2024 Nissan X-Trail மற்றும் போட்டியாளர்கள்: விலை ஒப்பீடு
இந்தியாவில் விற்பனையாகும் மற்ற எஸ்யூவி -களையும் போல இல்லாமல் நிஸான் X-டிரெயில் ஆனது CBU (முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்) ஆக இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
நிஸான் X-டிரெயில் பத்தாண்டுகளுக்கு பிறகு இறுதியாக இந்திய சந்தைக்கு திரும்பியுள்ளது. இப்போது அதன் நான்காவது தலைமுறை பதிப்பில் உள்ளது. மேலும் இப்போது நிஸான் இந்தியாவின் போர்ட்ஃபோலியோவில் மேக்னைட் உடன் இணைந்துள்ள மற்றொரு தயாரிப்பு ஆகும். X-டிரெயில் ஒரு முழு அளவிலான எஸ்யூவி ஆகும். இது ஸ்கோடா கோடியாக் மற்றும் ஜீப் மெரிடியன் உடன் போட்டியிடுகிறது. நிஸான் X-டிரெயில் ஆனது விலை விஷயத்தில் அதன் போட்டியாளர்களுக்கு எதிராக எப்படி இருக்கிறது பார்ப்போம்.
விலை ஒப்பீடு
நிஸான் X-டிரெயில் |
ஸ்கோடா கோடியாக் |
ஜீப் மெரிடியன் |
லிமிடெட் (O) 2WD MT - ரூ 33.77 லட்சம் |
||
லிமிடெட் (O) 2WD AT - ரூ 35.69 லட்சம் |
||
ஓவர்லேண்ட் 2WD AT- ரூ 37.14 லட்சம் |
||
லிமிடெட் (O) 4WD AT - ரூ 38.38 லட்சம் |
||
LK AT - ரூ 39.99 லட்சம் |
ஓவர்லேண்ட் 4WD- ரூ 39.83 லட்சம் |
|
X-டிரெயில் - ரூ 49.92 லட்சம் |
விலை எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
முக்கிய விவரங்கள்
-
ஸ்கோடா கோடியாக்கை விட நிஸான் X-டிரெயில் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் விலை அதிகம் ஆகும். X-டிரெயில் மற்றும் கோடியாக் இரண்டும் ஃபுல்லி லோடட் டிரிமில் விற்கப்படுகின்றன. முந்தையது CBU ஆகவும், பிந்தையது CKD (முற்றிலும் நாக் டவுன்) தயாரிப்பாகவும் விற்கப்படுகிறது.
-
மறுபுறம் ஜீப் மெரிடியன் இரண்டு பரந்த வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: லிமிடெட் (O) மற்றும் ஓவர்லேண்ட். மெரிடியனின் டாப்-ஸ்பெக் 4WD ஓவர்லேண்ட் வேரியன்ட் நிஸான் எஸ்யூவியை விட ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.
-
நிஸான் X-டிரெயில் ஆனது ஃபிரன்ட்-வீல் டிரைவ் டிரைவ் டிரெய்னுடன் (FWD) மட்டுமே கிடைக்கிறது. அதேசமயம் கோடியாக் மற்றும் மெரிடியன் ஆகியவை ஆல்-வீல்-டிரைவ் (AWD) மற்றும் 4-வீல்-டிரைவ் (4WD) செட்டப்களை பெறுகின்றன.
-
X-டிரெயில் 12V மைல்ட்-ஹைப்ரிட் அமைப்போடு இணைக்கப்பட்ட 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இந்த இன்ஜின் 163 PS மற்றும் 300 Nm ஐ உருவாக்குகிறது. மேலும் CVT ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
-
ஸ்கோடா எஸ்யூவி ஒரு பெரிய 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (190 PS / 320 Nm) உள்ளது. 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (DCT) வழியாக நான்கு சக்கரங்களுக்கும் பவர் அனுப்பப்படுகிறது.
-
ஜீப் எஸ்யூவி 170 PSமற்றும் 350 Nm அவுட்புட்டை கொடுக்கும் 2 லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 9-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) உடன் கிடைக்கிறது.
-
X-டிரெயில் 8-இன்ச் டச் ஸ்கிரீன், 12.3-இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, டூயல்-சோன் ஏசி மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகள் உள்ளன. இருப்பினும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள், லெதரெட் அப்ஹோல்ஸ்டரி, பவர்டு முன் இருக்கைகள் மற்றும் ஆம்பியன்ட் லைட்ஸ் போன்ற முக்கிய வசதிகள் இதில் கிடைக்கவில்லை. இந்த அம்சங்கள் கோடியாக் மற்றும் மெரிடியன் இரண்டிலும் கிடைக்கின்றன.
-
ஜீப்பின் 3-வரிசை எஸ்யூவியில் 10.1-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் உள்ளது, கோடியாக்கில் இன்னும் 8-இன்ச் யூனிட் மட்டுமே உள்ளது. மூன்று எஸ்யூவிகளிலும் அவற்றின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கின்றன.
-
பாதுகாப்புக்காக X-டிரெயில் 7 ஏர்பேக்குகள், ஆட்டோ ஹோல்ட் கொண்ட எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ரெயின்-சென்சிங் வைப்பர்கள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
ஜீப் மெரிடியனில் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.
-
கோடியாக்கில் 9 ஏர்பேக்குகள் உள்ளன. அதே நேரத்தில் ESC, TPMS மற்றும் 360 டிகிரி கேமராவையும் வழங்குகிறது.
-
இந்த எஸ்யூவி -கள் எதுவும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகளுடன் வரவில்லை.
குறிப்பு: நிஸான் X-டிரெயில் இந்தியாவில் முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட மாடலாக விற்கப்படுகிறது. எனவே இதன் விலை மிக அதிகமாக உள்ளது. எம்ஜி குளோஸ்டர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனரின் வழக்கமான வேரியன்ட்களை விட X-டிரெயில் விலை அதிகம்.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: நிஸான் X-டிரெயில் ஆட்டோமெட்டிக்