வோல்க்ஸ்வேகன் அமேயோ இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
published on பிப்ரவரி 02, 2016 02:46 pm by konark
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினர் தங்களது முதல் காம்பேக்ட் செடான் வாகனமான அமேயோ கார்களை இன்று அறிமுகம் செய்கிறது. மகாராஷ்டிரா மாநிலம், சக்கன் பகுதியில் உள்ள தங்கள் தொழிற்சாலையில் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தினர் இந்தியாவுக்கென இந்த காம்பேக்ட் செடான் கார்களை தயாரித்து உள்ளனர்.
ஏற்கனவே காம்பேக்ட் செடான் பிரிவில் உள்ள பீகோ ஆஸ்பயர், ஸ்விப்ட் டிசையர் , டாடா செஸ்ட், ஹயுண்டாய் எக்ஸ்சென்ட் மற்றும் ஹோண்டா அமேஸ் கார்களுடன் இந்த அமேயோ கார்கள் போட்டியிடும் என்று தெரிகிறது. வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தின் போலோ ஹேட்ச்பேக் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே வகை என்ஜின் இந்த அமேயோ கார்களிலும் பொருத்தப்பட உள்ளது. தற்போதய போலோ கார்கள் 74bhp அளவு சக்தி மற்றும் மற்றும் 110Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் இஞ்சின் ஆப்ஷனிலும் , 88.7bhp அளவு சக்தி மற்றும் 230Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் 1.5-லிட்டர் நான்கு - சிலிண்டர் TDI டீசல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கிறது. அமேயோ கார்களில் 1.2 லிட்டர் நான்கு - சிலிண்டர் பெட்ரோல் இஞ்சின் ஆப்ஷன் ஒன்றையும் வோல்க்ஸ்வேகன் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகை இஞ்சின் தற்போது போலோ GT TSI கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 103Bhp அளவுக்கு சக்தியை இந்த என்ஜின் வெளியிடுகிறது. அமேயோ கார்களின் ட்ரேன்ஸ்மிஷன் அம்சங்களைப் பொறுத்தவரை 5 - வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் ஏழு - வேக DSG ஆடோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் என்று இரண்டு ஆப்ஷன்கள் உள்ளது.
இம்மாதம் ஐந்தாம் தேதி தொடங்க உள்ள ஆட்டோ எக்ஸ்போவில் , வோல்க்ஸ்வேகன் நிறுவனம் , போலோ GTI, புதிய பீட்டில் ,டிகுவான் , பசாட் GTE ஆகிய வாகனங்களுடன் சேர்த்து இந்த புதிய அமேயோ கார்களையும் காட்சி க்கு வைக்க உள்ளது.
மேலும் வாசிக்க