மாருதி சுசுகியின் புதிய கச்சிதமான SUV-யின் அதிகாரபூர்வமான பெயர் விட்டாரா ப்ரீஸ்ஸா
published on ஜனவரி 12, 2016 05:35 pm by manish
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
வரும் பிப்ரவரி 5 முதல் 9 ஆம் தேதி வரை நொய்டாவில் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், அடுத்து வரவுள்ள தனது கச்சிதமான SUV-யை வெளியிடப் போவதாக, மாருதி சுசுகி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான அந்நிறுவனம், இந்த காரை ‘விட்டாரா ப்ரீஸ்ஸா’ (கிராண்ட் விட்டாரா உடன் குழப்பம் ஏற்படாமல் இருக்க) என்ற புனைப்பெயரின் கீழ் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது. இந்த வெளியீட்டு கொண்டாட்டத்தை ஒட்டினாற் போல, இந்த கச்சிதமான SUV-யின் ஒரு முதல் படத்தையும் (டீஸர்) வெளியிட்டுள்ள மாருதி, 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் நடைபெறும் வெளியீட்டிற்கு பிறகு, ஒரு சில வாரங்களில் ப்ரீஸ்ஸாவின் அறிமுகம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்த காரில் ஒரு சாய்வான ரூஃப் லைன் அம்சத்தை கொண்ட ஒரு ப்ளோட்டிங் ரூஃப், நிமிர்ந்த ஹூட், திரட்டும் பெல்ட்லைன், வட்டமான செவ்வக வடிவிலான வீல் ஆர்ச்சுகள், குறுகிய ஓவர்ஹேங்குகள், உயர் கிரவுண்டு கிளியரன்ஸ், பை-ஸீனன் பிராஜெக்டர்கள் மற்றும் கோணமான டெயில்லெம்ப்கள் உள்ளிட்டவை அழகியலின் முக்கிய அம்சங்கள் ஆகும். முன்னதாக மாருதி S-கிராஸில் கண்டது போன்ற கிரில்லில் உள்ள கிரோம் தன்மை, ப்ரீஸ்ஸாவிலும் காணப்படுகிறது.
படம் ஆதாரம்: IndianAutosBlog
காரின் வடிவமைப்பை குறித்து மாருதி சுசுகியின் சார்பாக வடிவமைப்பாளர் கூறுகையில், “சதுர வடிவ வீல் ஆர்ச்சுகள் மூலம் கிடைக்கும் சமமான விகிதம், குறுகிய ஓவர்ஹேங்க்ஸ், உயர் கிரவுண்டு கிளியரன்ஸ் மற்றும் நிமிர்ந்த ஹூட் ஆகியவை, இந்த வாகனத்திற்கு ஒரு நம்பகமான நிலையை அளிக்கின்றன. திரட்டும் பெல்ட் மற்றும் அட்டகாசமான லைன்கள், பின்புறத்தை நோக்கி மென்மையாக இறங்கி செல்லும் ரூஃப்லைன் ஆகியவை, இவ்வாகனத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தோற்றத்தை அளிக்கின்றன” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “இயற்கையாகவும், முக்கிய அம்சம் மற்றும் நிழல் என்ற இரு வகையிலும், இனிமை சேர்க்கும் விதமாக அமைந்த பாடி மேற்பரப்பை கொண்டுள்ளது. பார்த்த உடனேயே கண்டறியும் வகையிலான ப்ளோட்டிங் ரூஃப், கிரீன்ஹவுஸிற்கு மேலாக சுருட்டி வைக்கப்பட்டிருப்பது, தோற்றத்திற்கு கூடுதல் பொலிவையும், கூட்டத்தில் ப்ரீஸ்ஸாவை தனித்தன்மை கொண்டதாகவும் காட்டுகிறது” என்றார்.
இதன் உட்புறத்தை பொறுத்த வரை, முன்னதாக ஆன்லைனில் வெளியான வேவுப் பார்க்கப்பட்ட படங்களின் மூலம், இதில் மாருதியின் 7 இன்ச் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆப்பிளின் கார்ப்ளே ஆகியவை கேபினின் உள்ளே கொண்டிருக்கும் என்பதை ஒருவரால் யூகிக்க முடியும். இந்த கச்சிதமான SUV-யில் பெரும்பாலும், பெலினோ/ ஸ்விஃப்ட்/சியஸ் ஆகியவற்றில் காணப்படும் ஸ்டியரீங் வீல்லும், இந்நிறுவனத்தின் கிராஸ்ஓவரான S-கிராஸில் காணப்படும் குரூஸ் கன்ட்ரோலும் பகிர்ந்து கொள்ளப்படலாம் என்று தெரிகிறது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்த்தால், தற்போது மாருதி வாகனங்களில் இயங்கி வரும் 1.2-லிட்டர் மற்றும் 1.4-லிட்டர் பெட்ரோல் ஆற்றலகங்கள், ப்ரீஸ்ஸாவில் பொருத்தப்படலாம். இந்த கச்சிதமான SUV-யின் டீசல் மில்லில், ஃபியட்டின் 1.3-லிட்டர் DDiS மில்லை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. மாருதியின் பிரீமியம் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விட்டாரா ப்ரீஸ்ஸா விற்பனை செய்யப்பட்டு, ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திராவின் TUV300 ஆகியவற்றுடன் போட்டியிடும் வகையில் விலை நிர்ணயிக்கப்பட உள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful