சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தும் மோசடி: வோக்ஸ்வேகன் தலைமை நிர்வாக அதிகாரி -‘முடிவற்ற மன்னிப்பை’ கோரினார்; முறையான விசாரணை உறுதியாக மேற்கொள்ளப்படும் என்றார்
published on செப் 24, 2015 01:44 pm by cardekho
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
அமெரிக்காவில் வெளியான ஒரு வீடியோவில், நைட்ரஜன் ஆக்ஸைட் சோதனை (US NOx டெஸ்டிங்) மோசடிகளை வெளிப்ப்டுத்தி சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து, வோக்ஸ்வேகன் குழுவின் கார்பரேட் வலைதளத்தில், அதன் தலைமை நிர்வாக அதிகாரியான மார்டின் விண்டர்கார்ன் மன்னிப்பு கேட்டார். அவர், இந்த மோசடியின் மூலம் சுமார் 11 மில்லியன் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டார். இந்த மோசடிகளுக்கு மூல காரணம் தெரியவில்லை என்று கூறிய அவர், இந்த வழக்கு பற்றி மிகக் குறுகிய காலத்தில், முழுமையான விசாரணை வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி கூறினார்.
“தற்போது, எங்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரியவில்லை. ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே உண்மையான விடை தெரிய, அனைத்து விதமான தகவல்களையும் திரட்டி, வேகமாகவும் வெளிப்படையாகவும் அலசி ஆராய்ந்து வருகிறோம்,” என்று விண்டர்கார்ன் தனது அதிகாரபூர்வமான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை பற்றி வாடிக்கையாளர்களுக்கு உறுதியளிக்கும் போது, விண்டர்கார்ன், இந்த இஞ்ஜின்களில் உள்ள முறைகேடுகள் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அடிப்படை நோக்கத்துடன் முரண்பாடாக இருக்கின்றன. இந்த அறிக்கையில், அமெரிக்காவின் NOx சோதனையின் கோட்பாடுகளை விட அதிகமான செயல்பாட்டுதிறனை கொடுக்கும்படி மென்பொருள் தீம்பொருள் (சாஃப்ட்வேர் மால்வேர்) முறைகேடாக சோதனையின் போது பொருத்தப்பட்டுள்ளது, என்பதை அவர் திட்டவட்டமாக தெரிவித்தார்.
வோக்ஸ்வேகனின் அனைத்து துறைகள் மற்றும் ஊழியர்களையும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டுள்ளதை பற்றி, வின்டர்காம் வலியுறுத்தி கூறினார். “வோக்ஸ்வேகனின் திறம் பற்றி, பல விதமான கேள்விகள் எழுந்து கொண்டிருப்பதை நான் அறிவேன். இந்த நிலை எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு சில கருப்பாடுகளின் தவறான செயல்பாடுகளால், கிட்டத்தட்ட 6,00,000 பணியாளர்களின் கடுமையான மற்றும் நேர்மையான பணியில் சந்தேகம் கொள்வது தவறு என்று தோன்றுகிறது. எங்கள் மதிப்பிற்குரிய குழுவிற்கு இத்தகைய அவமானம் நேர்ந்திருக்கக் கூடாது”, என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
எனினும், இத்தகைய மாபெரும் முறைகேடு காரணமாக அவரது தலைமை நிர்வாக அதிகாரி பதவி பறிபோகும் என்ற தகவலை மறுத்தார். இருந்த போதும், வின்டர்காமிற்கு பதிலாக போர்ஷ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேத்யாஸ் முல்லர் இந்த பதவியை ஏற்பார் என்ற யூகங்கள் பரவி வருகின்றன.
இந்த மோசடி ஏற்கனவே இந்நிறுவனத்தின் நற்பெயரை அடியோடு சாய்த்து விட்டது. மேலும், இதன் பங்குகள் திங்கட்கிழமையில் 19 சதவிகிதம் குறைந்தது. இப்போது, அது மேலும் 17 சதவிகிதம் குறைந்துவிட்டது. இந்த மோசடியின் விசாரணை மேற்பார்வை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து தென் கொரியா வரை விரிவடைந்துள்ளது என்று அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிறுவனம் தயாரித்துள்ள ஜெட்டா, கோல்ஃப் மற்றும் ஆடி A3 ஆகிய கார்களில் உள்ள டீசல் இஞ்ஜின் மாடல்களைப் பற்றி தென் கொரியா விசாரணை செய்யும். இவற்றின் மூலம், தவறுகள் நிரூபிக்கப்பட்டால், இந்த நிறுவனம் 18 பில்லியன் டாலர் வரை அபராதத் தொகை செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.