• login / register

2016 வோல்க்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ ஆகியவை முறையே, ரூ.5.33 லட்சம் மற்றும் ரூ.7.70 லட்சம் விலையில் அறிமுகம்

வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019 க்கு published on பிப்ரவரி 03, 2016 10:53 am by manish

  • 6 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

தனது போலோ ஹேட்ச்பேக் மற்றும் வென்டோ சேடன் ஆகியவற்றின் 2016 ஆம் ஆண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட பதிப்பை, ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் அறிமுகம் செய்துள்ளார். இந்த கார்கள் ரூ.5.33 லட்சம் (போலோ) மற்றும் ரூ.7.70 லட்சம் (வென்டோ) என்ற விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வோல்க்ஸ்வேகனின் 2016 ஆம் ஆண்டு தயாரிப்புகளில் என்ஜின்  தொடர்பான எந்த மாற்றமும் செய்யப்படவில்லை . ஆனால் ஒரு டைனாமிக் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோ டிம்மிங் IRVM-கள், ரெயின் சென்ஸிங் வைப்பர்கள், போன்புக் / SMS வ்யூவர் மற்றும் மிரர் லிங்க் இணைப்பு உள்ளிட்ட ஒரு திரளான புதிய அம்சங்களை பெற்றுள்ளது. போலோ மற்றும் வென்டோ ஆகிய இரண்டிலும் அம்சங்களின் மேம்பாடுகள் பொதுவாக உள்ளன. இந்த மேம்படுத்தப்பட்ட அம்சங்களில் மிரர் லிங்க் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதன்மூலம் உங்கள் ஸ்மார்ட்போனின் திரையை, இன்ஃபோடெயின்மெண்ட் திரைக்கு கொண்டு வர முடியும். ஆட்டோ-டிம்மிங் IRVM உடன் ரெயின் சென்ஸர் ஒருங்கிணைந்து வருகிறது. அடுத்து வரவுள்ள இந்நிறுவனத்தின் சப்-4 மீட்டர் கச்சிதமான சேடனான அமியோவிலும், இதே அம்சங்கள் கொண்டு வரப்பட ய்ப்புள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய வோல்க்ஸ்வேகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் இயக்குனர் திரு.மைக்கேல் மேயர் கூறுகையில், “இந்திய சந்தையில் அறிமுகமானது முதல் சிறப்பான விற்பனையை கொண்ட கார்களின் வரிசையில், மேற்கண்ட வென்டோ மற்றும் போலோ ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த கூடுதல் அம்சங்களின் அறிமுகம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில், நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ரெயின் சென்ஸர் மற்றும் ஆட்டோ டிம்மிங் IRVM போன்ற அம்சங்களின் மூலம் பயணிகளுக்கு எளிமையாகவும், செளகரியமாகவும் காரை ஓட்ட முடிகிறது. எங்களின் பிராண்டில் புதிய தயாரிப்புகளின் மூலம் நம்பிக்கையின் சுவரை கட்டியெழுப்பி, இந்தியாவில் வோல்க்ஸ்வேகன் குடும்பத்தின் வளர்ச்சியை மேலும் விரிவுப்படுத்த உள்ளோம்” என்றார்.

அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, புதுப்பிக்கப்படாத வகையில் நாம் காணும் நான்கு என்ஜின் தேர்வுகளையே, போலோ தொடர உள்ளது. இந்த ஆற்றலகத் தேர்வுகள் பின்வருமாறு: 1.2-லிட்டர் MPI மற்றும் TSI (GT வகைகள்) பெட்ரோல் யூனிட்கள் மட்டுமின்றி, 1.5-லிட்டர் TDI டீசல் மில் மூலம் முறையே 88.7bhp மற்றும் 103bhp என்ற இரு டியூன்களில் வெவ்வேறு ஆற்றல் வெளியீடுகள் கிடைக்கிறது.
வென்டோ சேடனை பொறுத்த வரை, போலோ ஹேட்ச்பேக்கில் காணக் கிடைக்கும் GT-யினால் டியூன் செய்யப்பட்ட 1.5-லிட்டர் டீசல் மற்றும் 1.2-லிட்டர் பெட்ரோல் மில் ஆகியவற்றை மட்டும், இது பகிர்ந்து கொள்கிறது. ஆனால் இந்த குறிப்பிட்ட சேடனுக்காக, அது நன்றாக டியூன் செய்யப்பட்டு 103.5bhp ஆற்றலை வெளியிடும். மேலும் அதே போன்ற ஆற்றல் வெளியீடு கொண்ட ஒரு 1.6-லிட்டர் பெட்ரோல் வகையும் அளிக்கப்பட உள்ளது.

இந்த அம்சங்களின் மேம்பாடுகள் மூலம் தனது போட்டியாளர்களை, இந்த ஜெர்மன் வாகனத் தயாரிப்பாளர் எதிர்கொள்ள முடியும். மாருதி ஸ்விஃப்ட் முதல் அபார்த் புண்டோ இவோ வரையிலான ஒரு நீண்ட போட்டியாளர்களின் பட்டியலை போலோ கொண்டுள்ளது. மற்றொருபுறம் ஹூண்டாய் வெர்னா, மாருதி சியஸ் மற்றும் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹோண்டா சிட்டி ஆகிய போட்டியாளர்களை வென்டோ சேடன் எதிர்கொள்ள உள்ளது.

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது வோல்க்ஸ்வேகன் போலோ 2015-2019

Read Full News
×
உங்கள் நகரம் எது?