• English
  • Login / Register

விர்டஸ் GT -க்கு மேனுவல் ஆப்ஷனை சேர்க்கும் ஃபோக்ஸ்வேகன்

published on ஏப்ரல் 19, 2023 05:49 pm by ansh for வோல்க்ஸ்வேகன் விர்டஸ்

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

சேடானும் புதிய வண்ண விருப்பங்களைப் பெறுகிறது, அதே நேரத்தில் பெர்ஃபாமென்ஸ் சார்ந்த GT பிளஸ் கார்கள் ஓரிரு மாதங்களில் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும்.

Volkswagen To Add A Manual Option For The Virtus GT

  • 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் கூடிய GT பிளஸ் டிரிம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து DSG ஆட்டோ விருப்பமாக மட்டுமே உள்ளது.

  • அறிமுகமாக உள்ள புதிய GT பிளஸ் MT டிரிம் , "டீப் பிளாக் பேர்ல்" வண்ண ஆப்ஷனையும் பெறும்.

  • புதிய "லாவா ப்ளூ மெட்டாலிக்" வண்ணம் அனைத்து கார் வேரியன்ட்களிலும் வழங்கப்படும்.

  • ரூ.11.48 லட்சம் முதல் ரூ.18.57 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) விர்ட்டஸின் விலை தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது

அதன் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பில், வோல்க்ஸ்வேகன் இந்தியா சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட போட்டி கார்களுக்கு மத்தியில் அதன் உள்ளூர் மயமாக்கப்பட்ட தயாரிப்பு வரிசையை புதியதாக வைத்திருக்கும் அதன் திட்டங்களைக் காட்சிக்கு வைத்தது. புதிய மாற்றங்களில், விர்டஸ்ஸ் ஒரு புதிய வேரியன்ட்  மற்றும் இரண்டு புதிய வண்ண விருப்பங்களைப் பெறுகிறது. விவரங்களுக்கு வருவோம்:

விலை குறையும் GT பெர்ஃபார்மன்ஸ்

Volkswagen Virtus GT Plus Manual

GT பிளஸ் வேரியன்ட் -ஐ  மட்டுமே உள்ளடக்கிய விர்டஸின் டாப்-ஸ்பெக் பெர்ஃபார்மன்ஸ் லைன் விரைவில் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் பெறும். இந்த வேரியன்ட் கார் தயாரிப்பாளரின் 150PS, 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது விரைவில் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வரும். இந்த இணைப்பு டாப்-ஸ்பெக் விர்டஸை மிகவும் மலிவு விலையிலும், பயண ஆர்வலர்களுக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் மாற்றும்.

புத்தம்புதிய நிறங்கள்

VW Virtus Deep Black Pearl
VW Virtus Deep Black Pearl

இந்த புதிய கார்  வேரியன்டுடன், விர்டஸ் இரண்டு புதிய வண்ண விருப்பங்களைப் பெறுகிறது: டீப் பிளாக் பேர்ல், டாப்-ஸ்பெக் GT பிளஸ் டிரிமில் மட்டுமே வழங்கப்படும், அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே மற்றும் லாவா ப்ளூ மெட்டாலிக், ஸ்கோடா ஸ்லாவியாவின் வண்ணத் தட்டுகளில் சமீபத்தில் சேர்க்கப்பட்டது, அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்படும். புதிய கார் வேரியன்ட் மற்றும் இந்த புதிய வண்ணங்கள் 2023 ஜூன் மாதம் முதல் சந்தையில் கிடைக்கும்.

அம்சங்கள்

Volkswagen Virtus Cabin

GT பிளஸ் டிரிம் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வயர்லெஸ் போன் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவற்றுடன் வருகிறது. இந்த அம்சங்கள் அனைத்தும் GT பிளஸ் மேனுவல் காரிலும் வழங்கப்படும்.

மேலும் படிக்க: வோல்க்ஸ்வேகன் புதிய டைகன் GT வேரியன்ட்கள் மற்றும் சிறப்பு பதிப்புகளை விரைவில் வழங்க உள்ளது

அனைத்து பயணிகளுக்குமான சீட் பெல்ட் நினைவூட்டல், ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து புதிய அம்சம் ஸ்டாண்டர்டாக கிடைக்கும். இது தவிர, கூடுதல் அம்சம் எதுவும் இல்லை.

பவர்டிரெயின்

Volkswagen Virtus Engine

"பெர்ஃபார்மன்ஸ் லைன்" GT வேரியன்ட்கள் கார் தயாரிப்பாளரின் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினைப் பெறுகின்றன, இது 150PS மற்றும் 250Nm ஐ வெளிப்படுத்தும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, அவை விரைவில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் டிரான்ஸ்மிஷன்களின் தேர்வில் வரும். காம்பாக்ட் செடானின் மற்ற வேரியன்ட்களில் 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 115PS மற்றும் 178Nm ஐ உருவாக்குகிறது, மேலும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விலை & போட்டியாளர்கள்

Volkswagen Virtus Deep Black Pearl

GT பிளஸ் மேனுவல் கார்அதன் ஆட்டோமெட்டிக் காரை விட ரூ.1.5 லட்சம் குறைவான விலையில் இருக்கும். ரூ.11.48 லட்சம் முதல் ரூ.18.57 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும் விர்டஸ், ஹோண்டா சிட்டி,ஹூண்டாய் வெர்னா,மற்றும் ஸ்கோடா ஸ்லேவியா ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்கவும்:  வோல்க்ஸ்வேகன் விர்டஸ்ஸ் ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volkswagen விர்டஸ்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஆடி ஏ5
    ஆடி ஏ5
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • டெஸ்லா மாடல் 2
    டெஸ்லா மாடல் 2
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜூல, 2025
  • வோல்க்ஸ்வேகன் id.7
    வோல்க்ஸ்வேகன் id.7
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience