2020 ஹூண்டாய் கிரெட்டா உட்புறஅமைவை ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகப்படுத்தியது
published on பிப்ரவரி 08, 2020 04:12 pm by sonny for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 55 Views
- ஒரு கருத்தை எழுதுக
சீனா-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியுடன் ஒப்பிடும்போது இந்திய-சிறப்பம்சம் பொருந்திய இரண்டாம்-தலைமுறையான கிரெட்டா ஒரு தனித்துவமான உட்புற அமைவைப் பெறுகிறது
-
ஹூண்டாய் எக்ஸ்போவில் புதிய தலைமுறை கிரெட்டாவின் வெளிப்புற அமைவை மட்டுமே காட்சிப்படுத்தியது.
-
உட்புற அமைவு பூட்டப்பட்டிருந்தபோது, உட்புறத்தின் மறுவடிவமைப்பு அமைப்பை நாங்கள் சோதனை செய்தோம்.
-
ஒரு பெரிய மத்திய தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பைப் பெறுகிறது (10.25-அங்குலம் இருக்க வாய்ப்புள்ளது).
-
புதிய கிரெட்டா புதிய பிஎஸ் 6 இயந்திரங்களுடன் மார்ச் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
அடுத்த தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகம் செய்தது. காட்சிப்படுத்தும் போது மூடிய கதவுகளுடன் வெளிப்புற அமைவை மட்டுமே காட்டிய போதும், 2020 கிரெட்டாவின் உட்புறத்தைப் பற்றிய ஒரு காட்சியைக் காண முடிந்தது.
புதிய கிரெட்டாவில் ஒரு புதிய உட்புற அமைவு உள்ளது, இது சீன மற்றும் பிரேசிலிய சிறப்பம்சம் பொருந்திய ஐஎக்ஸ்-25, மற்றும் க்யா செல்டோஸ் ஆகியவற்றில் நாம் பார்த்ததிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். இதில் ஒரு பெரிய தொடுதிரை ஒளிபரப்பு முகப்பைக் கொண்டுள்ளது, அநேகமாக 10.25 அங்குல அலகு இருக்கலாம், இது முகப்பு பெட்டியின் மையத்தில் உள்ளது. ஒளிபரப்பு அமைப்பின் இருபுறமும் மத்திய காற்று துவாரங்கள் மேலே வைக்கப்பட்டுள்ளன. புதிய தட்டையான-அடிப்பகுதியுடைய திசைத்திருப்பி உலகளாவிய-சிறப்பம்சம் பொருந்திய சொனாட்டா பிரீமியம் செடான் போன்ற ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
உட்புற வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது கதவு செருகல்கள் மற்றும் இரட்டை-தொனி இருக்கை அமைப்பின் அடிப்படையில் சீனா-சிறப்பம்சம் பொருந்திய ஐஎக்ஸ்25 ஐ ஒத்திருக்கிறது. ஓட்டுனர் சார்ந்த மத்திய அமைப்பின் காலநிலை கட்டுப்பாடுகளுக்கான புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பைப் பெறுகிறது. பிரதான முகப்பின் கீழ் ஒளிபரப்பு அமைப்பிற்கான வரிசை தொடுதிரை அமைப்பிற்கான பொத்தான்கள் உள்ளன. எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மாதிரியில், கைமுறை செலுத்துதல் பற்சக்கரப் பெட்டியை தேர்ந்தெடுப்பவருக்கு புதிய வடிவமைப்பையும், மின்னணுமுறை வாகனத்தை நிறுத்துவதற்கான தடைகருவி அமைப்பையும் கொண்டிருந்தது.
புதிய-தலைமுறை கிரெட்டா அதிக அளவில் குறிப்பாக முன் மற்றும் பின்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இது பிளவு எல்இடி டிஆர்எல்கள் மற்றும் புதிய பெரிய அளவிலான பாதுகாப்பு சட்டகத்துடன் புதிய எல்இடி முகப்புவிளக்குகளைப் பெறுகிறது. இதன் முன்பக்க முகப்பு விளக்கிற்கு பொருந்திவரக்கூடிய வகையில் பின்புற விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் அதன் காம்பாக்ட் எஸ்யூவியில் வெளிப்புற காட்சிகளைக் காணக்கூடிய சூரிய ஒளித் திறப்பு மேற்கூரை மற்றும் ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பத்தையும் சேர்ந்திருக்கின்றது.
க்யா செல்டோஸின் அதே பிஎஸ்6 ஆற்றல் இயக்கி விருப்பங்களால் - 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இது இயக்கப்படும். புதிய ஹூண்டாய் கிரெட்டா 2020 மார்ச் மாதத்தில் ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான ஆரம்ப விலையில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் உயர்-சிறப்பம்சம் பொருந்திய மாதிரியின் விலை ரூபாய் 17 லட்சம் ஆகும். இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸ், டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவைகளுக்கு தொடர்ந்து போட்டியாக இருக்கும்
மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா டீசல்
0 out of 0 found this helpful