2020 ஹூண்டாய் கிரெட்டா: நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
published on பிப்ரவரி 07, 2020 02:16 pm by sonny for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 35 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதிகாரப்பூர்வமாக முன் காட்சி செய்யப்பட்டு சர்வதேச அளவில் முன்னோட்டமிடப்பட்ட புதிய கிரெட்டாவானது இந்தியாவில் தன்னுடைய அறிமுகத்திற்குத் தயாராக இருக்கின்றது
இரண்டாவது தலைமுறையான ஹூண்டாய் கிரெட்டா ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் இந்தியாவில் அறிமுகமாகும். இது சீன-சிறப்பம்ச கிரெட்டாவைப் போலவே இருக்கக்கூடும் என்றாலும், ஹூண்டாய் இந்தியாவில் இன்னும் வரவிருக்கும் எஸ்யூவிக்கான முன் காட்சியை வெளியிட்டுள்ளது. புதிய 2020 கிரெட்டாவைப் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய முதல் 5 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
அனைத்து புதிய வெளிப்புற வடிவமைப்பு
2020 கிரெட்டா அதனுடைய முந்தைய அம்சங்களுடன் புதிய வெளிப்புற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஹூண்டாயின் அடுக்கு பாதுகாப்பு சட்டகம் மற்றும் பிரிக்கப்பட்ட எல்இடி முகப்புவிளக்குகள் சமீபத்திய புதுப்பிப்புகளுடன் எல்இடி டிஆர்எல் விளக்குகளைக் கொண்டுள்ளது. பின்பக்க முனையில் இப்போது பிரிக்கப்பட்ட பின்புற விளக்குகளை பெறுகிறது மற்றும் ஒட்டுமொத்தமாக, புதிய கிரெட்டா ஸ்போர்ட்டியர் போலத் தோற்றமளிக்கிறது, இதன் அளவு நீளமாகவும் அகலமாகவும் மாறியுள்ளது. சுருக்கமாக, இது விரைவில் மாற்றம் அடைந்த மாதிரியைப் போல வரும்.
2.பிஎஸ் 6 பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரம்
ஹூண்டாய் க்யா செல்டோஸுடன் பகிரப்பட்ட அனைத்து புதிய வகை பிஎஸ்6 இயந்திரங்களுடன் கிரெட்டாவை அளிக்கும். இதன் ஆற்றல் இயக்கி விருப்பங்களில் 1.5-லிட்டர் பெட்ரோல் (115பிஎஸ் / 144என்எம்), 1.5-லிட்டர் டீசல் (115பிஎஸ் / 250என்எம்) மற்றும் 1.4-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் அலகு (140பிஎஸ் / 242என்எம்) ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் 6-வேகக் கைமுறையுடன் நிலையாக வழங்கப்படும், மேலும் ஒவ்வொரு இயந்திரமும் அதற்கென தனிப்பட்ட தானியங்கி விருப்பங்களுடன் காணப்படும் - பெட்ரோலுடன் சிவிடி, டீசலுடன் 6-வேக ஏடி மற்றும் டர்போ-பெட்ரோலுடன் 7-வேக டிசிடி போன்றவற்றைப் பெறும்.
3.புதிய உட்புற அமைப்பு
இந்திய-சிறப்பம்சத்துடன் 2020 கிரெட்டா தனது உட்புற அமைவை க்யா செல்டோஸுடன் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 10.25 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு மற்றும் கருவித் தொகுப்பில் 7 அங்குல எம்ஐடி போன்ற சிறப்பம்சங்களைப் பெறுகிறது. அளவுகள் அதிகரிப்புடன், புதிய கிரெட்டா மிகவும் அதிக இட அமைவு கொண்டதாக மாறி கூடுதலான பொருட்கள் வைக்கக் கூடிய இடத்தையும் வழங்குகிறது. எனினும், இது முன்பு இருந்த அதே 5 இருக்கைகள் கொண்ட எஸ்யூவியாக
4 கூடுதல் அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம்
புளூலிங்க் இணைக்கப்பட்ட இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு அமைப்பில் உட்பொதிக்கப்பட்ட ஒரு இசிம் உடன் கூடிய புதிய கிரெட்டாவின் சிறப்பம்சப் பட்டியலை ஹூண்டாய் வழங்கும். தொலைதூரத்திலிருந்து இயந்திர இயக்கம்-நிறுத்தம் மற்றும் உட்புறத்தை முன்பே குளிருட்டும் அமைப்பு (தானியங்கி வகைகளுடன்) போன்ற இணைய அடிப்படையிலான அம்சங்களுக்கிடையில் இடம், இயந்திர நீட்டிப்புக் காலம் மற்றும் ஓட்டுநர் தொலைவுமானி போன்ற கிரெட்டாவின் பல்வேறு அம்சங்களை நேரடியாகக் கண்காணிக்க இது அனுமதிக்கிறது. புதிய கிரெட்டா ஒரு வெளிப்புற காட்சிகளைக் காணக்கூடிய சூரியஒளி திறப்பு மேற்கூரை மற்றும் உட்கட்டமைக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5 எதிர்பார்க்கப்படும் விலைகள் & அறிமுகம்
புதிய இயந்திரங்களுடன் கூடிய புதிய கிரெட்டாவானது தற்போது அறிமுகப்படுத்தப்படும் மாதிரியைக் காட்டிலும் அதிக விலையுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மார்ச் 2020 இல் அறிமுகப்படுத்தப்படும் போது இதன் விலை ரூபாய் 9.5 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் வரை இருக்கலாம். புதிய தலைமுறை கிரெட்டா, டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்ற நடுத்தர அளவிலான எஸ்யூவிகளுடன் சேர்த்து க்யா செல்டோஸ், நிஸான் கிக்ஸ், ரெனால்ட் கேப்டூர் போன்றவற்றுடன் தொடர்ந்து போட்டியிடும்.
0 out of 0 found this helpful