• login / register

ஹோண்டா சிவிக் 10 –வது ஜெனரேஷன் தாய்லாந்தில் உளவு பார்க்கப்பட்டது

வெளியிடப்பட்டது மீது feb 17, 2016 02:37 pm இதனால் அபிஜித் for ஹோண்டா சிவிக்

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

Honda Civic Spied

ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய தலைமுறை மாடல், முதல் முறையாக ஆசியாவில் உள்ள உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் உள்ள இடம், அனேகமாக தாய்லாந்து நாடாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கென்று பிரெத்தியேகமாக, ASEAN ஸ்பெக் ஹோண்டா சிவிக் மாடல் தயாரிக்கப்படும். எனினும், இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகுமா என்பது கேள்விக் குறியாகவே இருக்கிறது. இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ரசிகர் வட்டத்தை மகிழ்ச்சிப்படுத்த, ஹோண்டா நிறுவனம் இந்த காரின் பெயரை மாற்றி இங்கே அறிமுகப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. வட அமெரிக்கர்களுக்கான ஹோண்டா சிவிக் மாடலை, கடந்த 2015 செப்டெம்பர் மாதம் இந்நிறுவனத்தினர் வெளியிட்டனர். அதைத் தொடர்ந்து, இதன் கூபே வெர்ஷனும் வெளியிடப்பட்டது. 

உளவாளிகளின் கண்களில் தென்பட்ட இந்த கார், சில்வர் நிறத்தில் பெயிண்ட் செய்யபட்டிருந்தது. மேலும், இந்த கார் முழுவதும் சில்வர் டேப் மூலம், குறுக்கும் நெடுக்குமாக கோடுகள் போடப்பட்டிருந்தது. அதே போல, இதன் ஃபாக் லாம்ப்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்திலும், காரின் பின்புறத்திலும், இந்த சில்வர் நிற டேப் ஒட்டப்பட்டிருந்தது. எனினும், இதன் முழுத் தோற்றம் எந்த விதத்திலும் மறைக்கப்படவில்லை. ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹோண்டாவின் பிரத்தியேக H-டிசைன் கான்செப்ட் கொண்ட புத்தம் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில், புதிய ஹோண்டா சிவிக் காரைத் தயாரித்துள்ளனர். 4 கதவுகளைக் கொண்ட இந்த செடானில் கையாளப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பத்தினால், வழக்கமான டி பிரிவு செடான் போல இல்லாமல் இந்த கார் மிகவும் ஸ்போர்டியாக உள்ளது. சற்றே சாய்ந்த A பில்லர் பகுதி; நேர்த்தியான பக்கவாட்டுத் தோற்றம்; சரிந்த நிலையில் உள்ள மேல்விதானம்; மற்றும் உயரமான பூட் மூடி போன்றவை அந்த புகைப்படத்தில் தெளிவாகத் தெரிகின்றன. அமெரிக்க வெர்ஷனில் உள்ள அதே டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், இதிலும் இடம்பெறுகின்றன. 

Honda Civic Spied Thailand

புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மூலம் புதிய ஹோண்டா சிவிக் இயக்கப்படும். எனினும், நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 2.0 லிட்டர் இஞ்ஜினையும் இந்நிறுவனம் ஆப்ஷனாகத் தரும் என்று தெரிகிறது. மேலும், மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் என்ற இரண்டு விதமான ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் தரப்படும். சற்றே சரிந்த நிலையில் உள்ள முகப்பு பகுதி, கூர்மையான முனைகள் கொண்ட LED ஹெட் லாம்ப்கள், C வடிவத்தில் உள்ள LED டெய்ல் லாம்ப்கள் மற்றும் சிறிய க்ரீஸ்டு பூட் பகுதி போன்றவற்றை நாம் அமெரிக்கன்-ஸ்பெக் வெர்ஷனில் பார்க்கலாம். ஆசிய வெர்ஷனைப் பொறுத்தவரை, இது அமெரிக்க வெர்ஷனில் இருந்து சற்றே மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிகிறது. விளக்குகள் மற்றும் சில உட்புற, வெளிப்புறத் தோற்றங்கள் போன்றவை மாறலாம், ஆனால் அடிப்படை வசதிகளான இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர், ஆப்பிள் கார் பிளே (CarPlay) மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ (Android Auto) போன்றவற்றில் எந்தவித மாற்றமும் இருக்காது.

மேலும் வாசிக்க : போட்டி நிலவரம் : ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் vs ஹோண்டா BR – V vs ஹயுண்டாய் க்ரேடா vs மாருதி எஸ் - க்ராஸ்

வெளியிட்டவர்

Write your Comment மீது ஹோண்டா சிவிக்

Read Full News
அதிக சேமிப்பு!
% ! find best deals on used ஹோண்டா cars வரை சேமிக்க
பயன்படுத்தப்பட்ட <CITYNAME> இல் <MODELNAME>ஐ காண்க

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

Ex-showroom Price New Delhi
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?