• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    2016 செவர்லே க்ரூஸ் ரூ. 14.68 லட்சம் விலையில் அறிமுகம்

    konark ஆல் பிப்ரவரி 01, 2016 10:26 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    15 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியா 2016 செவர்லே க்ரூஸ் காரை ரூ.  14.68 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ,டெல்லி ) என்ற  விலையில் அறிமுகம் செய்துள்ளது.  ஓரங்களில் சற்று வளைவாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள முன்புற க்ரில் ,  LED பகல் நேரமும் ஒளிரும் (DRL) பொருத்தப்பட்ட பாக் லேம்ப்ஸ் ஆகிய சில வெளிப்புற மாற்றங்கள் நன்கு கண்ணில் படுகிறது . முகப்பு விளக்குகள் எந்த விதமான மாற்றத்தையும் பெறவில்லை. புதிய ஸ்கிர்ட்ஸ் முன்புற பம்பருடன் சேர்க்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாயிலர்கள் பூட் பகுதியுடன் சேர்க்கப்பட்டுள்ளது.

    செவேர்லே ட்ரெயில்ப்ளேசர் வாகனங்களில் உள்ளது போன்ற 7 அங்குல MY – LINK (மை - லிங்க்) இன்போடைன்மென்ட் அமைப்பு இந்த புதிய க்ரூஸ் கார்களில் இடம் பெற்றுள்ளது. இந்த அமைப்பில் இன்டர்நெட் ரேடியோ  செயல்பாடு ( ச்டிசர் ஸ்மார்ட் ரேடியோ )  வசதிகளும் உள்ளது. இவை தவிர  க்ரேஸ்நோட் மற்றும் SIRI ஐஸ் ப்ரீ கம்பேடபிளிடி அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. ப்ளுடூத் , AUX ,USB கனக்டிவிடி அம்சங்களும் இந்த இன்போடைன்மென்ட் அமைப்பில் இடம் பெற்றுள்ளது.

    166 PS சக்தி மற்றும் 380Nm அளவுக்கு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தற்போதய க்ரூஸ் கார்களில் பொருத்தப்பட்டிருந்த அதே 2.0 லிட்டர் VCDi  டீசல் என்ஜின் தான் மாற்றம் ஏதுமின்றி  இந்த புதிய க்ரூஸ் கார்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.  6 - வேக மேனுவல் மற்றும் 6 - வேக ஆட்டோமேடிக் என்று இரண்டு வகையான ட்ரேன்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் இந்த க்ரூஸ் வெளியிடப்பட்டுள்ளது.  ஆட்டோமேடிக் வேரியன்ட் லிட்டருக்கு 14.81 கி.மீ அளவுக்கும் ,  மேனுவல் வேரியன்ட் 17.9 கி.மீ அளவுக்கும் மைலேஜ் தரும் என்று செவேர்லே தெரிவித்துள்ளது.

    இந்த புதிய செவர்லே க்ரூஸ் அறிமுகம் குறித்து ஜெனெரல் மோட்டார்ஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. கஹேர் காசிம் , “ ப்ரீமியன் எக்ஸகுடிவ் செடான் பிரிவில் அசத்தலான ஸ்டைலுடனும் பல புதிய அம்சங்களுடனும், இந்த பிரிவிலேயே அதிக சக்தி வாய்ந்த டீசல் என்ஜினுடனும் இந்த க்ரூஸ் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் அறிமுகப்படுத்தப் பட்டதில் இருந்தே செவேர்லே நிறுவனத்தின் மிகவும் அதிகமாக விற்பனை ஆகும் காராக க்ரூஸ் திகழ்ந்து வருகிறது.  உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை பல சர்வதேச சந்தைகளில் 3.5 மில்லியன் க்ரூஸ் கார்கள் விற்பனை ஆகி உள்ளன.  இப்போது வெளியிடப்பட்டுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட புதிய க்ரூஸ் கார்கள் தனது கம்பீரமான தோற்றத்தாலும் ,  இணைக்கப்பட்டுள்ள பல சிறபம்சங்களாலும் வாடிக்கையாளரின் மனதை கொள்ளை கொண்டதோடு ,அவர்களது வாகனத்தை இயக்கும் வசதியை பன்மடங்கு அதிகரித்துள்ளது " என்று கூறினார். 

    மேலும் வாசிக்க 

    was this article helpful ?

    Write your Comment on Chevrolet க்ரூஸ்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் சேடன் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience