• English
    • Login / Register

    2020 ஹூண்டாய் கிரெட்டா பழைய மாதிரிக்கும் புதியமாதிரிக்குமான: முக்கிய வேறுபாடுகள்

    dinesh ஆல் பிப்ரவரி 12, 2020 09:51 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 29 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    புதிய கிரெட்டா அளவில் பெரியது மட்டும் கிடையாது, அது முழுவதும் மாற்றம் செய்யப்பட்ட மாதிரியாக இருக்கிறது 

    2020 Hyundai Creta Old vs New: Major Differences

    ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் ஹூண்டாய் இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை காட்சிப்படுத்தும். இது கூடுதலான சிறப்பம்சங்களுடன் முழுவதும் புதிய வடிவமைப்பையும் புதிய இயந்திர விருப்பங்களின் தொகுப்பையும் கொண்டுள்ளது. மார்ச் 2020 இல் ஹூண்டாய் இரண்டாவது தலைமுறை கிரெட்டாவை அறிமுகப்படுத்த உள்ளது. எனவே, அது மாற்றம் செய்த மாதிரியிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதைக் கண்டுபிடிப்போம்.

    2020 Hyundai Creta Old vs New: Major Differences

    இயந்திர விருப்பங்கள்: புதிய கிரெட்டாவின் இயந்திர விவரங்கள் குறித்து ஹூண்டாய் வெளியிடவில்லை என்றாலும், அது க்யா செல்டோஸுடன் பகிரப்படும். எனவே, 2020 கிரெட்டா 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களை ஃபிளாக்ஷிப்பின் மிகவும் ஆற்றல்மிக்க 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோலுடன் அளிக்கலாம். இந்த தயாரிப்பின் புத்தம் புதிய இயந்திரங்கள் முந்தைய மாடலின் மூன்று இயந்திர விருப்பங்களுக்கு மாற்றாக அமையும்.

    பெட்ரோல் இயந்திரம்:

     



     

    பழைய கிரெட்டா

    புதிய கிரெட்டா

    இயந்திரம்

    1.6-லிட்டர்

    1.4-லிட்டர் டர்போசார்ஜ்டு 

    1.5-லிட்டர்

    ஆற்றல்

    123பி‌எஸ்

    140பி‌எஸ்

    115பி‌எஸ்

    முறுக்கு திறன்

    151என்‌எம்

    242என்‌எம்

    144என்‌எம்

    செலுத்துதல்

    6-வேக எம்‌டி/ஏ‌டி

    6- வேக ஏ‌எம்‌டி/7-டி‌சி‌டி

    6-வேக எம்‌டி/சி‌வி‌டி

    • பழைய கிரெட்டா ஒரு இயந்திர விருப்பத்துடன் கிடைத்தது, ஆனால் புதிய கிரெட்டா இரண்டு இயந்திர விருப்பங்களுடன் கிடைக்கும்.

    • 1.4-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட அலகு பழைய 1.6 லிட்டர் அலகை காட்டிலும் 17பி‌எஸ் / 91என்‌எம் ஐ அதிகமாக உருவாக்குகிறது, அதே சமயத்தில் 1.5 லிட்டர் இயந்திரம் 8பி‌எஸ் / 7என்‌எம் குறைவாக உருவாக்குகிறது.

    • மூன்று இயந்திரங்களும் 6 வேக எம்டியுடன் நிலையாகக் கிடைக்கின்றன.

    • பழைய கிரெட்டா 6-வேக ஏ‌டியுடன் வழங்கப்பட்டது, ஆனால் புதிய கிரெட்டா இரு தானியங்கி பற்சக்கர விருப்பங்களுடன் வரும்.

    • 1.4 லிட்டர் அலகு விருப்ப 7-டிசிடி மற்றும் 1.5 லிட்டர் இயந்திரம் விருப்ப சிவிடி உடன் வழங்கப்படும்.

     

    டீசல் இயந்திரம்:

     

    பழைய கிரெட்டா

    புதிய கிரெட்டா

    இயந்திரம்

    1.4-லிட்டர்

    1.6-லிட்டர்

    1.5-லிட்டர்

    ஆற்றல்

    90பி‌எஸ்

    128பி‌எஸ்

    115பி‌எஸ்

    முறுக்கு திறன்

    220என்‌எம்

    260என்‌எம்

    250என்‌எம்

    செலுத்துதல்

    6-வேக எம்‌டி

    6-வேக எம்‌டி/6-வேக ஏ‌டி

    6-வேக எம்‌டி/6-வேக ஏ‌டி

    • பழைய கிரெட்டா இரு இயந்திர விருப்பங்களுடன் கிடைத்தது, ஆனால் தற்போது அது ஒரு இயந்திரத்துடன் மட்டுமே கிடைக்கும்.

    • இது 115பி‌எஸ் / 250என்‌எம் ஐ உருவாக்குகிறது, இது சிறிய 1.4 லிட்டர் இயந்திரத்தைக் காட்டிலும் 15பி‌எஸ் / 30என்‌எம் அதிகமாக உருவாக்குகிறது ஆனால் பெரிய 1.6 லிட்டர் அலகை காட்டிலும் 13பி‌எஸ் / 10என்‌எம் குறைவாக உருவாக்குகிறது.

    • மூன்று இயந்திரங்களும் 6 வேக எம்டியுடன் நிலையாகக் கிடைக்கின்றன.

    • புதியதில் 1.5 லிட்டர் இயந்திரம் மட்டுமே உள்ளது, பழைய மாதிரியில் 1.6 லிட்டர் மோட்டாருடன் தானியங்கி பற்சக்கர பெட்டியுடன் இருந்தது. இரண்டுமே 6 வேக முறுக்கு திறன் மாற்றி அலகு பெறுகின்றன.

    வெளிப்புறத் தோற்றம்:

    புதிய கிரெட்டாவின் பரிமாணங்களை ஹூண்டாய் இன்னும் வெளியிடவில்லை என்றாலும், அது முன்பே சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளதால் முன்பு இருந்த மாதிரியைக் காட்டிலும் பெரியதாக இருக்க வேண்டும். இரண்டாவது தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா மற்றும் க்யா செல்டோஸ் ஆகியவை ஒரே மாதிரியான எஸ்யூவிகளாகும், அவை மாறுபட்ட சிறந்த வடிவமைப்புகளைக் கொண்ட பகிரப்பட்ட தளத்துடன் உள்ளன. க்யா செல்டோஸ் மற்றும் முந்தைய தலைமுறை கிரெட்டாவின் ஒப்பீடு பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:

    பரிமாணங்கள்

    க்யா செல்டோஸ்

    முதல்-தலைமுறை ஹுண்டாய் கிரெட்டா

    நீளம்

    4315எம்‌எம்

    4270எம்‌எம்

    அகலம்

    1800எம்‌எம்

    1780எம்‌எம்

    உயரம்

    1645எம்‌எம்

    1665எம்‌எம்

    சக்கர அமைவு

    2610எம்‌எம்

    2590எம்‌எம்

     பழைய கிரெட்டா வழக்கமாகத் தோற்றமளிக்கும் மேலே-பொருத்தப்பட்ட முகப்புவிளக்குகள் அடுக்கு பாதுகாப்பு சட்டகம் மற்றும் டிஆர்எல் கள் மூடுபனியில் பிரகாசமாக எரியக்கூடிய விளக்குகள் மோதுகைத் தாங்கியால் சூழப்பட்டுள்ளது. மறுபுறம், புதிய கிரெட்டாவில், மூன்று பகுதி டிஆர்எல் மற்றும் மோதுகைத் தாங்கியில் பொருத்தப்பட்ட எல்இடி படவீழ்த்தி முகப்புவிளக்குகளுடன் முழுமையாகத் தோற்றமளிக்கிறது. முன்பக்கத்தில் மைய நிலை அடுக்கு பாதுகாப்பு சட்டகம் சமீபத்திய மாற்றத்தில்  எடுக்கப்படுகிறது, இது வென்யூ போன்று தோற்றமளிக்கிறது.

    பக்கவாட்டு அமைவுகள் உடல் பரிமாணங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது, குறிப்பாக மேற்புற அமைப்பில், ஆனால் மேற்கூரை சாய்வாகத் தோன்றும் வகையில் வெள்ளி நிற அலங்காரங்களுடன் ஒரு பெரிய சி-பில்லரை கொண்டுள்ளது. பக்கவாட்டு அமைப்புகள் முக்கிய மடிப்பு கோடுகள் மற்றும் பேனல்களுடன் இருக்கிறது. இது மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 17 அங்குல இரட்டை-தொனி உலோக சக்கரங்களின் தொகுப்பிலும் பயணம் செய்கிறது.

    புதிய கிரெட்டாவின் அடிப்படை வடிவமைப்பு தீம் பின்புறத்திலும் தெரியும். இது பிளவுபட்ட பின்புற விளக்குகளைப் பெறுகிறது, அங்கு எல்இடி சிறிய டிஆர்எல் களின் முன் அமைப்பைப் பிரதிபலிக்கிறது. இது உரிமத் தட்டுக்கு மேலே பொருத்தப்பட்ட தடைக்கருவி விளக்கையும் கொண்டுள்ளது. முதல் முறையாக, கிரெட்டா முகப்பு மற்றும் பின்புற விளக்குகளுக்கு எல்இடி விளக்குகளைப் பெற்றுள்ளது, மேலும் அவை நிச்சயமாக எஸ்யூவிக்கு அதிக வடிவமைப்புகளைச் சேர்க்கின்றன.

     உட்புற தோற்றம்:

    இது ஒரு தலைமுறை மாற்றம் என்பதால், புதிய கிரெட்டா மறுவடிவமைப்பு செய்யப்பட்ட உட்புற அமைவைப் பெற்றுள்ளது. எஸ்யூவியின் உட்புறத் தோற்றத்தை ஹூண்டாய் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எவ்வாறாயினும், கிரெட்டாவின் எக்ஸ்போவில் காட்சிப்படுத்திய போது அதைப் பற்றிய ஒரு காட்சியைப் பெற முடிந்தது. புதிய தட்டையான-அடிப்புறம் கொண்ட திசைதிருப்பி மற்றும் பெரிய தொடுதிரை ஆகியவை மிக முக்கியமான சிறப்பம்சங்கள் ஆகும். இது பழைய கிரெட்டாவில் 7 அங்குல அலகுக்குப் பதிலாக 10.25 அங்குல அலகு என்று இருக்கிறது. மைய வசதி தளவமைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. பழைய கிரெட்டாவில் ஏ‌சி காற்றோட்ட அமைப்பு ஒளிபரப்பு அமைப்பைச் சுற்றி இருக்கிர்து, புதிய கிரெட்டாவில், அவை திரைக்கு மேலே பொருத்தப்பட்டுள்ளன. 

    சிறப்பம்சங்கள்: 

    கிரெட்டா எப்போதும் அதிக அளவிலான சிறப்பம்சங்களை அளித்து வருகிறது. நிலையான 6 காற்றுப்பைகள், சூரியஒளி திறப்பு மேற்கூரை, காற்றோட்டமான இருக்கைகள் மற்றும் பின்புற ஏசி காற்றோற்ட அமைப்புக் கொண்ட தானியங்கி முறை காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றில், 2020 கிரெட்டா மின்னணு முறை வாகனத்தை நிறுத்த உதவும் தடைகருவி அமைப்பு மற்றும் வெளிப்புற காட்சிகளைப் பார்க்கக்கூடிய சூரிய ஒளி திறப்பு மேற்கூரை ஆகியவற்றைப் பெறுகிறது. இது ப்ளூலிங்க் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம், சிறிய விளக்குகள் மற்றும் டிஜிட்டல் கருவித் தொகுப்புடன் 10.25 அங்குல ஒளிபரப்பு அமைப்பையும் கொண்டுள்ளது.

    அறிமுகம் & விலை:

    ஹூண்டாய் 2020 கிரெட்டாவை மார்ச் 2020 இல் அறிமுகம் செய்யும், அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவு விரைவில் தொடங்கப்பட வேண்டும். விலை ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 17 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸ், டாடா  ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவைகளுக்குத் தொடர்ந்து போட்டியாக இருக்கும்.

    was this article helpful ?

    Write your Comment on Hyundai கிரெட்டா 2020-2024

    5 கருத்துகள்
    1
    A
    ankush soni
    Sep 12, 2020, 4:33:32 PM

    Dear seltos has very rigid suspension it doesn't feel smooth. There is also sound Inside the cabin

    Read More...
      பதில்
      Write a Reply
      1
      p
      partha pratim mondal
      Feb 24, 2020, 12:20:11 PM

      I want to booking this Car. What should I do?

      Read More...
        பதில்
        Write a Reply
        1
        H
        hitesh kumar
        Feb 11, 2020, 10:23:24 AM

        super car 2020 creta

        Read More...
          பதில்
          Write a Reply

          explore மேலும் on ஹூண்டாய் கிரெட்டா 2020-2024

          கார் செய்திகள்

          • டிரெண்டிங்கில் செய்திகள்
          • சமீபத்தில் செய்திகள்

          டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

          • லேட்டஸ்ட்
          • உபகமிங்
          • பிரபலமானவை
          ×
          We need your சிட்டி to customize your experience