ஆட்டோ எக்ஸ்போ 2025 -நிகழ்வில் புதிய நிறுவனமான VinFast பங்களிப்பு
இரண்டு மாடல்களான VF 6 மற்றும் VF 7 ஆகியவை தீபாவளி 2025 -க்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று வின்ஃபாஸ்ட் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் நிறைய புதிய கார்களை அறிமுகப்படுத்தியது. மேலும் இது வியட்நாமிய உற்பத்தியாளருக்கு அறிமுக களமாகவும் இருந்தது. வின்ஃபாஸ்ட் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் 7 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் இரண்டு மாடல்கள் 2025 தீபாவளிக்குள் வெளியிடப்படும். முழுமையான பட்டியல் இதோ:
வின்ஃபாஸ்ட் VF 3
வியட்நாமிய கார் தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் VF 3 உலகளாவிய வரிசையில் மிகச்சிறிய கார் ஆகும். இந்தியாவில் இது MG காமெட் EV -க்கு போட்டியாக இருக்கும். பாக்ஸி வடிவமைப்பை கொண்ட சிறிய 2-டோர் EV ஆனது LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், 10-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் மற்றும் பவர் விண்டோஸ் போன்ற வசதிகளை கொண்டுள்ளது. உலகளவில் இது 43.5 PS மற்றும் 110 Nm அவுட்புட்டை கொடுக்கும் ஒரே ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் வருகிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் VF 3 மிகவும் விலை குறைவான என்ட்ரி-லெவல் EV -களில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
வின்ஃபாஸ்ட் VF 6
இந்தியாவில் வின்ஃபாஸ்ட் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள முதல் கார்களில் ஒன்றாக VF 6 இருக்கும். இது 2025 ஆம் ஆண்டு தீபாவளிக்கு முன்னதாக வெளியிடப்படும். VF 6 என்பது ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும், இது நேர்த்தியான உடல் பாணி மற்றும் 5-சீட்டர் செட்டப்பை பெறுகிறது. இது 12.9 இன்ச் டச் ஸ்கிரீன், ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) மற்றும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. இது 410 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் பேட்டரி பேக்குடன் வருகிறது.
வின்ஃபாஸ்ட் VF 7
2025 ஆம் ஆண்டு தீபாவளிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று வின்ஃபாஸ்ட் உறுதிப்படுத்திய மற்றொரு கார் வின்ஃபாஸ்ட் VF 7. இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்கள், ஆப்ஷனலான ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப் மற்றும் 450 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது. 15 இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் கண்ணாடி ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகளுடன் வரும். இது ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் கியா EV6 -க்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த எஸ்யூவி -கள்
வின்ஃபாஸ்ட் VF 8
வின்ஃபாஸ்ட் விஎஃப் 8 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. இருப்பினும் இது இந்தியாவில் வெளியிடப்படுமா என்பது உறுதியாகவில்லை. குளோபல்-ஸ்பெக் மாடல் 87.7 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதிகபட்சமாக 457 கி.மீ. பனோரமிக் சன்ரூஃப், 15.6 இன்ச் டச் ஸ்கிரீன், 11 ஏர்பேக்குகள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை கிடைக்கும். வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி -யின் விலை ரூ.60 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் VF 9
வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் காராக வின்ஃபாஸ்ட் VF 9 இருக்கும். இது 123 kWh பேட்டரி பேக்குடன் 531 கி.மீ. இது 408 PS மற்றும் 620 Nm அவுட்புட்டை கொடுக்கும் டூயல் மோட்டார்களுடன் ஆல்-வீல்-டிரைவ் செட்டப்பை பெறுகிறது. இது 11 ஏர்பேக்குகள், மேம்பட்ட இயக்கி உதவி அமைப்புகள் (ADAS), 15.6-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 14-ஸ்பீக்கர் சவுண்ட் செட்டப் உடன் வருகிறது. VF 9 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது கியா EV9 மற்றும் BMW iX ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
வின்ஃபாஸ்ட் VF e34
ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் வின்ஃபாஸ்ட் VF e34 காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா இல்லையா என்பதை கார் தயாரிப்பாளர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது 41.9 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது 319 கி.மீ ரேஞ்ச் கொண்டதாக இருக்கும். மற்றும் 150 PS எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுவும் 10-இன்ச் டச் ஸ்கிரீன், 7-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் உட்பட சிறப்பான வசதிகளுடன் வருகிறது.
வின்ஃபாஸ்ட் VF வைல்ட் கான்செப்ட்
வின்ஃபாஸ்ட் ஆனது VF வைல்டு என்ற எலக்ட்ரிக் பிக்கப் கான்செப்ட்டையும் காட்சிப்படுத்தியது. இது ஜனவரி 2024 -ல் உலகளவில் வெளியிடப்பட்டது. VF வைல்டின் சிறப்பம்சம் என்னவென்றால் பின் இருக்கைகளை மடிப்பதன் மூலம் டிரக் படுக்கையை 5 முதல் 8 அடி வரை விரிவுபடுத்த முடியும். இது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் டிஜிட்டல் அவுட்டோர் ரியர்வியூ மிரர்ஸ் (ORVMs) போன்ற வசதிகளை கொண்டதாக இருந்தது.
எந்த வின்ஃபாஸ்ட் மாடலை பார்க்க பற்றி நீங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளீர்கள்? கீழே உள்ள கமென்ட் பகுதியில் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.