விடாரா ப்ரீஸ்ஸாவின் முன் பகுதி வெளிப்பட்டது, வீடியோ உள்ளே!
published on ஜனவரி 25, 2016 06:54 pm by nabeel for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஒரு ஆட்டோ எக்ஸ்போ வெளியீட்டிற்காக காத்திருக்கும் மாருதி விட்டாரா ப்ரீஸ்ஸா, இந்திய வாகன தொழிற்துறையில் ஒரு சிறப்பான முன்னொலியை (பஸ்) உருவாக்க துவங்கியுள்ளது. இந்த இணை-கச்சிதமான (சப்-காம்பேக்ட்) SUV-க்கு வரிசையாக டீஸர்களை வெளியிட்ட மாருதியின் மார்க்கெட்டிங் திறனின் விளைவாக இந்த பலன் கிடைத்துள்ளது.
அதிகாரபூர்வமான இணையதளத்தை துவங்கிய இந்நிறுவனம், கிரில்லை பகுதியாக காட்சிப்படுத்தும் ஒரு வீடியோ டீஸரை வெளியிட்டது. இப்போது, இந்த காரின் பாடி நிலை மற்றும் முன்பக்க விபரங்களை கொண்ட ஒரு புதிய டீஸரை, மாருதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஒரு வெள்ளை திரைசீலைக்கு கீழே இது காண்பிக்கப்பட்டாலும், பாடி விபரங்களை எளிதாக கண்டறிய முடிகிறது. அடுத்து நடைபெறவுள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட உள்ள நிலையில், TUV300 மற்றும் ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் ஆகியவை உடன் போட்டியிடும். இந்த காரின் விலை நிலவரத்தை பொறுத்த வரை, இந்த பிரிவிலேயே மிகவும் விலை குறைந்ததாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெட்லைட் கிளெஸ்டரில் பிராஜெக்டர்கள் மற்றும் DRL-கள் காணப்படுகின்றன. இந்த யூனிட்டே புதியதாக தோற்றமளிப்பதால், SUV என்ற நிலையில் நல்ல விற்பனையை பெறும். பிராஜெக்டர்களை அடிகோடிட்டு செல்லும் LED DRL-கள், இவ்வாகனத்திற்கு ஒரு பிரிமியம் தோற்றத்தை அளிக்கிறது. காரில் காணப்படும் அலாய் வீல்களில், 5 ஜோடி ஒத்த ஸ்போக்குகளை கொண்டு 10 ஸ்போக் லேஅவுட்டாக சீரமைக்கப்பட்டுள்ளது. ORVM-களில் டேன் இன்டிகேட்டர்களை கொண்டுள்ள இக்கார், ஒட்டுமொத்த தோற்றத்தில் அதிகமாக TUV தன்மையோடும், குறைந்த அளவில் ஈக்கோஸ்போர்ட் போலவும் உள்ளது.
இந்த காரின் முன்பக்கத்தை ஒரு தடித்த கிரோம் ஸ்லாட் ஆக்கிரமித்து கொண்டு, கிரில்லின் நடுபகுதியில் காணப்படுகிறது. அதன் கீழே செங்குத்தான ஸ்லாட்களை பெற்று, மேலே ஒரு ரெனால்ட்டை தழுவிய டிசைனை கொண்டுள்ளது. இதில் சுசுகியின் முத்திரை தடித்ததாக உள்ளது. அதனுடன் பெரிய டேன் இன்டிகேட்டர்கள் மற்றும் ஃபேக் லெம்ப்கள் ஆகியவை அமையப் பெற்றுள்ளன. இவையெல்லாம் சேர்ந்து இந்த SUV-க்கு ஒரு ஒட்டுமொத்த தடித்த தோற்றத்தை அளிப்பதால், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.
இந்த தடித்த முன்புற முகப்பகுதிக்கு பின்னால், பெரும்பாலும் ஒரு 1.2-லிட்டர் VTVT பெட்ரோல் என்ஜினை பெற்று காணப்படலாம் என்று தெரிகிறது. டீசலை பொறுத்த வரை, தற்போது சியஸில் காணப்படும் 1.3 லிட்டர் DDiS 200 உடன் SHVS தொழிற்நுட்பத்தை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவில் இந்த கார் சாதாரண மாருதி டீலர்ஷிப்களின் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதால், இந்த காரின் மீதான அணுகல் மக்களுக்கு அதிகளவில் கிடைக்க, நல்ல ஒரு வாய்ப்பாக அமையும்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful