2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் இருந்து சுடச்சுட வந்த செய்தி: சுசுகி இக்னிஸ் உலகிற்கு முதன் முறையாக அறிமுகம்
published on அக்டோபர் 28, 2015 07:49 pm by raunak for மாருதி டிசையர் 2017-2020
- 13 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி நிறுவனம், அடுத்து வரும் 5 வருடங்களில் 20 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை சமீபத்தில் அறிவித்திருந்தது. சொன்னது போலவே, மாருதி இந்த காம்பாக்ட் க்ராஸ் ஓவர் காரை, விரைவில் வெளியிடும். இந்த திட்டத்தில், புதிய பலீனோ மற்றும் S – க்ராஸ் கார்களின் அறிமுகமும் அடங்கும்.
தற்போது நடந்துகொண்டிருக்கும் 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில், சுசுகி இக்னிஸ் உலகிற்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. சுசுகி நிறுவனம், சமீபத்தில் நடந்த 2015 ஜெனீவா மோட்டார் ஷோவில் வெளியிட்ட im4 கான்செப்ட் காரின் உண்மையான ப்ரொடக்ஷன் ஸ்பெக் வெர்ஷன்தான் இந்தப் புதிய இக்னிஸ். ஜப்பானிய கார் தயாரிப்பாளர், இந்த காரின் வெளிப்புற அளவுகள் மற்றும் இஞ்ஜின் ஆப்ஷன்ஸ் தவிர மற்றெந்த விவரங்களையும் விரிவாக வெளியிடவில்லை. இந்தியாவில் இக்னிஸ் அறிமுகப்படுத்தப்படுமா என்ற கேள்வி நம் அனைவரின் மனதிலும் எழுவது இயற்கையே. இதில் சந்தேகமே இல்லை, மாருதி இக்னிஸ் நிச்சயமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தபடும், ஏனெனில், இந்த மாடலை ஒத்திருக்கின்ற மஹிந்த்ரா S101, அடுத்து வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும்.
வெளிப்புற அளவுகள்:
- நீளம் – 3700 மிமீ
- அகலம் – 1660 மிமீ
- உயரம் – 1595 மிமீ
மாருதி இக்னிஸில், நம்மால் வழக்கமான கச்சிதமான SUV பிரிவு கார்களின் அம்சங்களைக் காண முடிகிறது. அதாவது, அளவில் சிறியதாக, கம்பீரமாக நிற்கும் தோரணை, தெளிவாகத் தெரியும் சக்கர வளைவுகள் மற்றும் வீல் பேஸ்ஸில் இருந்து அதிகப்படியாக நீடிக்கப்பட்ட அளவுகள் (ஓவர்ஹாங்) இல்லாமல், கச்சிதமான SUV-இன் அமைப்போடு இருக்கிறது. இதன் முன்புறத்தில், இரண்டு முன்புற விளக்குகளையும் உள்ளடக்கிய பெரிய கிரில் பொருத்தப்பட்டிருப்பது, இதன் SUV உருவத்தை மேலும் மெருகேற்றுகிறது. A மற்றும் B பில்லர் பகுதிகள் கருப்பு வண்ணத்தில் உள்ளதால், இதன் விதானம் மிதப்பதைப் போன்ற தோற்றத்தில் உள்ளது.
பின்பகுதி இக்னிஸ், ஜப்பானிய சுசுகி ஆல்டோவை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. தனது உட்புறம் முழுவதும் பிற மாடல்களில் இருந்து பெறப்பட்ட அம்சங்களைக் கொண்ட பலீனோவைப் போல இல்லாமல், மிகவும் புதுமையாகவும் தனித்தன்மையுடன், மாருதி நிறுவனத்தின் எந்த ஒரு சமீபத்திய மாடலின் நகலிலும் இல்லாமல் இக்னிஸ் இருக்கிறது. இதன் உட்புறத்தில் சென்று பார்த்தால், டிசைன் மிகவும் எடுப்பான விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில், டச் ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் மட்டும் சிறிது வெளியே நீட்டியபடி இருக்கிறது.
இஞ்ஜின் செயல்திறனைப் பற்றி கேட்டால், சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. சுசுகியின் பிரெத்தியேக மைல்ட் ஹைபிரிட் SHVS தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட சுசுகியின் 1.2 லிட்டர் இரட்டை ஜெட் மோட்டார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் செயல்திறனை 5 வேக கையியக்க ட்ரான்ஸ்மிஷன் அல்லது CVT தானியங்கி ட்ரான்ஸ்மிஷன் மேம்படுத்தும். இந்த வாகனம் வழக்கமான 2WD அமைப்பில் வரும். எனினும், 4WD ட்ரைவ் ஆப்ஷனும் இருக்கிறது.
வாசிக்க பரிந்துரைக்கப்படுகிறது:
0 out of 0 found this helpful