பியட் இந்தியா அபர்த் லீனியா கார்களை உருவாக்கி வருகிறது.
ஃபியட் லீனியா க்காக ஜனவரி 07, 2016 02:44 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதன் மூலம் தனது பிரிவில் உள்ள அனைத்து போட்டியாளர்களை விட அதிக செயல்திறன் மற்றும் சக்தி கொண்டதாக லீனியா உருவெடுக்க வாய்ப்புள்ளது.
பியட் லீனியா - பவர்ட் பை அபர்த் ( அபர்த் மூலம் சக்தியூட்டப்படுகிறது ) முதல் முறையாக வேவு பார்க்கப்பட்டது. இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய பெர்பார்மன்ஸ் ப்ரேன்டான அபர்த் ப்ரேண்டை கடந்த வருடம் 595 காம்பிடிசியோன் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அபர்த் புன்டோ மற்றும் அவெஞ்சுரா- பவர்ட் பை அபர்த் கார்களை அறிமுகம் செய்தனர். இப்போது இந்தியாவில் உள்ள இந்த அபர்த் வரிசையில் நான்காவதாக லினியா - பவர்ட் பை அபர்த் கார்கள் இணைய உள்ளன. இந்த கார்கள் முன்னதாகவே அறிமுகப்படுத்தப்படும் என்ற வதந்திகள் உலவியது. 2016 பிப்ரவரி மாதத்தில் நடக்க உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சி படுத்தப்பட உள்ள இந்த கார்கள் சுமார் ரூ. 10 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புன்டோ கார்களைப் போல் அபர்த் புன்டோவாக அறிமுகமாகாமல், அவ்வேஞ்சுரா கார்களைப் போல் பியட் லினியா - பவர்ட் பை அபர்த் என்ற பெயரில் தான் இந்த கார்கள் அறிமுகமாகின்றன. போநெட்டின் கீழ் பகுதியில் அவெஞ்சுரா காரில் எவ்வாறு அவெஞ்சுரா - பவர்ட் பை அபர்த் என்று பொறிக்கப்பட்டுள்ளதோ, அதே போல இந்த லினியா கார்களில் லினியா - பவர்ட் பை அபர்த் என்ற பொறிக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஞ்சின் செயல்திறனைப் பொறுத்தவரை, 140 hp அளவுக்கு ஆற்றலை 5,500 rpm ல் வெளியிடும் என்றும் 2000-4000 rpm ல் அதிகபட்சமாக 210 Nm அளவுக்கு டார்க்கை வெளியிடும் என்றும் தெரிகிறது. 5 - வேக மேனுவல் ( கைகளால் இயக்கக் கூடிய ) கியர் பாக்ஸ் என்ஜினுடன் இணைக்கப்படுள்ளது. லிட்டருக்கு 17 கி. மீ மைலேஜ் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு அபர்த் லினியா இல்லை என்பதால் பெரிய வெளிப்புற மாற்றங்களை காண முடியவில்லை . சக்கரத்தில் உள்ள அபர்த் ஸ்கார்பியன் அல்லாய் மட்டும் தான் குறிப்பிட்டு சொல்ல கூடிய வெளிப்புற மாற்றமாக இருக்கிறது.195/55 குறுக்களவு கொண்ட 16 அங்குல டயர்கள் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. மேலும் நமக்கு கிடைத்த படங்களில் சில மாதங்களுக்கு முன் அறிமுகமான லினியா எலிகன்ட் லிமிடெட் எடிஷன் கார்களில் உள்ளது போன்ற பின்புற ஸ்பாய்லர் மற்றும் பவர்ட் பை அபர்த் பெயர் ஆகியவற்றை தெளிவாக பார்க்க முடிந்தது. புன்டோ மற்றும் அவ்வெஞ்சுரா கார்களுக்கான கலர் ஆப்ஷன்களில் தான் இந்த புதிய லினியா கார்களும் வெளியாகும் என்றும் தெரிகிறது. உட்புறத்தைப் பொறுத்தவரை பியட் நிறுவனம் தனது டாப் - எண்டு இமோஷன் கார்களில் கார்களில் பொருத்தியுள்ள அனைத்து அம்சங்களும் இந்த புதிய லினியா கார்களிலும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க