போட்டி நிலவரம் : ரெனால்ட் டஸ்டர் பேஸ்லிப்ட் vs ஹோண்டா BR – V vs ஹயுண்டாய் க்ரேடா vs மாருதி எஸ் - க்ராஸ்
modified on பிப்ரவரி 10, 2016 03:29 pm by sumit for ரெனால்ட் டஸ்டர் 2016-2019
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரெனால்ட் நிறுவனம் டஸ்டர் வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டுள்ளது . சுமாரான வெற்றியை இந்த வாகனம் பெற்றுள்ளது. ஆனால் இதே பிரிவில் உள்ள க்ரேடா மற்றும் எஸ் -க்ராஸ் வாகனங்களிடம் இருந்து கடும் போட்டியை இந்த புதிய டஸ்டர் சந்திக்கிறது. இந்த புதிய டஸ்டர் வாகனத்தில் 'புதியது' என்ன என்று பார்த்தால், , ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி பொருத்தப்பட்டுள்ளதை சொல்லலாம். இந்த ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்ட பின் முன்பை விட புதிய உத்வேகத்துடன் மற்ற வாகனங்களுடன் போட்டியிட இந்த 2016 டஸ்டர் தயாராக உள்ளது. இந்த பிரிவில் உள்ள ஒரு வாகனத்தை வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்திருந்தால் அதை மிகவும் எளிமையாக்கும் விதத்தில் இந்த பிரிவில் உள்ள அனைத்து வாகனங்களையும் ஒப்பிட்டு உங்களுக்கென தெளிவான ஒப்பீடு ஒன்றை அளிக்கிறோம்.
போட்டி மிக கடுமையாக உள்ள நிலையில் ,இந்த மேம்படுத்தப்பட்ட 2016 டஸ்டர் இந்த பிரிவில் காலூன்ற கடுமையாக போராடும்.. கடுமையான போட்டி என்பது இந்த டஸ்டர் வாகனத்திற்கு புதிதல்ல , ஏனெனில் அறிமுகம் ஆன நாளில் இருந்தே கடுமையான போட்டிகளை வென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்த பெருமை எப்போது இந்த டஸ்டர் வாகனங்களுக்கு உண்டு. ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் இப்போது பொருத்தப்பட்டுள்ள நிலையில் , போட்டியை இன்னும் எளிதாக இந்த வாகனங்கள் சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.