2023 ஹோண்டா சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் கார்களின் எதிர்பார்க்கப்படும் விலைகள்: இந்த ஃபேஸ்லிப்ட் கார்களுக்கான ப்ரீமியம் எவ்வளவாக இருக்கும் ?
modified on மார்ச் 01, 2023 07:05 pm by rohit for ஹோண்டா சிட்டி
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபேஸ்லிப்ட் கொண்ட இந்த செடான் புதிய என்ட்ரி லெவல் SV வேரியண்டைப் பெறுகிறது. மேலும் ADAS உடன் கூடிய கூடுதல் ப்ரீமியத்துடன் டாப் என்டில் கிடைக்கிறது.
இந்தியாவில் ஹோண்டா சிட்டி மார்ச் 2 ஆம் தேதி புத்தம் புதிய காராக அறிமுகப்படுத்தப்பட உள்ளது, புதிய தோற்றப்பொலிவு கொண்ட சிட்டி ஹைப்ரிட் (e:HEV) அதே நாளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே வெளியான சில புகைப்படங்கள் வழக்கமான சிட்டி மற்றும் சிட்டி ஹைப்ரிட் இரண்டிற்குமான அடிப்படை மாறுபாடுகள், புதிய அப்டேட்டில் காருக்கு கிடைக்கப்போகும் வசதிகள் உள்ளிட்ட தகவல்களை தெரியப்படுத்துகின்றன. செடானிற்கு ஆஃப்லைன் புக்கிங்குகளையும் பல டீலர்ஷிப்புகள் ஏற்றுக்கொள்கின்றனர். பல்வேறு மாறுபாடுகளை பற்றி நாம் ஏற்கனவே தெரிந்து கொண்டுள்ளோம், பெட்ரோல் மட்டும் பயன்படுத்தப்படும் மாடல் மற்றும் வலுவான ஹைப்ரிட் கார் இரண்டிற்குமான மாறுபாடுகள் வாரியான எதிர்பார்க்கப்பட்ட விலைகள் இதோ உங்கள் கவனத்திற்கு.
மாறுபாடுகள் வாரியான விலைகள் பற்றி ஆராய்வதற்கு முன்னர், நாம் இப்போது ஃபேஸ்லிப்டட் செடானின் பவர்டிரெயின் விவரங்களை பார்ப்போம் வாருங்கள்.
விவரக்குறிப்புகள் |
1.5-லிட்டர் பெட்ரோல் |
1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் |
பவர் |
121 PS |
126 PS (இணைந்தது) |
டார்க் |
145 Nm |
253 Nm (இணைந்தது) |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ CVT |
e-CVT |
ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்டதால் இந்த செடானில் பழைய 1.5லிட்டர் டீசல் பவர்டிரெயின்(100 PS/200 Nm) இல் இனிமேல் கிடைக்காது. 0.7kWh பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் சிட்டி ஹைப்ரிட் 1.5லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் பெற்றுள்ளது.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜர். ஆம்பியன்ட் லைட்டிங் வயர்லெஸ் ஆன்டிராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் மிக முக்கியமாக மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள்(ADAS) போன்ற பல வசதிகளை புதிய சிட்டி கார் பெற்றுள்ளது. சிட்டியின் ஹைப்ரிட் அவதாரில் ஹோண்டா அறிமுகப்படுத்திய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை வழக்கமான பெட்ரோல் செடானுடன் இப்போது வழங்குகிறது. கூடுதலாக, அது மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது.
மேலும் படிக்க: ChatGPT-இன் படி 4 சிறந்த இந்திய கார்கள் இதோ
எதிர்பார்க்கப்படும் வேரியண்ட் வாரியான விலைகளைப் பாருங்கள்:
மாறுபாடுகள் |
1.5-லிட்டர் MT |
1.5லிட்டர் CVT |
1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் |
SV (புதியது) |
ரூ. 11 இலட்சம் |
– |
– |
V |
ரூ. 12.20 இலட்சம் |
ரூ. 13.60 இலட்சம் |
ரூ. 16.57 இலட்சம் |
VX |
ரூ. 13.65 இலட்சம் |
ரூ. 14.95 இலட்சம் |
– |
ZX |
ரூ. 15.65 இலட்சம் |
ரூ. 16.95 இலட்சம் |
ரூ. 20 இலட்சம் |
இந்த புதிய அப்டேட்டுடன், ஹோண்டா தனது காம்பாக்ட் செடானிற்காக புதிய அடிப்படை-வகை SV டிரிம்மை அறிமுகப்படுத்தவுள்ளது. CVT தேர்வு இல்லாத ஒரே ஒரு கார் இது. CVT கார்கள் அவற்றின் மேனுவல் போட்டிக்கார்களைவிட ரூ.1.3 இலட்சம் முதல் ரூ. 1.4 இலட்சம் வரை பிரீமியமாகவே தொடரும். VX -ஐவிட டாப்-ஸ்பெக் ZX டிரிம் ரூபாய் இரண்டு இலட்சங்கள் கூடுதல் விலை கொண்டதாக இருப்பதற்கு முக்கிய காரணம் அதில் ADAS சேர்க்கப்பட்டிருப்பதுதான். தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங், அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் அசிஸ்ட் உள்ளிட்ட பல வசதிகளையும் இது பெற்றுள்ளது.
மேலும் பார்க்கவும்: மாருதி கிராண்ட் விட்டாராவுக்கு போட்டியாக ஹோண்டாவின் புதிய SUV முதல் முறையாக இந்திய சாலைகளில் காணப்பட்டது.
புத்தம்புதிய சிட்டி-இன் எதிர்பார்க்கப்படும் விலைகளை அதன் நெருங்கிய போட்டிக் கார்களுடன் ஒப்பிடுவோம்:
2023 ஹோண்டா சிட்டி(எதிர்பார்க்கப்பட்டது) |
ஸ்கோடா ஸ்லாவியா |
2023 ஹீண்டாய் வெர்னா(எதிர்பார்க்கப்பட்டது) |
வோல்க்ஸ்வேகன் வெர்ச்சஸ் |
மாருதி சியாஸ் |
ரூ. 11 இலட்சம் முதல் ரூ. 16.95 இலட்சம் வரை |
ரூ. 11.29 இலட்சம் முதல் ரூ. 18.40 இலட்சம் வரை |
ரூ. 10 இலட்சம் முதல் ரூ. 18 இலட்சம் வரை |
ரூ. 11.32 இலட்சம் முதல் ரூ. 18.42 இலட்சம் வரை |
ரூ. 9.20 இலட்சம் முதல் ரூ. 12.19 இலட்சம் வரை |
ஹோண்டா சிட்டி இப்போது வோல்க்ஸ்வேகன் வெர்ச்சஸ் இன் , ஸ்கோடா ஸ்லேவியா, மாருதி சியாஸ் மற்றும் ஹீண்டாய் வெர்னா (அதன் புதிய தலைமுறை பதிப்பு)களுடன் தொடர்ந்து போட்டியிடுகிறது. அதேநே ரத்தில், சிட்டி ஹைப்ரிட்-க்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை.
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோருமுக்கானவை
மேலும் படிக்கவும்: சிட்டி டீசல்
0 out of 0 found this helpful