• English
  • Login / Register

Volvo C40 Recharge செப்டம்பர் 4 ஆம் தேதி அறிமுகமாகிறது

published on ஆகஸ்ட் 24, 2023 04:35 pm by shreyash for வோல்வோ c40 recharge

  • 77 Views
  • ஒரு கருத்தை எழுதுக

C40 ரீசார்ஜ் என்பது இந்தியாவில் வால்வோவின் இரண்டாவது பியூர் எலக்ட்ரிக் மாடலாகும், இது 530 கிமீ தூரம் வரை செல்லும்.

Volvo C40 Recharge

  • C40 ரீசார்ஜ் என்பது XC40 ரீசார்ஜின் எஸ்யூவி-கூபே பதிப்பாகும்

  • இது மேம்படுத்தப்பட்ட 78kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது மற்றும் 530கிமீ என்ற அதிக உலகளாவிய இணக்கமான இலகுரக வாகனங்கள் சோதனை செயல்முறை (WLTP) -உரிமை பெற்ற வரம்பை வழங்குகிறது.

  • இது 4.7 வினாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தை அதிகரிக்க செய்ய முடியும், இதன் மூலம் 408PS உடன் இரட்டை மோட்டார் AWD உள்ளது. (ஒரு காரின் இயந்திரம் நான்கு சக்கரங்களையும் நகர்த்துவதற்கு சக்தியை அனுப்பும் அமைப்பு) 

  • உள்ளே, இது 9 இன்ச் டச் ஸ்கிரீன், டிரைவர் டச் ஸ்கிரீன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளுடன் வருகிறது.

  • ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

ஜூன் 2023 இல், வால்வோ இந்தியாவிற்கான C40 ரீசார்ஜ் வெளியிட்டது. இது XC40 ரீசார்ஜ் -ன் எஸ்யூவி-கூபே பதிப்பாகும். இது இந்தியாவில் ஸ்வீடன் கார் தயாரிப்பாளரின் இரண்டாவது பியூர் எலக்ட்ரிக் மாடலாகும், இது XC40 ரீசார்ஜ் போன்ற அதே காம்பாக்ட் மாடுலர் ஆர்கிடெக்சரில் (CMA) வடிவமைக்கப்பட்து.

C40 ரீசார்ஜ் விலை விவரங்கள் செப்டம்பர் 4 ஆம் தேதி அறிவிக்கப்படும், மேலும் வால்வோ அதன் ஆர்டர் புத்தகங்களை செப்டம்பர் 5 ஆம் தேதி திறக்கும். டெலிவரிகள் அதே மாதத்தில் தொடங்கும். வழங்கப்படும் சலுகை என்ன என்பதைப் பற்றிய சுருக்கமான கண்ணோட்டத்தை பார்ப்போம்.

ஸ்போர்ட்டியர் டிஸைன்

Volvo C40 Recharge

C40 ரீசார்ஜ் அதன் உடன்பிறப்பான XC40 ரீசார்ஜ் உடன் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும், குறிப்பாக நீங்கள் முன்பக்கத்தைப் பற்றி பேசினால். மூடிய கிரில், தோரின் சுத்தியல் பாணியிலான டேடைம் ரன்னிங் லைட்டுகள் (DRL) மற்றும் பம்பர் வடிவமைப்பு மற்றும் 19-இன்ச் அலாய் வீல்கள் அதன் மெக்கானிக்கல் இணையான XC40 ரீசார்ஜ் -லிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது.

ஆனால் நீங்கள் ஃபுரொபைலை பார்க்கும் போது, C40 ரீசார்ஜ் ஒரு சாய்வான கூரையை பெற்றுள்ளது, இது XC40 ரீசார்ஜ் உடன் ஒப்பிடும்போது கூபே பாணியையும் நேர்த்தியான தோற்றத்தையும் அளிக்கிறது.

மேலும் படிக்க: 2023 Mercedes-Benz GLC vs Audi Q5, BMW X3, Volvo XC60: விலை ஒப்பீடு

வசதிகள் நிறைந்த கேபின்

Volvo C40 Recharge Interior

C40 ரீசார்ஜ் ஆனது XC40 ரீசார்ஜ் உடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறது, இதில் வழங்கப்படும் உபகரணங்களின் பட்டியலும் அடங்கும். இது 9-இன்ச் வெர்ட்டிகல்-ஓரியன்டட் டச் ஸ்கிரீன் யூனிட், 12.3 -இன்ச் டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்ப்ளே, எலக்ட்ரிக்கலி  அட்ஜஸ்டபிள் முன் இருக்கைகள் (ஹீட்டட் மற்றும் கூலிங் ஃபங்ஷன்), டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் உயர்தர ஆடியோவை வழங்கும் பிரீமியம் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.

இனி பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி பார்ப்போம். இதில், C40 ரீசார்ஜ், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், பிளைண்ட்-ஸ்பாட் மானிட்டரிங், கொலிஷன் அவாய்டன்ஸ் அண்ட் மிட்டிகேஷன், லேன் கீப்பிங் அய்ட், போஸ்ட் இம்பேக்ட் பிரேக்கிங், டிரைவர் அலர்ட் மற்றும் ரன்-ஆஃப் மிட்டிகேஷன் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் ADAS) பொருத்தப்பட்டுள்ளன.மேலும் இது ஏழு ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் ஃபங்ஷன் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெறுகிறது.

அதே செயல்திறன், அதிக ரேஞ்ச்

Volvo C40 Recharge

ஆம், வால்வோ C40 ரீசார்ஜ் ஆனது XC40 ரீசார்ஜில் இருப்பதை போல 78kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது, ஆனால் அது ஒரே மாதிரியாக இல்லை. வால்வோ ஒரு புதிய செல் சப்ளையர் மூலம் பேட்டரி பேக்கின் ஆற்றல் திறனை மேம்படுத்தியுள்ளது, மேலும் C40 ரீசார்ஜ் நேர்த்தியாகவும், ஏரோடைனமிக் -கை கவனத்தில் கொண்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது , இது 530 கிமீ அதிக ரேஞ்சை வழங்குகிறது, இது XC40 ரீசார்ஜை விட 112 கிமீ அதிகமாகும்.

அதன் டூயல் மோட்டார் செட்டப் மூலம், இது 408PS மற்றும் 660Nm ஆற்றலை கொடுக்கும், மேலும் 0-100கிமீ/மணி இலிருந்து 4.7 வினாடிகளில் வேகத்தை எட்ட முடியும். C40 ரீசார்ஜ் 150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இது பேட்டரியை 27 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை புத்துயிர் பெற செய்யும். 

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

வால்வோ நிறுவனம் C40 ரீசார்ஜ்  விலையை சுமார் ரூ.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கலாம், இது XC40 ரீசார்ஜை விட விலை அதிகமாகும். இது ஹூண்டாய் ஐயோனிக் 5 கியா EV6, மற்றும் பிஎம்டபிள்யூ i4 போன்றவற்றுடன் போட்டியிடும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volvo c40 recharge

Read Full News

explore மேலும் on வோல்வோ c40 recharge

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி இவிஎக்ஸ்
    மாருதி இவிஎக்ஸ்
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience