வோல்க்ஸ்வேகன் ஜெட்டா கார்களில் கூடுதலாக இப்போது டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் வசதி
published on ஜனவரி 25, 2016 06:29 pm by saad for வோல்க்ஸ்வேகன் ஜெட்டா
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்களது கார்களை மாறும் நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப தொடர்ந்து மேம்படுத்திய வண்ணம் வந்துள்ளது .இப்போது இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பாளர்கள் தங்களது ஜெட்டா செடான் கார்களின் உட்புறத்தை (இன்டீரியர்ஸ்) மேம்படுத்தி உள்ளது . ஜெட்டா கார்கள் கடந்த வருடம் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டு இருந்தாலும் மிகவும் முக்கியமான டச்ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட்போன்ற அம்சங்கள் போதிய அளவில் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த ஜெட்டா கார்களில் சமீபத்திய வோல்க்ஸ்வேகன் வெளியீடான பீட்டில் கார்களில் உள்ளது போன்ற டச்ஸ்க்ரீன் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய டச் ஸ்க்ரீன் அமைப்பில், முந்தைய மாடலில் இல்லாத ஏராளமான வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. சிங்கில் CD பிளேயர், ப்ளுடூத் வசதி , USB மற்றும் ஆக்ஸ் - இன் கனெக்டிவிடி மற்றும் SD கார்ட் ரீட் செய்யும் வசதி போன்றவை இந்த மேம்படுத்தப்பட்ட இன்போடைன்மென்ட் அமைப்பில் இடம் பெற்று உள்ளது. இந்த டிஸ்ப்ளேவில் அடேப்டிவ் ரிவர்ஸ் கைட்லைன் உடன் கூடிய பார்கிங் சென்சாருக்கு தேவையான காட்சிகளும் (விஷுவல்ஸ்) தெரியும். ஆனால் ரிவர்ஸ் கேமெரா பொருத்தப்படாதது ஒரு குறை. அதிலும் குறிப்பாக இந்த ஜெட்டா கார்கள் இடம் பெற்றுள்ள பிரிவில் ஏறக்குறைய அனைத்து கார்களிலும் ரிவர்ஸ் கேமெரா உள்ளது என்பது இங்கே கவனிக்கதக்கது. முந்தைய மாடலில் இருந்த 4 - ஸ்பீக்கர் / 4 – ட்வீடர் சிஸ்டம் தான் இந்த புதிய ஜெட்டா இன்போடைன்மென்ட் அமைப்பிலும் பொருத்தப்பட்டுள்ளது.
வோல்க்ஸ்வேகன் ஜெட்டாவின் மேம்படுத்தப்பட்ட (பேஸ்லிப்ட்) வெர்ஷன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, நன்கு எடுப்பாக தெரியும் வண்ணம் புதிய க்ரில், DRL உடன் கூடிய முகப்பு விளக்குகள், மற்றும் பின்புறத்தில் புதுப் பொலிவுடன் கூடிய டெயில் விளக்குகள் ஆகியவை பொருத்தப்பட்டிருந்தன. உட்புறத்தில் , இரண்டு வண்ண கலவையிலான பூச்சு , கீழ் பகுதி தட்டையாக உள்ள ஸ்டீரிங் வீல் மற்றும் 6 காற்று பைகள் (ஏயர் பேக்ஸ்), ABS, க்ரூஸ் கண்ட்ரோல் , மற்றும் படீக் ( உச்சகட்ட சோர்வு, மயக்கம் ) கண்டுபிடிக்கும் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் ஜெட்டாவில் இடம் பெற்றிருந்தன.
என்ஜின் அமைப்பை பொறுத்தவரை , முந்தைய ஜெட்டாவில் உள்ளது போன்ற TSI மற்றும் 2.0 லிட்டர் TDI எஞ்சின்கள் என்று இரண்டு வகையான என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகிறது. பெட்ரோல் வெர்ஷன் 6 - வேக மேனுவல் கியர் அமைப்புடனும், டீசல் வெர்ஷன் 6 - வேக மேனுவல் கியர் அமைப்பு மற்றும் 7 - வேக இரட்டை க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதியுடனும் வெளியிடப்பட்டுள்ளது.
வோல்க்ஸ் வேகன் நிறுவனம் எதிர் வரும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ (கண்காட்சிக்காக ) மும்முரமாக தயாராகி வருகிறது. தங்களது முற்றிலும் புதிய தயாரிப்புக்களை இந்த ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் ஏற்கனவே இந்திய சந்தையில் உள்ள தங்களது தயாரிப்புக்களில் சில பல மாற்றங்களை செய்து அவைகளையும் இந்த இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் காட்சிக்கு வைக்க உள்ளது. இந்தியாவுக்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள அமியோ செடான் தவிர மேலும் பல புதிய வாகனங்களான டிகுவான் SUV, பஸ்சாட் GTE ஹைப்ரிட் பிளக் இன் மாடல் கார்கள் இடம் பெற உள்ளன. இவைகளைத் தவிர புதிதாக அறிமுகமாகி உள்ள பீட்டில் , வெண்டோ, போலோ மற்றும் க்ராஸ் போலோ கார்களும் இந்த கண்காட்சியில் வோல்க்ஸ்வேகன் அரங்கத்தை அலங்கரிக்கும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்: வோல்க்ஸ்வேகன் கச்சிதமான சேடனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்த ஒரு ஆய்வு
0 out of 0 found this helpful