வென்டோ, போலோ ஆகியவற்றின் லிமிடட் பதிப்புகளை வோல்க்ஸ்வேகன் அறிமுகம் செய்கிறது
வோல்க்ஸ்வேகன் வென்டோ 2015-2019 க்காக அக்டோபர் 13, 2015 12:37 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்த பண்டிகை காலத்தில் வெளியிடுவதற்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனத்திடம் எந்த புதிய தயாரிப்பும் இல்லை என்பதால், மற்ற நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில், போலோ எக்ஸ்க்யூசைட் மற்றும் வென்டோ ஹைலைன் பிளஸ் LE ஆகியவற்றின் லிமிடேட் பதிப்புகளை அந்நிறுவனம் சந்தையில் அறிமுகம் செய்கிறது. ஹைலைன் MT-ல் போலோ எக்ஸ்க்யூசைட் பதிப்பில் 1.2-லிட்டர் MPI மற்றும் 1.5-லிட்டர் TDI ஆகிய வகைகளில், முறையே ரூ.5.5 லட்சம் மற்றும் ரூ.8.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கும். மற்றொருபுறம் வென்டோ ஹைலைன் பிளஸ் பதிப்பை, ரூ.9.7 லட்சம் (பெட்ரோல்) மற்றும் ரூ.10.98 லட்சம் (டீசல்) (எக்ஸ்-ஷோரூம், மும்பை) என்ற விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து கவனித்தால், 1.6-லிட்டர் MPI பெட்ரோல் மற்றும் ஒரு 1.5-லிட்டர் TDI டீசல் என்ஜினை பெற்று, ஹைலைன் 5-ஸ்பீடு மேனுவல் வகைகளின் அடிப்படையைக் கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்: 2015 வோல்க்ஸ்வேகன் வென்டோ போட்டிக்கு பொறுப்பு
போலோ லிமிடேட் பதிப்பின் அழகியல் மேம்பாடுகளில், கருப்பு நிறத்தால் சூழப்பட்ட மேற்கூரை, கார்பன் ஃபைபரால் சூழப்பட்ட ORVM-கள், கருப்பு பக்கவாட்டு பாடி மோல்டிங், டிரங்க் கார்னிஷ் மற்றும் ஸ்கஃப் பிளேட்கள் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது. உள்புறத்தில், கார்பன் ஃபைபர் வரிகளைக் கொண்ட ஒரு சென்டர் கன்சோல், புதிய சீட் கவர்கள் மற்றும் தரை விரிப்புகள் ஆகிய அம்சங்கள் உள்ளன. உபகரணங்களின் பயன்பாடாக, போலோ எக்ஸ்க்யூசைட்டில் இரட்டை முன்புற ஏர்பேக்குகள் மற்றும் ABS காணப்படுகிறது. பண்டிகை காலத்தை மனதில் கொண்டு, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ரூ.10,000 மதிப்பிலான சிறப்பு எக்ஸ்சேன்ஞ் வசதியுடன் இந்த லிமிடேட் பதிப்பை அறிமுகம் செய்து, ரூ.10,000 மதிப்பிலான லோயலிட்டி போனஸை அளிக்கிறது.
மேலும் வென்டோ சேடனில், ஒரு கருப்பு நிறத்தால் சூழப்பட்ட மேற்கூரை மற்றும் கார்பன் ஃபைபரால் சூழப்பட்ட ORVM-கள் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. பக்கவாட்டு பகுதியில், கருப்பு மோல்டிங்கை கொண்டு, உள்புறத்தில் உள்ள சென்டர் கன்சோலில் கார்பன் ஃபைபர் மூலம் முழுமையாக்கப்பட்டு, தரமான கதவு ஜன்னல்களை கொண்டுள்ளது. உபகரணங்களின் அடிப்படையில், வென்டோ சிறப்பு பதிப்பில் ஒரு டச்ஸ்கிரீன் பிளோபங்கட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் GPS நேவிகேஷன் மற்றும் விண்டோ ஷேடுகளை பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்: ஒப்பீடு: அபார்த் புண்டோ இவோ vs ஃபோர்டு ஃபிகோ vs வோல்க்ஸ்வேகன் போலோ GT