அறிமுகமாகும் முதல் நாளில் இருந்தே ஈகோஸ்போர்ட் மற்றும் TUV 300 வாகனங்களின் விற்பனையை விடாரா ப்ரீஸா முந்தும் என்றே தெரிகிறது.
published on ஜனவரி 25, 2016 03:06 pm by raunak for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
வெளியான பல டீஸர் படங்கள் மற்றும் தகவல்கள் மூலம் விட்டாரா ப்ரீஸா வாகனங்கள் மாருதியின் வெற்றிகரமான ஒரு தயாரிப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது! YBA சம்மந்தமான ஒரு செய்தியை டிசம்பர் மத்தியில் நாங்கள் வெளியிட்டிருந்தோம். அதில் இந்த YBA என்று கோட் நேம் ( குறியீட்டு பெயர் ) கொண்ட வாகனம் அறிமுகம் ஆகும் போது தனது பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் கூறி இருந்தோம். அந்த வாகனம் தான் இப்போது அறிமுகமாக உள்ள விடாரா ப்ரீஸா என்பது குறிப்பிடத்தக்கது. வெளியான டீஸர்களை பார்க்கையில் இந்த விடாரா ப்ரீஸா, அதன் பிரிவில் உள்ள தனது போட்டி வாகனங்களான ஈகோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா TUV 300 வாகனங்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் என்பதை வரும் பத்திகளில் பார்ப்போம்.
முதலில் தோற்றத்தைப் பற்றி பார்க்கலாம். கவர்சிகரமான தோற்றமே கூடுதல் விற்பனைக்கு முதல் தேவை ! இதற்கு பெரிய உதாரணமாக இருப்பது இந்த பிரிவில் உள்ள போர்ட் ஈகோஸ்போர்ட் கார்கள் . அறிமுகமானதில் இருந்தே தனது நேர்த்தியான தோற்றத்தினால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இந்த கார்கள். அதே போல் இப்போது இதே பிரிவில் அறிமுகமாக உள்ள இந்த விடாரா ப்ரீஸா வாகனங்களும் இந்த பிரிவு கார்களில் இல்லாத பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. நாம் வெளியான டீஸர் படங்கள் மூலம் இந்த விடாரா கார்களில் காண்ட்ரேஸ்டிங் ரூப் ( எதிர்மறையான கூரை பகுதி ) இருக்கலாம் என்று தெரிய வருகிறது. சுசுகி ஏற்கனவே தனது UK சந்தைக்கான ஸ்விப்ட் மற்றும் விடாரா கார்களில் இந்த காண்ட்ரேஸ்டிங் ரூப் கொண்ட மாடல்களை வெளியிட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த பிரிவிலேயே முதல் முறையாக பகலிலும் ஒளிரும் LED ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் ( அநேகமாக பலேனோவில் உள்ளது போன்ற பை - செனான்) மற்றும் LED டெயில் விளக்குகள் போன்ற அம்சங்களும் 16” ரப்பர் கொண்ட 5 -ட்வின்- ஸ்போக் அல்லாய் சக்கரங்களும் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
உட்புறத்தைப் பொறுத்தவரை, சுசுகியின் 7 - அங்குல ஸ்மார்ட்ப்லே இந்போடைன்மென்ட் அமைப்பு இந்த பிரிவில் முதல் முறையாக பொருத்தப்பட்டிருந்ததை ஏற்கனவே உளவு படங்களில் பார்த்து நாம் அதை பதிவு செய்திருந்தோம். மைலேஜ் விஷயத்திலும் இந்த பிரிவிலேயே அதிகப்படியான மைலேஜ் தரும் வாகனமாக விடாரா இருக்கும் என்றும் , முதல் முறையாக இந்த பிரிவு வாகனங்களில் சியஸ் மற்றும் எர்டிகா வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் டீசல் ஹைபிரிட் என்ஜின் பொருத்தப்பட்ட வாகனமாகவும் இது இருக்கும் என்றும் தெரிய வருகிறது. இவை மட்டுமில்லாமல் இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக முன்புற இருக்கை பகுதியில் இரட்டை ஏயர் பேகுகள் (காற்று பைகள் ) மற்றும் EBD உடன் கூடிய ABS அமைப்பு ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை , எவ்வாறு மாருதி நிறுவனம் பலேனோ கார்களின் விலையை அந்த பிரிவு கார்கள் அனைத்தையும் விட குறைவாக நிர்ணயம் செய்ததோ அதே போல் இந்த புதிய விடாரா கார்களின் விலையையும் வாடிக்கையாளர்களை வாங்கத் தூண்டும் வகையில் குறைவான விலையுடனே அறிமுகம் செய்யும் என்று உறுதியாக சொல்லலாம்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful