சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வோக்ஸ்வேகன் தனது இழந்த பெயரை மீண்டும் கட்டி எழுப்ப திட்டம்

sumit ஆல் டிசம்பர் 24, 2015 01:23 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
21 Views

வோக்ஸ்வேகன் நிறுவனம், தனது புகழ் மிக்க லோகோவுடன் இணைத்து முழக்கமிட்ட “தாஸ் ஆட்டோ” என்ற கோஷத்தை இத்தோடு நிறுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது. அடுத்த விளம்பர பிரச்சாரத்தில் இருந்து, இந்த கார் தயாரிப்பாளர் தனது பழைய ஸ்லோகனை கைவிட முடிவு செய்துள்ளது என்று, இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரின் அறிக்கை அதிகாரபூர்வமாக குறிப்பிடுகிறது. “தாஸ் ஆட்டோ” என்னும் ஸ்லோகனின் அர்த்தம் ‘தி கார்' என்பதாகும். 2007 -ஆம் ஆண்டு “தாஸ் ஆட்டோ” என்ற இந்த ஸ்லோகன் லோகோவுடன் இணைக்கப்பட்ட பின்பு, இந்த கார் தயாரிப்பு நிறுவனத்தின் லோகோ எங்கெல்லாம் சென்றதோ, அங்கெல்லாம் இந்த கோஷமும் இணைந்து சென்று பிரபலமானது. ஆனால், இப்போது, “எதிர்காலத்தில் எங்கல்லாம் எங்கள் லோகோ உள்ளதோ, அங்கு “வோக்ஸ்வேகன்” என்ற புதிய பிராண்ட் ஸ்லோகன் விளம்பரப்படுத்தபடும். உலகம் முழுவதும் இந்த ஸ்லோகன் விளம்பரப்படுத்தப்படும்,” என இந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விரிவான விளக்கம் அளித்தார்.

சமீபத்தில் நடந்த “டீசல்கேட்” மோசடியில் சிக்கி சின்னாபின்னமான இந்த ஜெர்மானிய கார் தயாரிப்பாளர், தனது நிலையை சீர் செய்து கொள்வதற்காகவே இத்தகைய மாற்றங்களில் இறங்கி உள்ளார் என்றே நம் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது. டீசல்கேட் மோசடி என்பது, உலகம் முழுவதும் மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இந்நிறுவனம் செய்த மோசடியை குறிக்கும் சொல்லாகும். இத்தகைய சர்வதேச மோசடி, முதலில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. டீசல் கார்களில் நேரடி சாலை பரிசோதனை நடத்திய மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்து விஞ்ஞானிகளால், இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டது. வட அமெரிக்க நாட்டில், VW நிறுவனத்தின் கார் இஞ்ஜின்களில் NOx பரிசோதனை நடைபெறும் போது, அந்த நேரத்திற்கு மட்டும் மாசுபாடு ஏற்படுத்தாதவாறு, நன்றாக செயல்பட மோசடிகள் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

டீசல்கேட் மோசடியின் விளைவுகள் மிகவும் மோசமாக இருந்தது, ஏனெனில், இந்த நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த 11 மில்லியன் கார்களை மீண்டும் பெற்றுக் கொள்ளும் நிலையில் உள்ளது. 11 மில்லியன் கார்கள் என்பதில், சுமார் 4.8 லட்ச கார்கள் அமெரிக்காவில் (2008 முதல் 2015 வரை) விற்பனை செய்யப்பட்டதாகும். அமெரிக்காவில் இதற்கான விதிமுறைகள் கடுமையாக இருப்பதால், இந்த கார் தயாரிப்பு நிறுவனத்திற்கு அதிகபட்சமாக 18 பில்லியன் அமெரிக்க டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிகிறது. தாஸ் ஆட்டோ என்ற ஸ்லோகனை உருவாக்கிய இந்நிறுவனத்தின் முன்னாள் CEO –வான மார்டின் விண்ட்டர்கார்ன், இந்த மோசடி விவகாரம் வெளியான பின் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பதை நாம் இப்போது நினைவு கூற வேண்டும்.

டீசல் கேட் மோசடிக்கு முழுப் பொறுப்பை ஏற்ற வோக்ஸ்வேகன் நிறுவனம், தற்போது தனது மக்கள் தொடர்பு கொள்கையின் படி, தனது நிகழ்வுகளை மறுவடிவத்து தனது பழைய பிம்பத்தை மாற்றி அமைக்க முயன்று கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் கருத்துக் கூறுகின்றனர். தற்போது, மக்களின் நம்பிக்கையைப் பெறுவதே இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், எளிமையை உணர்த்தும் இந்த ஸ்லோகனை எடுத்து விட இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனினும், இந்த ஸ்லோகனை என்ன செய்யப் போகிறது என்பதைப் பற்றிய விவரங்களை இந்நிறுவனம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை.

ஆதாரம்: Reuters

இதையும் படியுங்கள்

புதிய உயர் நிர்வாகத்தை வோல்க்ஸ்வேகன் நியமித்தது

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.67.65 - 73.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை