2016 போர்ஷே 911 காரிரா காரைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது !
konark ஆல் செப் 08, 2015 12:26 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை: பிராங்போர்ட் மோட்டார் ஷோவிற்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிக எதிர்பார்ப்போடு காத்திருந்த 2016 911 காரிரா-வை திரைமறைவில் இருந்து போர்ஷே நிறுவனம் வெளியே கொண்டு வந்துள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் புதிய ஃபிளாட் சிக்ஸ் டர்போசார்ஜ்டு என்ஜினின் இணைப்பு, ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மாற்றம் ஆகும்.
911-யில் புதிய டெயில்லைட்கள், 4-பாயிண்ட் டேடைம் ரன்னிங் லைட்களுடன் கூடிய ஹெட்லெம்ப்கள், புதியதாக வடிவமைக்கப்பட்ட அலாய்கள், மேம்படுத்தப்பட்ட கதவு கைப்பிடிகள், காரிராவின் பின்பக்கத்தை எப்போதும் இல்லாமல் கூர்மையானதாக மாற்றிய புதுப்பிக்கப்பட்ட டெயில்கேட் உடன் 4 பாயிண்ட் பிரேக் லைட்கள் ஆகிய அலங்கார அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இன்டர்கூலர்கள் மற்றும் டர்போசார்ஜர்களை குளுமைப்படுத்த உதவும் வகையில் காற்றோட்டத்தை கட்டுப்படுத்த திறந்து மூடும் வகையிலான ஆக்டிவ் ஏர்-டக்ட்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது.
தற்போது எல்லா காரிரா மாடல்களிலும், போர்ஷேவின் ஆக்டிவ் சஸ்பென்ஸன் மேனேஜ்மெண்ட் (PASM) என்ற தரமான அமைப்பை கொண்டுள்ளன. இதன் மூலம் வாகன பயணத்தை 10mm உயரம் வரை குறைக்க முடிவதோடு, அதிவேக பயணத்திலும் சிறப்பான பிடிப்பும் கிடைக்கிறது. இதேபோல புதிய-தலைமுறையை சேர்ந்த ஷாக்கர்ஸ் மூலம் பயணத்தில் சிறந்த துல்லியத்தையும், வளமான சுகத்தையும் பெற முடிகிறது.
3.0-லிட்டர் ட்வின்-டர்போ ஃபிளாட்-சிக்ஸ் பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்கும் 911 வாகனம், 6500rpm-ல் 365bhp ஆற்றலையும், 1700-5000rpm உட்பட்ட நிலையில் 450 Nm முடுக்குவிசையையும் காரிரா அளிக்கிறது. இந்நிலையில் காரிரா S-ல் அதே 3 லிட்டர் ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் மூலம் 414bhp ஆற்றலும், 500 Nm முடுக்குவிசையும் அளிக்கிறது. புதிய 911ல் ஏழு ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் ஏழு-ஸ்பீடு PDK டயல்-கிளெச் ஆட்டோமேட்டிக் ஆகியவற்றை போர்ஷே நிறுவனம் பயன்படுத்தியும், சோதித்தும் பார்த்துள்ளது.
காரிரா அதிகபட்ச வேகமாக மணிக்கு 295 கி.மீ வரை எட்டும். அதே நேரத்தில் காரிரா S அதிகபட்ச வேகமாக மணிக்கு 307 கி.மீ வரை எட்டுகிறது. புதிய காரிராவில் அதிக ஆற்றலை அளிக்கும் அம்சங்கள் இருந்தாலும், எரிபொருள் சிக்கனத்திலும் சிறப்பாக செயல்படுகிறது. பழைய மாடலை விட, புதிய என்ஜினில் சுமார் 12 சதவீதம் வரை எரிபொருள் சிக்கனம் நடைபெறுவதாக போர்ஷே நிறுவனம் உறுதி அளிக்கிறது. 911ல் பயண உயரத்தை 5 நொடியில் 40mm வரை உயர்த்திக் கொள்ளும் வகையிலான ஹைட்ராலிக்-லிஃப்டிங் ஃபங்க்ஷன் உள்ளது. மேலும் 911 டர்போ மற்றும் GT3 ஆகியவற்றில் உள்ள நான்கு-வீல் ஸ்டீயரிங் சிஸ்டத்தை, 911 காரிராவும் பெற்றுள்ளது.
புதிய 911-வின் உட்புறத்தின் முன்பகுதியில், ஆப்பிள் வழங்கியுள்ள கார்ப்ளே இணைப்பு மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு ஆகியவை உடன் தரமான நேவிகேஷன் அமைப்பை கொண்ட ஒரு 7-இன்ச் ட்ச்ஸ்கிரீன் யூனிட்டை பெற்றுள்ளது. பல புதிய மேம்பாடுகள் மற்றும் புதிய ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் ஆகியவை கொண்ட நிலையில், தேர்விற்குட்பட்ட காரிரா ஸ்போர்ட் க்ரோனோ பேக்கேஜ் மூலம் 4.2 நொடிகளில் மணிக்கு 0 – 100 கி.மீ வேகத்தை எட்ட முடிகிறது.