சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாற்றியமைக்கப்பட்டுள்ள டாடா ஜிக்காவின் தோற்றம் வெற்றி பெறுமா?

published on ஜனவரி 11, 2016 10:23 am by manish

புத்தம் புது தோற்றத்தில் உள்ள ஜிக்காவை அறிமுகப்படுத்துவதன் மூலம், பல வருடங்களாக சிக்கெனப் பிடித்திருந்த தனது பழைய ஸ்டாண்டர்ட் வடிவத்தை டாடா நிறுவனம் தூக்கி எறிந்துள்ளது. ஆம், இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்த, நாம் அனைவரும் எதிர்பார்க்கும் சிறிய ரக ஹாட்ச்பேக் ஜிக்கா, இம்மாதம் 20 -ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. ஜிக்காவின் அறிமுகத்திற்கு அடுத்தே வெளிவரவுள்ள டாடாவின் க்ராஸ்ஓவர் SUV காரான டாடா ஹெக்ஸா, அடுத்த மாதம் நடக்கவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2005 ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகமான ஸோவர் (Xover) கான்செப்ட்டின் டிசைன் ஃபிலாசஃபியை இனி தயாரிக்கப்போகும் அனைத்து டாடா கார்களிலும் இந்நிறுவனம் கடைபிடிக்கும் போல தெரிகிறது. டாடாவின் ஏரியா மற்றும் ஜெஸ்ட் கார்களும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்திய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா, ஒரு வழியாக தனது கார்களின் அழகிய தோற்றத்திற்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளது. அதற்கு தகுந்தவாறு பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அடுத்து வரவுள்ள கார்களை கவர்ச்சிகரமாக உருவாக்கவுள்ளது என்பதற்கு சரியான உதாரணமாக ஜிக்கா திகழ்கிறது.

டாடாவின் டிசைன்நெக்ஸ்ட் வடிவமைப்பை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ஜிக்கா கார், அதிரடியான அழகில் மிளிர்கிறது. பேனல்களில் மீது நளினமாக செல்லும் லைன்கள் மற்றும் தேன்கூடு போன்ற வடிவத்தில் உள்ள மெஷ் பொருத்தப்பட்ட கிரில்லிற்கு மேலே சற்றே இறங்கி தொங்கிய வடிவத்தில் உள்ள பானேட் என, பல வகையில் புதுமை புகுத்தப்பட்டுள்ளது. கிரில் பகுதியின் கீழ் புறத்தில், பளீரென்று தெரியும் க்ரோமிய வேலைப்பாடு, இந்த காருக்கு உயர்அந்தஸ்த்தைக் கொடுக்கிறது. டைமண்ட் DLO, ஹ்யூமானிட்டி லைன் மற்றும் ஸ்லிங்ஷாட் லைன் போன்றவை, இந்த காருக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றன. இவை தவிர, ஸ்மோக்டு லென்ஸ் கொண்ட முப்பரிமாண ஹெட்லாம்ப்கள்; ஸ்போர்டியான கருப்பு பெசெல்; மற்றும் பின்புறத்தில் செதுக்கியத்தைப் போல இருக்கும் ஸ்பாய்லர் ஸ்பேட்கள் போன்ற அம்சங்கள் இணைந்து, இந்த காருக்கு உயர்தர வெளிப்புற தோற்றத்தைத் தருகின்றன. காரில் செல்லும் பயணிகள் வெளிப்புறத்தை நன்கு பார்க்கும் விதத்தில், விண்ட்ஷீல்ட் வைப்பர்கள் சற்று கீழே பொருத்தப்பட்டுள்ளன. சின்னச் சின்ன விஷயங்களை கூட கூர்ந்து கவனித்து, டாடா நிறுவனம் இந்த காரை கவனமாக வடிவமைத்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது.

ஜெஸ்ட்டின் மிக சாதாரணமான உட்புற அலங்காரம் போல இல்லாமல், ஜிக்காவின் உட்புறம் இளமை துள்ளும் விதத்தில் உள்ளது. ஜிக்காவின் உள்ளே, இந்நிறுவனம் ஆடம்பரத்தை அள்ளித் தெளித்துள்ளது. பாடி நிறத்திலேயே வரும் AC வெண்ட்கள் இதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. பெரும்பாலும், டாடா ஜெஸ்ட் காரில் உள்ள கருவிகளே ஜிக்காவிலும் இடம்பெற்றிருந்தாலும், சிறந்த ஜிப்பி அனுபவத்தை பயணிகளுக்கு வழங்கும் விதத்தில், இந்த கருவிகளை சரியான முறையில் மாற்றி அமைத்து உட்புற கேபின் முழுவதையும் சீரமைத்து, கவர்ச்சிகரமாக மாற்றியமைத்துள்ளது. ‘இப்படி ஒரு அருமையான காரை நீங்கள் கட்டாயம் வாங்க வேண்டும்' என்று சொல்லும் விதத்தில் இந்த கார் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது!

ஜிக்காவின் ஃபர்ஸ்ட் ட்ரைவ் வீடியோவைக் கண்டு களியுங்கள்

மேலும் வாசிக்க

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.8.95 - 10.52 சிஆர்*
புதிய வகைகள்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புதிய வகைகள்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வகைகள்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை