2016 ஆடி A8 L 4.0T ஸ்போர்ட் அதிக ஆற்றலை பெறுகிறது
published on அக்டோபர் 28, 2015 12:36 pm by bala subramaniam for ஆடி ஏ8 2014-2019
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தியாவில், ஆடி A8 L 60 TFSI என்று அறியப்படும் காரை, அதிக ஆற்றல் கொண்டதாக 2016 ஆடி A8 L 4.0T ஸ்போர்ட் என்ற பெயரில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆடி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த 4.0 லிட்டர் V8 என்ஜின் மூலம் 430 hp என்ற நிலையில் இருந்து, சற்று அதிகமாக 450 hp ஆற்றலை அளித்து, முடுக்குவிசையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 600 Nm-யையே வெளியிடுகிறது. இந்த 4.0T ஸ்போர்ட்டில் சற்று அதிகளவிலான தடித்த முகபாவனை கொள்ளும் வகையில் பெரிய ஏர் இன்டேக்ஸ், தாழ்வான முன்பக்க பம்பர், பக்கவாட்டு பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ராக்கர் பேனல்கள் மற்றும் ஒரு மறுவடிவமைப்பை பெற்ற தாழ்ந்த பம்பர் ஆகியவை மூலம் தோற்றத்தில் கூட மாற்றத்தை காண முடிகிறது.
இந்த A8 L 4.0T ஸ்போர்ட்டின் உட்புறத்தில், வால்கோனா லேதரால் ஆன 22-வகையில் மாற்றம் செய்யக்கூடிய கச்சிதமான முன்பக்க சீட்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட்டி டைமண்ட் வரிசையிலான தையல் உடன் கூடிய வென்டிலேஷன் மற்றும் மசாஜ் செயல்பாடுகள் போன்ற தரமான எக்ஸிக்யூட்டீவ் மற்றும் ஆடம்பர பேக்கேஜ்கள் காணப்படுகிறது. மேலும் அல்கன்டாரா ஹெட்லைனர், பனோராமிக் சன்ரூஃப் மற்றும் ஒலி மெருகூட்டுதல் (அகவுஸ்டிக் கிளேஸிங்) கொண்ட விண்டோக்கள் ஆகிய தரமான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.
ஆடி இந்தியா நிறுவனம், தற்போதைய மாடலை எப்போது மேம்படுத்த போகிறது என்பது நமக்கு தெரியாது என்றாலும், இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்த இணையதளத்தோடு இணைந்திருங்கள்.
இதையும் படியுங்கள்: ஆடி S5 ஸ்போர்ட்பேக் ரூ.62.95 லட்சத்தில் அறிமுகம்
2016 ஆடி A8 L 4.0T ஸ்போர்ட் மாடலின் உபகரணங்கள் பட்டியல்:
- ஒரு மேம்படுத்தப்பட்ட 4.0T ட்வின் டர்போ V8 என்ஜின் மூலம், இதன் முந்தைய 4.0T மாடலை விட 15 hp அதிகமாக பெற்று, மொத்தம் 450 hp என்ற ஈர்க்கக்கூடிய முடுக்குவிசையை அளிக்கிறது.
- ஸ்போர்ட் ஸ்டைல் வெளிபுற அமைப்பியல்; முற்றிலும் புதிய தாழ்வான பம்பர் மற்றும் மறுவடிவமைப்பு பெற்ற பின்புற பம்பர்; அதிக முக்கியத்துவம் வாய்ந்த பக்கவாட்டு பேனல்கள்; அதிக தடித்த உருவம் மற்றும் குறைவான கிரோம் வரிகள்
- ஆல்-சீசன் டயர்கள் உடன் கூடிய தரமான 20 இன்ச் 5-இரட்டை ஸ்போக் வீல்கள்; 21 இன்ச் 5-ஆர்ம் வீல்கள் உடன் சம்மர் டயர்கள் கிடைக்கிறது.
- 22 வகையில் மாற்றக் கூடிய கச்சிதமான ஸ்போர்ட் சீட்கள் உடன் வென்டிலேஷன் மற்றும் மசாஜ் செயல்பாடுகள்
- ஹெட் அப் டிஸ்ப்ளே
- ஆடி சைடு அசிஸ்ட் உடன் ஆடி ப்ரீ சென்ஸ் ரேர்
- வால்கோனா லேதர் உட்புற அமைப்பு உடன் டைமண்ட் தையல் வரிசை
- ஆல்கன்டாரா ஹெட்லைனர்
- தரமான எக்ஸிக்யூடீவ், ஆடம்பர மற்றும் ஸ்போர்ட் ஸ்டைல் பேக்கேஜ்கள்
- பனோராமிக் சன்ரூஃப்
- ஒலி மெருகூட்டல் கொண்ட விண்டோக்கள்
படிக்க மறக்காதீர்கள்: ஆடி E-ட்ரான் குவாட்ரோ வெளியீடு
படித்து பாருங்கள்: ஆடி RS6 மற்றும் RS7 ஆகியவை செயல்திறன் கொண்ட பதிப்பை பெறுகிறது