சாம்பார் சால்ட் ஏரியில் 0-100 கி.மீ/மணி வேகத்தை எட்டிய அதிவேக காராக MG Cyberster உருவெடுத்துள்ளது
MG சைபர்ஸ்டெர் இந்தியாவில் முதல் ஆல்-எலக்ட்ரிக் 2-டோர் கன்வெர்ட்டிபிள் கார் ஆக இருக்கும். இது மார்ச் 2025 -க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 50 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
-
சிஸர் வடிவ கதவுகள், LED-ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், அம்பு வடிவ டெயில் லைட்ஸ் மற்றும் 20-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை இந்த கார் கொண்டுள்ளது.
-
உள்ளே, இது நான்கு ஸ்கிரீன்கள், ஸ்போர்ட்டியர் இருக்கைகள் மற்றும் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் TPMS ஆகியவை உள்ளன.
-
இது 510 PS மற்றும் 725 Nm -ன் இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொடுக்கும் டூயல் மோட்டார்களுடன் வருகிறது.
இந்தியாவில் எம்ஜி நிறுவனம் அதன் புதிய காரான எம்ஜி சைபர்ஸ்டர் EV -யை வெளியிட தயாராக உள்ளது. இது நாட்டில் முதல் ஆல் எலக்ட்ரிக் இரண்டு-டோர் கன்வெர்ட்டபிள் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே ராஜஸ்தானில் உள்ள சாம்பார் சால்ட் ஏரியில் மணிக்கு 0-100 கி.மீ வேகத்தில் ஓடும் கார் என்ற சாதனையை இது படைத்துள்ளது. சைபர்ஸ்டர் இந்த சாதனையை வெறும் 3.2 வினாடிகளில் செய்து முடித்தது. இது இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
MG சைபர்ஸ்டர் EV -யை பற்றி விரிவாக இங்கே பார்ப்போம்:
எம்ஜி சைபர்ஸ்டர்: ஒரு பார்வை
MG சைபர்ஸ்டர் இந்தியாவில் பிரீமியம் 'MG செலக்ட் அவுட்லெட்டுகள் மூலமாக விற்பனை செய்யப்படும். இது அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைபர்ஸ்டர் ஷார்ப்பான கட்ஸ் மற்றும் ஃபோல்டுகளை கொண்டுள்ளது. இது ஆக்ரோஷமாகவும் ஸ்போர்ட்டியாகவும் இருக்கும். முக்கிய சிறப்பம்சமாக இருபுறமும் சிஸர் டோர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது எதிர்பார்க்கப்படும் விலை பிரிவில் தனித்துவமானது. மேலும் இது LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், 20-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ட்ரை ஆரோவ் LED டெயில் லைட்ஸ் மற்றும் லைட் பார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இன்ட்டீரியரும் அதிநவீனமாக உள்ளது. மற்றும் சைபர்ஸ்டர் டாஷ்போர்டில் ட்ரை-ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது, முக்கிய விவரங்களை பார்ப்பதற்கான 7 இன்ச் ஸ்கிரீன், டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்கான 10.25-இன்ச் ஸ்கிரீன் மற்றும் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன. சென்டர் கன்சோலில் ஏசி கண்ட்ரோல்களுக்கு கூடுதல் ஸ்கிரீன் உள்ளது. மேலும் இது ஸ்போர்ட்டியரான இருக்கைகள் மற்றும் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் உடன் வருகிறது.
சைபர்ஸ்டரில் 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக்கலி ஓபன் மற்றும் ஃபோல்டபிள் ரூஃப் மற்றும் மெமரி ஃபங்ஷன் கொண்ட 6-வே எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் ஹீட்டட் சீட்கள் ஆகியவை உள்ளன.
பாதுகாப்புக்காக சைபர்ஸ்டர் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS) ஆகியவற்றுடன் வரும். லேன்-கீப் அசிஸ்ட் மற்றும் ஆக்டிவ் எமர்ஜென்சி பிரேக்கிங் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அம்சங்களும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க: Tata Nexon EV -யில் 40.5 kWh பேட்டரி பேக் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது
எம்ஜி சைபர்ஸ்டர்: எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
MG சைபர்ஸ்டர் ஆனது ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் டூயல் ஆக்ஸில் டிரைவ் உடன் வருகிறது, அதன் விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
77 kWh |
எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
2 (ஒவ்வொரு அச்சிலும் ஒன்று) |
பவர் |
510 PS |
டார்க் |
725 Nm |
WLTP கிளைம்டு ரேஞ்ச் |
443 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
இது 3.2 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தில் எட்டுகிறது. இது சாம்பார் ஏரியில் பதிவு செய்யப்பட்ட அதே வேகம் மற்றும் நேரம் ஆகும்.
MG சைபர்ஸ்டர்: எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
MG சைபர்ஸ்டர் ஆனது பேட்டரி-ஆஸ்-சர்வீஸ் (BaaS) திட்டத்துடன் இதன் விலை சுமார் ரூ. 50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேரடியாக எந்த போட்டியாளார்களும் இல்லை. BMW Z4 -க்கு ஒரு எலக்ட்ரிக் மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.