ஹோண்டா சிவிக் காரின் 10 –வது ஜெனரேஷன்: ASEAN ஸ்பெக் வெர்ஷனில் வெளிவந்தது

ஹோண்டா சிவிக் க்கு published on பிப்ரவரி 18, 2016 06:09 pm by அபிஜித்

  • 10 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

சில நாட்களுக்கு முன்பு, ஹோண்டா சிவிக் காரின் சமீபத்திய வெர்ஷன் தாய்லாந்து நாட்டில் உளவாளிகளின் கண்களில் தென்பட்டது. தற்போது, இந்த ASEAN ஸ்பெக் வெர்ஷன் முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2015 –ஆம் ஆண்டின் செப்டெம்பர் மாதத்தில் வட அமெரிக்காவில் முதல் முதலாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த காரின் கூபே வெர்ஷனும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ASEAN ஸ்பெக் மாடலைப் பொறுத்தவரை, பெரிதாக எந்தவித மாற்றங்களும் இன்றி, முன்புறத்திலும் பின்புறத்திலும் அதே LED லைட்கள் பொருத்தப்பட்டு வெளிவரவுள்ளது. சிவிக் 10 –வது ஜெனரேஷன் காரின் வெளிப்புற அமைப்புகளும் அளவுகளும், இதன் US ஸ்பெக் மாடலைப் போலவே இருக்கின்றன. எனினும், ASEAN ஸ்பெக் புதிய நிறங்களுடன் வருகிறது. இந்தப் புதிய நிறங்கள், ஆசியாவில் உள்ள மக்களைக் கவரும் விதத்தில் இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் நம்புகிறது. 

கூபே மாடலை ஒத்திருக்கும் புதிய சிவிக் மாடலின் வெளிப்புறத் தோற்றம், ஹை-ரைஸ் பூட் பகுதியில் சென்று முடிவடைகிறது. தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் கிடைக்கும் 9 –வது ஜெனரேஷன் சிவிக் மாடலுடன் ஒப்பிடும் போது, இதன் முன் பகுதியில் உள்ள பானேட் உறுதியானதாகவும், இதன் முன்புற ஹெட் லாம்ப்கள் அதிக சீற்றத்துடன் பார்ப்பது போலவும் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளியாகியுள்ள ஹோண்டாவின் சமீபத்திய கார்கள், மொபிலியோ காரைப் போல இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அல்லது BR-V காரைப் போல விரைவில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளன. ஹோண்டா நிறுவனம், தனது அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஏனைய கார்களுக்கான டீசல் வேரியண்ட்களை உருவாக்கிய பின்னரே, அவற்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அது போலவே, சிவிக் காரின் டீசல் ஆப்ஷன் தயாரிக்கப்படும் வரை, இந்தியாவில் இதை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. 

ASEAN ஸ்பெக் வெர்ஷனில் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 1.8 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் US ஸ்பெக் காரில் உள்ள 170 bhp என்ற அளவில் சக்தியை உற்பத்தி செய்யும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் போன்றவை பொருத்தப்படும். இஞ்ஜின் மாடலுக்கேற்றவாறு, இதன் வேரியண்ட்கள் 1.8 E மற்றும் RS என்று பெயரிடப்பட்டுள்ளன. அதே நேரம், ட்ரான்ஸ்மிஷனைப் பொறுத்தவரை, ஹோண்டா நிறுவனம் இந்த மாடலுக்கு மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேடிக் என்ற இரண்டு வித ஆப்ஷன்களைத் தருகிறது. 

ஹோண்டாவின் பிரத்தியேக H டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இதன் நவீன உட்புற அமைப்பை, இந்த காரை வாங்குபவர்கள் அனுபவிக்கலாம். மேலும், ஆப்பிள் கார் பிளே (CarPlay) மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ (Auto) போன்ற செயலிகளை சப்போர்ட் செய்யும் ஆர்பாட்டமான மீடியா நவ் சிஸ்டம் இதில் பொருத்தப்படும். பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப்களில், தற்போது இந்த காருக்கான முன்பதிவு ஆரம்பமாகிவிட்டதை வைத்துப் பார்க்கும் போது, விரைவில் ஹோண்டா சிவிக் ASEAN ஸ்பெக் அறிமுகமாகிவிடும் என்று தெரிகிறது. 

இந்தூரில் ஹோண்டா புதிய டீலர்ஷிப் மையத்தை தொடங்கி உள்ளது .

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா சிவிக்

Read Full News

trendingசேடன்-

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience