இந்தியாவில் 2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகம் மார்ச் 17 அன்று என உறுதிப்படுத்தப்பட்டது
published on பிப்ரவரி 14, 2020 03:34 pm by dhruv attri for ஹூ ண்டாய் கிரெட்டா 2020-2024
- 47 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது க்யா செல்டோஸுடன் ஆற்றல் இயக்கி விருப்பங்களைப் பகிர்ந்து கொள்ளும்
-
2020 ஹூண்டாய் கிரெட்டாவின் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகள் சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம், வெளிப்புறக் காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித்திறப்பு மேற்கூரை மற்றும் எல்இடி விளக்குகள் போன்ற சிறப்பம்சங்கள் இதில் இடம்பெறும்.
-
இது பிஎஸ்6 ஆற்றல் இயக்கி விருப்பங்களின் தொகுப்பைக் கொண்டிருக்கும்: 1.5-லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் விருப்பங்களைக் கொண்டிருக்கும்.
-
விலைகள் ரூபாய் 10 லட்சத்திலிருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; க்யா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் மற்றும் டாடா ஹாரியர் ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மிகவும் பிரபலமான, கவர்ச்சிகரமான கார்களில் ஒன்று இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா ஆகும். நீங்கள் உங்களுடைய வீட்டில் காரை வைத்துக்கொள்ள விரும்பினால், இது மார்ச் 17 அன்று அறிமுகம் ஆக இருப்பதால், உங்களுடைய பணம் மற்றும் நிதிகளின் நிலைகளைச் சரி செய்து சேமித்துக் கொள்வதற்கான நேரம் இது தான். வரும் வாரங்களில் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவுகள் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
2020 ஹூண்டாய் கிரெட்டாவானது தற்போது ஐந்தாண்டிற்கும் மேலாக நம் மனதைக் கவர்ந்து வரும் இதன் தற்போதைய காம்பாக்ட் எஸ்யூவியின் புதிய தலைமுறை பதிப்பாகும். இது எல்இடி முகப்பு விளக்குகளால் சூழப்பட்ட ஓர் அடுக்கு முன்பக்க பாதுகாப்பு சட்டகத்துடன் வெளிப்புறத்தில் ஒரு தனித்துவமான மற்றும் சிறந்த வடிவமைப்பைப் பெறுகிறது. இரட்டை-தொனியிலான 17-அங்குல உலோக சக்கரங்கள் மற்றும் சதுர-வடிவிலான சக்கர வளைவுகளுடன் கூடிய பக்கவாட்டு அமைவு அதன் சிறந்த நிலைப்பாட்டிற்கு உதவுகிறது. ‘பிரிடேட்டர் ஃபாங் வடிவிலான பிளவு எல்இடி பின்புற விளக்குகள் இதன் பின்புறத்தில் காணப்படுகிறது.
ஹூண்டாய் இரண்டாவது தலைமுறை கிரெட்டாவின் உட்புற அமைவை இதுவரை வெளிக்காட்டவில்லை, ஆனால் ஆட்டோ எக்ஸ்போ 2020 இன் காட்சியானது புதிய தளவமைப்பை அறிமுகப்படுத்துகிறது. இந்த படங்கள் ஒரு பெரிய தொடுதிரை ஒளிபரப்பு அலகு (க்யா செல்டோஸைப் போல சுமார் 10.25- அங்குலங்கள்), நான்கு கம்பிகள் கொண்ட திசைதிருப்பி மற்றும் மின்னணு முறையிலான தடைக்கருவி அமைப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தின.
வெளிப்புறக்கட்சிகளைக் காணக்கூடிய சூரியஒளித் திறப்பு மேற்கூரை, ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம், வேகக் கட்டுப்பாடு, கம்பியில்லா மின்னேற்றம், ஆற்றல் மிக்க ஓட்டுநர் இருக்கை மற்றும் காற்றோட்டமான முன் இருக்கைகள் போன்ற பிற சிறப்பம்சங்களையும் எதிர்பார்க்கலாம். ஆறு காற்றுப்பைகள், ஈபிடியுடன் ஏபிஎஸ் அமைப்பு, பின்புறமாக வாகனத்தை நிறுத்த உதவ உணர்விகளுடன் கூடிய கேமரா மற்றும் மின்னணு நிலைத்தன்மை கட்டுப்பாடு ஆகிய பாதுகாப்பு அமைப்புகள் இதில் இடம் பெறுகிறது.
2020 ஹூண்டாய் கிரெட்டாவின் முன்பக்க கதவின் கீழ் இருக்கும் இதன் இயக்கம் கியா செல்டோஸின் முக்கிய இயக்க அமைப்பாக இருக்கும். ஆகையால் நீங்கள் மூன்று பிஎஸ் 6 இணக்கமான ஆற்றல் இயக்கிகளைப் பெறுவீர்கள்: 1.4-லிட்டர் டர்போ பெட்ரோல் இணைப்புடன் கூடிய 1.5- லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் (பின்னர் தாமதமாக அறிமுகப்படுத்தப்படும்). கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரக்குறிப்புகளைப் பாருங்கள்:
இயந்திரம் |
1.5-லிட்டர் சிஆர்டிஐ |
1.5-லிட்டர் விடிவிடி |
1.4-லிட்டர் டி-ஜிடிஐ |
ஆற்றல் |
115பிஎஸ் |
115பிஎஸ் |
140பிஎஸ் |
முறுக்கு திறன் |
250என்எம் |
144என்எம் |
242என்எம் |
செலுத்துதல் அமைப்பு |
6-வேக எம்டி/6-வேக ஏடி |
6-வேக எம்டி/சிவிடி |
6-வேக எம்டி/7-வேக டிசிடி |
புதிய கிரெட்டாவின் தொடக்க விலை 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது எம்ஜி ஹெக்டர், நிஸான் கிக்ஸ், டாடா ஹாரியர் மற்றும் கியா செல்டோஸ் ஆகியவற்றிக்குப் போட்டியாக இருக்கும்.
-
2020 ஹூண்டாய் கிரெட்டாவின் உட்புற அமைவு ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஆய்வு செய்யப்பட்டது
-
2020 ஹூண்டாய் கிரெட்டா பழைய மாதிரி போட்டியாக புதிய மாதிரி: முக்கிய வேறுபாடுகள்
மேலும் படிக்க: கிரெட்டா டீசல்
0 out of 0 found this helpful