• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போவில், சப்-4 மீட்டர் SUV மற்றும் டக்ஸன் ஆகியவற்றுடன் 2016 ஹூண்டாய் சாண்டா பி-யும் இணைகிறது

published on ஜனவரி 18, 2016 03:01 pm by saad for ஹூண்டாய் சான்டா ஃபீ

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

கடந்தாண்டின் பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில், புதுப்பிக்கப்பட்ட சாண்டா பி-யை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டது. சில நவீன போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில், இந்த SUV-க்கு முடி முதல் அடி வரையிலான முழுமையான ஒரு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதை சர்வதேச அளவில் வெளிப்படுத்திய ஹூண்டாய் நிறுவனம், தற்போது இந்த சாண்டா பி-யை உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றில் காட்சிக்கு வைக்கிறது. ஆம், இந்தியாவில் அடுத்து நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில், டக்ஸன் மற்றும் ஒரு 4-மீட்டருக்கு உட்பட்ட SUV ஆகியவை உடன் இந்த SUV-யும் தனது பயணத்தை துவங்குகிறது.

இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை குறித்து பார்த்தால், இந்நிறுவனத்தின் சில சமீபகால கார்களில் உள்ளது போன்றே, 2016 ஹூண்டாய் சாண்டா பி-யிலும் அறுங்கோண வடிவிலான கிரில் மூலம் முழுமையடைந்த கிரோம் காணப்படுகிறது. தற்போது ஹெட்லெம்ப் கிளெஸ்டர், ஸீனன் பிராஜெக்டர் லெம்ப்கள் உடன் இணைந்து, பேக்லெம்ப்களுக்கு சற்று மேலே LED டேடைம் ரன்னிங் லைட்களை கொண்டு, சில்வர் அவுட்லைன் மூலம் மூடப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு புதிய அலாய்களின் ஜோடி மற்றும் பின்புற டெயில்லெம்ப்களில் புத்தம் புதிய LED கிராஃபிக்ஸ் ஆகியவை கவனிக்க வேண்டிய சில மாற்றங்கள் ஆகும்.

சாண்டா பி-யின் உள்புற அமைப்பியலில், இன்ஃபினிட்டி பிரிமியம் சவுண்ட் மற்றும் DAB டிஜிட்டல் ரேடியோவை இயக்கும் டச்ஸ்கிரீன் AVN சிஸ்டத்தை பெற்று தற்போது அதிக பிரிமியம் தன்மையோடு காட்சி அளிக்கிறது. இதில் உள்ள ஸ்டீரியோ சிஸ்டத்தில் 12 ஸ்பீக்கர்களை கொண்டு, 630 வாட்ஸை வெளியிடும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த SUV-யில் பின்புற பயணிகளுக்கு அதிக செளகரியம் கிடைக்கும் வகையில், இரண்டாவது வரிசை சீட்டை இழுத்து கொள்ளும் (ஸ்லைடிங்) மற்றும் மாற்றியமைக்கும் (அட்ஜெஸ்டபிள்) வசதியை கொண்டுள்ளது, இதன் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். இதை தவிர, ஹூண்டாயின் சர்வதேச அளவிலான பாதுகாப்பு தத்துவத்தை சார்ந்து அமைந்துள்ள பாதுகாப்பு அம்சங்களின் ஒரு குவியலை இந்த காரில் காணலாம். இந்த புதிய அம்சங்களின் வரிசையில், ஆட்டோனோமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் அலர்ட், மேம்பட்ட க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் நெருங்கி வரும் வாகனங்களை கண்டறியும் வகையிலான ஒரு 360 டிகிரி கேமரா, பிளைன்டு ஸ்பாட் மற்றும் திடீர் மோதலை கணிக்கும் தன்மை ஆகியவை உட்படுகின்றன.

அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, புதிய சாண்டா பி, 2.2 லிட்டர் CRDi டீசல் மோட்டார் மூலம் ஆற்றலை பெற்று, 200bhp ஆற்றலையும், 440Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இதன் பெட்ரோல் யூனிட்டில் தீட்டா II 2.4 லிட்டர் மில் அமையப் பெற்று, 187bhp ஆற்றல் மற்றும் 241Nm முடுக்குவிசையை அளிக்கிறது. மேற்கண்ட இந்த ஆற்றலகங்கள், ஒரு தரமான 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டு செயல்படுகிறது. அதே வேளையில், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்விற்குரியதாகவும் அளிக்கப்படுகிறது. ஃபோர்டு எண்டோவர் 2016 மற்றும் டொயோட்டா ஃபார்ச்யூனர் ஆகியவைக்கு எதிராக இந்த புதிய சாண்டா பி களமிறக்கப்பட உள்ளது.

மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your Comment on Hyundai சான்டா ஃபீ

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக்
    Rs.17 - 22.15 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 57 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience