புதிய முதல் படத்தின் (டீஸர்) மூலம் ஓரளவிற்கு வெளிப்படுத்தப்பட்ட TUV300: வீடியோ இணைக்கப்பட்டுள்ளது
published on செப் 04, 2015 05:49 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய TUV300-யின் அறிமுகத்திற்கு இன்னும் 6 நாட்களே மீதமுள்ள நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு முன்னோட்டத்தை காட்ட மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த முதல் பட (டீஸர்) வீடியோவில் வாகனத்தை முழுமையாக காட்டாத நிலையிலும், சப்-4 மீட்டர் SUV-யான இந்த கச்சிதமான வாகனத்தை வாங்க விரும்புவோரின் கவனத்தை இது கட்டாயம் ஈர்க்கும். இதன்மூலம் தங்களின் கார் எவ்வளவு கடினமானது என்பதை சித்தரிக்கும் முயற்சியில், மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. போரில் பயன்படுத்தப்படும் டேங்க்கை தழுவிய வடிவமைப்பு தத்துவத்தை பெற்றதில் இருந்தே, ‘கடினம் மற்றும் ஸ்டைல்’ கொண்ட SUV என்ற அழைக்கப்பட எதுவானது. இதை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில், ‘TUV300-யை வெல்ல தேவையான கடினத்தன்மை உங்களுக்கு உண்டா’ என்ற வாசகத்தையும் சேர்த்துள்ளனர். இப்போது வெளியாகி உள்ள முதல் பட வீடியோவில், மஹிந்திரா நிறுவனம் மீண்டும் அதன் கடினத் தன்மையை குறிக்கும் வகையில், ஒரு கோட்டையின் வாசல் கதவை இடித்து தூள் தூளாக்கிக் கொண்டு வெளியே பறந்து வருவது போன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் எடுக்கப்பட்ட இடத்தை பார்க்கும் போது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக TUV300-யை மறைவு எதுவும் இல்லாத நிலையில் படமெடுக்க சிக்கிய இடத்தை ஒத்து காணப்படுகிறது.
புதிய மஹிந்திரா TUV300-யின் அறிமுகத்திற்கு முந்தைய முன்பதிவு, இந்த மாதம் 1 ஆம் தேதி துவக்கப்பட்டது. இந்த கச்சிதமான SUV-யை, mHawk80 என்ஜின் இயக்க உள்ள நிலையில், இது குவான்டோவில் உள்ள 1.5-லிட்டர் 3-சிலிண்டர் மோட்டாரின் சிறிய பதிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஒரு சப்-4m SUV என்பதால், இதன் டீசல் என்ஜினின் திறன், 1.5-லிட்டர் என்ஜினை காட்டிலும் குறைவாகவே இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிவிலேயே முதல் முறையாக TUV300-யின் சேஸ்ஸை தாங்கி நிற்கும் 17-இன்ச் ரேடியஸில் 5-ட்வின் ஸ்போக் அலாய்களைக் கொண்டு, அவற்றை சூழ்ந்து 235/65 கிராஸ்-செக்ஷன் டயர்கள் உள்ளன. TUV300-ன் உட்பகுதியில் பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தில் அமைந்த புதிய கேபினில், ஆங்காங்கே காணப்படும் சில்வர் நிறத்திலான பட்டைகளை கொண்டுள்ளது. மேலும், மல்டி-பங்க்ஷனல் ஸ்டீயரிங் வீல், கிரோமை எடுத்துக் காட்டும் வட்டங்களை பெற்ற டயல்-பாட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் கிளஸ்டர் ஆகிய அம்சங்களை இந்த காரில் காணலாம்.
0 out of 0 found this helpful