycan Facelift, விலை ரூ.1.89 கோடியில் இருந்து தொடங்குகிறது
ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் காரில் அதிக ரேஞ்சை கொடுக்கக்கூடிய பெரிய பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
-
ஃபேஸ்லிஃப்டட் போர்ஷே டேகன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
-
4S II மற்றும் Turbo II என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன.
-
புதிய HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் மற்றும் புதிய செய்யப்பட்ட ஏர் வென்ட்களுடன் கூடிய புதிய முன் கிரில் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
புதிய 20-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் ஒளிரும் லோகோவுடன் புதிய பின்புற டெயில் லைட் ஆகியவற்றைப் பெறுகிறது.
-
ஸ்டீயரிங் வீலில் ஒரு டிரைவிங் மோட் பட்டன் மற்றும் சக்கரத்தின் பின்னால் ஒரு ADAS லீவர் இப்போது ஸ்டாண்டர்டாக உள்ளது.
-
விலை ரூ. 1.89 கோடி முதல் ரூ. 2.53 கோடி வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
போர்ஷே டேகன் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் EV செடான் இப்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வரவுள்ளது. நுட்பமான வடிவமைப்பு மாற்றங்கள், பவர்டிரெய்ன் அப்டேட் உடன் இப்போது அதிக கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இது பின்வரும் விலை விவரங்களுடன் போர்ஷே இந்தியா -வின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது:
மாடல் |
போர்ஷே டேகன் 4S II |
போர்ஷே டேகன் Turbo II |
தொடக்க விலை |
ரூ.1.89 கோடி |
ரூ.2.53 கோடி |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை (பான்-இந்தியா)
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்
போர்ஷே 89 kWh பேட்டரி பேக்கை இதில் கொடுத்துள்ளது, இது ஆப்ஷனலான பெர்ஃபாமனஸ் பேட்டரி பிளஸ் பேக்குடன் 105 kWh யூனிட் அப்டேட் செய்யப்படலாம். இதோ விவரங்கள்:
மாடல் |
போர்ஷே டேகன் 4S II |
போர்ஷே டேகன் Turbo II |
|
பெர்ஃபாமனஸ் பேட்டரி பேக் (ஸ்டாண்டர்டு) |
பெர்ஃபாமனஸ் பேட்டரி பிளஸ் பேக் (ஆப்ஷனல்) |
பெர்ஃபாமனஸ் பேட்டரி பிளஸ் பேக் (ஸ்டாண்டர்டு) |
|
பேட்டரி பேக் |
89 kWh |
105 kWh |
105 kWh |
பவர்* |
460 PS |
517 பிஎஸ் |
707 PS |
டார்க் (லாஞ்ச் கன்ட்ரோல் உடன்)* |
695 Nm |
710 Nm |
890 Nm |
டிரைவ்டிரெய்ன் |
AWD |
AWD |
AWD |
கிளைம்டு ரேஞ்ச் (WLTP)* |
557 கி.மீ வரை |
642 கி.மீ வரை |
629 கி.மீ வரை |
*போர்ஷே இன்னும் இந்தியா-ஸ்பெக் காருக்கான புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ளது யுகே-ஸ்பெக் டேகன் காரை அடிப்படையாகக் கொண்ட புள்ளிவிவரங்கள் ஆகும்.
டர்போ மாடல் மேலும் புதிய 'புஷ்-டு-பாஸ்' ஃபங்ஷனை பெறுகிறது. இது காருக்கு 10 வினாடிகளுக்கு 95 PS பூஸ்ட்டை கொடுக்கிறது.
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட போர்ஷே டேகன் இப்போது 320 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது முன்பை விட 50 kW அதிகமானதாகும். 11 kW AC சார்ஜர் இப்போது ஸ்டாண்டர்டாக காருடன் வழங்கப்படுகிறது.
வெளிப்புறம்
ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட போர்ஷே டேகன் காரில் புதிய HD Matrix-LED லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை இப்போது ஃபிளாட் ஆனவை, ஆனால் பழைய மாடலில் 4-பாயிண்ட் DRL -கள் கொடுக்கப்பட்டிருந்தன. முன்பக்க பம்பர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது, இப்போது புதிதாக ஏர் டேம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டர்போ மாடல் பிரத்தியேக டர்பனைட் வர்ணம் பூசப்பட்ட டிஸைன் எலமென்ட்டை பெறுகிறது. பின்புறத்தில் போர்ஸ் லோகோ ஒரு ஒளிரும் ஃபங்ஷனை பெறுகிறது. இது தெளிவான பேனலுக்கு அடியில் கொடுக்கப்பட்டுள்ளது. 21-இன்ச் அலாய் வீல்கள் லோ ரெசிஸ்டன்ட்ஸ் டயர்களால் கவர் செய்யப்பட்ட இலகுவான ஏரோ வீல்கள் ஆகும்.
சேசிஸ் முன்பக்கத்தில் 2024 போர்ஷே டேகன் ஆனது அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷனை ஸ்டாண்டர்டாக பெறுகிறது. ஆல்-வீல்-டிரைவ் டர்போ II வேரியன்ட்டுக்கான ஃபங்ஷனில் உள்ள சஸ்பென்ஷன் செட்டப்பை மேம்படுத்துவதற்கான ஆப்ஷனுடன் வருகிறது. டேகன் வரிசையின் எடையும் 15 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது.
உட்புறம்
உள்ளே செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மிகக் குறைவானவை. யூஸர் இன்டர்ஃபேஸ் (UI) 10.9 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 16.8 இன்ச் முழு டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் ஆப்ஷனலான பயணிகளின் டிஸ்ப்ளே ஆகியவை அப்டேட் செய்யப்பட்டுள்ளன. மேலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பயணிகளின் டிஸ்பிளே இப்போது வீடியோ ஸ்ட்ரீமிங்கை சப்போர்ட் செய்கிறது.
டிரைவிங் மோட் பட்டன் ஒரு ஆப்ஷனலாக தேர்வு செய்யலாம், இது இப்போது ஸ்டாண்டர்டானது. இடதுபுறத்தில் ஸ்டீயரிங் வீலுக்கு பின்னால் ஒரு புதிதாக லீவர் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்(ADAS) செட்டப்களை அணுக முடியும். இந்த ஃபேஸ்லிஃப்ட்டுடன் இரண்டு லெதர் இல்லாத சீட் அப்ஹோல்ஸ்டரி ஆப்ஷன்களையும் போர்ஷே வழங்குகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
போர்ஷே டேகன் இப்போது முன்பை விட ஸ்டாண்டர்டான வசதிகளை பெறுகிறது. ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, 14-வே எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் முன் இருக்கைகள், நான்கு இருக்கைகளிலும் ஹீட்டிங் ஃபங்ஷன் மற்றும் ஸ்டீயரிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் டிரைவர் மற்றும் பயணிகள் பக்கத்தில் டைப்-சி போர்ட்கள் ஆகியவை உள்ளன. 4-ஜோன் ஏசி, ஏர் ஃபியூரிபையர், ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் 14-ஸ்பீக்கர் வரை போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை காரில் உள்ள மற்ற வசதிகளாகும்.
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆக்டிவ் ஸ்பீட் லிமிட் அசிஸ்ட் மற்றும் டிரைவரின் தூக்கத்தைக் கண்டறியும் வசதி உள்ளிட்ட ADAS வசதிகள் உள்ளன. ரிவர்ஸ் கேமராவுடன் கூடிய பார்க்கிங் அசிஸ்டெண்ட், பின்புறத்தில் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவையும் உள்ளன. டர்போ மாடல் சாலையில் உள்ள பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக ஆக்டிவ் பானட்டை பெறுகிறது. இது முன் சென்சார்கள் செயலிழப்பைக் கண்டறியும் போது விபத்து பாதிப்பைக் குறைக்க பானட்டின் பின்புற பகுதியை உயர்த்துகிறது.
போட்டியாளர்கள்
போர்ஷே டேகன் காரின் நெருங்கிய போட்டியாளர்களாக அதன் மெக்கானிக்கல் உடன்பிறப்புகளான Audi e-tron GT மற்றும் e-tron GT ஆகிய இரண்டு கார்களும் இருக்கும். இவை இரண்டும் சமீபத்தில் உலகளாவிய புதுப்பிப்பைப் பெற்றன. Mercedes-Benz EQS மற்றும் AMG EQS 53 போன்ற கார்களுக்கு இது ஒரு ஸ்போர்ட்டி மாற்றாக இருக்கும் . பிரீ-பேஸ்லிஃப்டட் டேகன் முன்புற பிரேக் சிஸ்டம் சம்பந்தப்பட்ட சமீபத்திய ஒன்று உட்பட பல பிரச்னைகளுக்காக ரீகால் செய்யப்பட்டது. இந்த ஃபேஸ்லிஃப்ட் பேக்கேஜில் முதன்முதலில் போர்ஸ் EV -யின் பல விஷயங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என்று நம்புகிறோம்.
வாகன உலகில் என்ன நடக்கிறது என்பது தொடர்பாக உடனடி அறிவிப்புகள் வேண்டுமா? கார்தேகோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: டேகன் ஆட்டோமெட்டிக்