• English
  • Login / Register

2016 ஹோண்டா சிவிக்: அமெரிக்க விலைகள் அறிவிப்பு

published on அக்டோபர் 21, 2015 02:14 pm by nabeel for ஹோண்டா சிவிக்

  • 13 Views
  • 87 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

2016 Honda Civic

தனது புதிய 10வது தலைமுறையை சேர்ந்த சிவிக் சேடனின் விலைப் பட்டியலை, ஹோண்டா நிறுவனம் அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. 2016 சிவிக் சேடனின் “அடி முதல் முடி வரை” ஒரு புதுமையை தாங்கிய வடிவமைப்பை கொண்டுள்ளது. ஹோண்டாவின் வரலாற்றில் முதல் முறையாக புதிய என்ஜின்களாக, அமெரிக்காவில் டர்போ என்ஜின் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிய 10வது தலைமுறை சிவிக் மாடல்களின் சீரியஸிலேயே, சிவிக் சேடன் தான் முதலாவது ஆகும். இதில் ஒரு சேடன், கூபே, அதிக-செயல்திறன் கொண்ட Si மாடல்கள், 5-டோர் ஹேட்ச்பேக் மற்றும் அமெரிக்க சந்தைக்காக முதல் முறையாக சிவிக் டைப்- R மாடல் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.

மேலும் இந்த சிவிக் சேடனில், மோதலை மட்டுப்படுத்தும் பிரேக்கிங் (கொலிஷன் மிட்டிகேஷன் பிரேக்கிங்), லோ ஸ்பீடு ஃபாலோ உடன் கூடிய ரோடு டிப்பார்ச்சர் மிட்டிகேஷன் மற்றும் அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற டிரைவர்-அசிஸ்ட்டிவ் தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இந்த 10வது தலைமுறை சிவிக்கை ஹோண்டா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டு வரலாம் என்றாலும், இப்போதைக்கு இந்த சேடனை நம் நாட்டிற்கு கொண்டு வருவது குறித்த எந்த தகவலும் இல்லை.

2.0-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட LX வகையின் விலை 18,640 அமெரிக்க டாலர்கள் (ரூ.12,12,279 லட்சம்) என்று தொடங்குகிறது. EX வகையின் விலை 21,040 அமெரிக்க டாலர்கள் (ரூ.13,68,366 லட்சம்) எனவும், 1.5 டர்போ என்ஜின் கொண்ட EX-L வகையின் விலை 23,700 அமெரிக்க டாலர்கள் (ரூ.15,41,363 லட்சம்) என்றும் துவங்குகிறது.

2016 Honda Civic Rear

இதையும் படியுங்கள்: மூடுதிரை இல்லாமல் 2016 ஹோண்டா சிவிக் உளவுப்படத்தில் சிக்கியது

இந்த கார் வெளியீட்டின் போது அமெரிக்கன் ஹோண்டா மோட்டார் கம்பெனியின் நிர்வாக துணைத் தலைவர் ஜான் மென்டல் கூறியதாவது, “இந்த 10வது தலைமுறை சிவிக் என்பது இதுவரை நாங்கள் செய்யாத, அதிக விரும்பத்தக்க சிவிக்கின் மறுசீரமைப்பு என்று எளிதாக கூறலாம். இதுவரை இல்லாத அளவில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதுமையான சிந்தனையை சிவிக் மீது புகுத்தி, அதை செயல்திறனோடு ஓட்டும் போது குதுகலம் அளிக்கும் வகையிலும், எரிபொருள் சிக்கனமாகவும், பாதுகாப்பான செயல்திறன் கொண்டதாகவும், கச்சிதமான பிரிவில் மெருகேற்றம் மிகுந்ததாகவும் உருவாக்கி, ஒரு புதிய தர நிர்ணயத்தை அமைக்க உள்ளோம்” என்றார்.

வெளிப்புற அமைப்புகள்

தாழ்ந்த மற்றும் விரிந்த பரிமாணத்தில், அதிக அத்லடிக் தன்மையோடு கூடிய அம்சங்களை 2016 சிவிக் பெற்றுள்ளது. தற்போதைய மாடலுடன் ஒப்பிட்டால், 2016 சிவிக் சேடன் ஏறக்குறைய 2 இன்ச் விரிந்தும், 1 இன்ச் தாழ்ந்தும், 1.2 இன்ச் நீளமான வீல்பேஸ்சும் கொண்டுள்ளது. மேலும் புதிய ஹோண்டா LED ஹெட்லைட்களை போன்ற புதிய சிவிக்கிலும் LED வெளிப்புற லைட்டிங், LED டே டைம் ரன்னிங் லைட்கள் மற்றும் தனித்தன்மை வாய்ந்த C-வடிவிலான LED டெயில்லைட்கள் ஆகிய அம்சங்களை பெற்றுள்ளது.

ஹோண்டா R&D அமெரிக்காஸ், மூத்த வெளிப்புற வடிவமைப்பாளர் மற்றும் சிவிக் சேடன் பிராஜக்ட் தலைவர் ஜாராடு ஹால் கூறியதாவது, “எங்கள் உலகளாவிய வடிவமைப்பு அணியின் வடிவமைப்பின் சீறும் தன்மையாக புதிய சிவிக் அமைந்துள்ளது. இந்த அதிக ஆர்வம் கொண்ட மறுசீரமைப்பில் உள்ள சக்தி வாய்ந்த அம்சங்களை குறித்து பேசவும், பின்பற்றவும் தக்கதாக ஒரு தத்ரூபமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாழ்வான மற்றும் விரிந்த பரிமாணத்தில், வீல்களை முடிந்த வரை வெளியே தள்ளப்பட்டு, சிவிக் காருக்கு சக்தி வாய்ந்த செளகரியம் கொண்ட கையாளுதலை உறுதி செய்கிறது. மேலும் இந்த காருக்கு தடித்த மற்றும் பதுங்கும் தோற்றத்தை அளித்து, ஒரு புலி பாய்வதற்கு தயாராக இருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது” என்றார்.

2016 Honda Civic Interiors

உள்புற அமைப்புகள்

இந்த 2016 சிவிக் காரில், மேம்பட்ட ஸ்மார்ட்போன் இன்டிகிரேஷன் உடன் ஒரு 7-இன்ச் ஹை-டிஃபினிஷன் டிஸ்ப்ளே ஆடியோ டச்ஸ்கீரின் அமைப்பை கொண்டுள்ளது. இந்த அமைப்பு ஆப்பிள் கார்ப்ளே-க்கு நிகரானது. இதனுடன் iOS 8.4 அல்லது பிற்காலத்தில் மற்றும் iபோன் 5 அல்லது பிற்காலத்தில் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கு நிகரானது உடன் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் உயர்ந்தது ஆகியவற்றை உள்ளடக்கி காணப்படுகிறது.

இந்த காரில் புதிய கருவிகளான ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ-அப்/டவுன் பிரேன்ட் பவர் விண்டோக்கள், ஒரு எலக்ட்ரோனிக் பார்க்கிங் பிரேக் உடன் பிரேக் ஹோல்டு, வாக்-அவே ஆட்டோ டோர் லாக்குகள் மற்றும் ஒரு மாற்றிமைக்க கூடிய டிரைவரின் தொடைக்கு உறுதுணையாக இருக்கும் வகையிலான 14 டிகிரி சாய்மானம் ஆகியவற்றை பெற்றுள்ளது. மேலும், இந்த காரில் ஒன்-பீஸ், சாஃப்ட்-டச் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், புதிய முழு-கலர் TFT சென்டர் மீட்டர், ஒரு சென்டர் கன்சோல் உடன் பியனோ பிளேக் பினிஷ் மற்றும் ஹை-கன்ஸ்டிரஸ்ட் சில்வர் பிசில், ஒரு LED ஷிஃப்ட் இன்டிகேட்டர் மற்றும் LED ஓவர் ஹேட் லைட்டிங் ஆகியவை காணப்படுகிறது. EX மற்றும் உயர் வகைகளில், லேதர் ஷிஃப்ட் பூட் காணப்படுகிறது. உயர்தர வகைகளில் இன்னும் அதிகமான பிரிமியம் அம்சங்களான, ஒரு 8-வே பவர் மாற்றத்தகுந்த டிரைவர் சீட், 4-வே பவர் முன்புற பயணியின் சீட், சிறப்பான முன்புற மற்றும் பின்புற சீட்கள், சிறப்பான பக்கவாட்டு மிரர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ஹோண்டா BR-V நிறத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது

என்ஜின்

2016 சிவிக் சேடனில் இரு வகையான புதிய என்ஜின்களை காண முடிகிறது. சிவிக் சேடன் LX மற்றும் EX வகைகளை, ஒரு 2.0-லிட்டர், 16-வால்வு, DOHC i-VTEC 4-சிலிண்டர் மோட்டார் மூலம் இயக்கப்பட்டு, 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஒரு CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. EX-T, EX-L வகைகள் மற்றும் டூரிங் வகைகளில் 1.5-லிட்டர், டையரேக்ட்-இன்ஞ்சக்ட் மற்றும் டர்போசார்ஜ்டு 16-வால்வு DOHC இன்லைன்-4 என்ஜின் மூலம் இயக்கப்பட்டு, ஒரு ஆட்டோமேட்டிக் CVT உடன் பொருத்தப்பட்டுள்ளது.

பாடி மற்றும் சேசிஸ்

புதிய சிவிக் உருவத்தில் பெரியதாக இருந்தால் கூட, 30 கிலோ எடை குறைவாகவே உள்ளது. மேலும் 58 சதவீதம் கேபின் ஏர்லீக் குறைவாக ஏற்படுகிறது. இதற்காக ஒரு ஃபிளெஸ்-மவுண்ட் அகவுஸ்டிக் கிளாஸ் விண்டுஷீல்டு, இறுக்கமாக மூடப்பட்ட என்ஜின் கம்பார்ட்மெண்ட் மற்றும் ட்ரிப்பிள்-சீல்டு கதவுகள் ஆகிய பிரிமியம் நோஸ்-ரிடியூஸிங் அம்சங்களை கொண்டுள்ளது.

2016 Honda Civic Transmission

இதையும் படியுங்கள்:

  • 10வது தலைமுறை சிவிக் சேடனை ஹோண்டா வெளியிடுகிறது
  • இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் BR-V-யை இந்தோனேஷியாவில் மீண்டும் ஹோண்டா காட்சிக்கு வைக்கிறது
வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Honda சிவிக்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience