டொயோட்டா வயோஸ் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை!
modified on டிசம்பர் 23, 2015 03:05 pm by manish for டொயோட்டா விலோஸ்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், தனது C-பிரிவு சேடனான டொயோட்டா வயோஸ் காரை, டொயோட்டா நிறுவனம் காட்சிக்கு வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் மூலம் இப்பிரிவிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழையும் டொயோட்டா நிறுவனம், போட்டியாளர்களான மாருதி சியஸ், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் பல தயாரிப்புகளுடன் போட்டியிட உள்ளது. IAE 2016-ல் காட்சிக்கு வைக்கப்பட்ட பிறகு, இந்திய சாலைகளில் வயோஸ் விரைவில் களமிறங்குவதை காணலாம். எனவே இந்த ஜப்பானிய சேடனை குறித்த விபரங்களை அறிந்தவர்களாக இருக்கும் வகையில், அதை குறித்து அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்களை தொகுத்து அளித்துள்ளோம்.
அளவு விஷயங்கள்:
டொயோட்டா வயோஸ் காரின் நீளம் 4,410mm, அகலம் 1,700 mm மற்றும் உயரம் 1,475 என்று அமைந்து, இதன் போட்டியாளராக ஹூண்டாய் வெர்னா உடன் ஒப்பிடும் போது சிறிய காராக உள்ளதை அறியலாம். வெர்னாவின் அகலம் மற்றும் உயரம் ஆகியவை வயோஸை ஒத்திருந்தாலும், நீளம் அதிகமாக காணப்படுகிறது. வயோஸின் ஒட்டுமொத்த அளவுகளை வைத்து பார்க்கும் போது, சியஸ் கூட மேற்கொள்கிறது. எனவே பயணிகளுக்கான கேபின் இடவசதி விஷயத்தில் வயோஸ் சமரசம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால் இது கூட ஒரு யூகத்தின் அடிப்படையில் அமைந்த செய்தி எனலாம். ஏனெனில் கேபின் இடவசதி என்பது பயனுள்ள உட்புற தகவமைப்புகளை பொறுத்தே அமையும். எனவே இதனுடன் போட்டியிடும் கார்களின் வெளிப்புற பேனல்களின் அமைப்புகளை முன்னிட்டு, இந்த பெரிய அளவுகளை அவை பெற்றிருக்க கூடும்.
ஆற்றல் மற்றும் நடைமுறை தன்மை:
எதியோஸில் நாம் காண்பது போலவே, இந்தியாவிற்கான மாதிரி வாகனமான வயோஸ் காரும், ஒரு 1.5 பெட்ரோல் யூனிட் மூலம் ஆற்றலை பெற வாய்ப்புள்ளது. மேலும் கொரோலா ஆல்டிஸ் காரிடம் இருந்து 1.4 லிட்டர் D-4D டீசல் மில்லை, இது பகிர்ந்து கொள்ளக் கூடும். தாய்லாந்திற்காக வயோஸ் வகையில், ஒரு 4-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனை பெற்றிருக்கும். நகர்புற டிரைவிங் செய்ய மிகவும் எளிமையாக அமையும் வகையில், இந்திய மாடலிலும் இதே ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.
ஒரே விலையில் கிடைக்கும் நல்ல காரியங்கள்:
இந்தியாவிற்கு அளிக்கப்பட உள்ள டொயோட்டா வயோஸில், ABS, இரட்டை ஏர்பேக்குகள், ஒரு ஸ்மார்ட் என்ட்ரி சிஸ்டம், பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், ஒரு புஸ் ஸ்டார்ட் சிஸ்டம், ஒரு திருட்டு தடுப்பு அமைப்பு, ஒரு இம்மொபைலைசர் மற்றும் ஒரு ஈக்கோ மீட்டர் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும் என்று சிலர் கூறி ஆறுதல் அளிக்கின்றனர். இந்த காரின் விலை நிர்ணயம், ஒப்பீட்டிற்கு ஏற்ற வகையில் ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சத்திற்கு உட்பட்டு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்கவும்
- 2016 டொயோடா இன்னோவா இந்தோனேசியாவில் அறிமுகமானது
- டொயொட்டோ நிறுவனம்: இரண்டாவது தேசிய விற்பனைத்திறன் போட்டியை நடத்தியது
* User Name : Sonika * City : New Delhi Please Enter city name * Car News Category : Nissan Categories Are Comma Saperated :(For Example: BudgetDekho News :- 2015 and Car News:- Maruti,Suzuki,Auto-Expo,Average) Forum Url : Car news gallery. Upload Car Image Water Mark : Upload your car image :Choose File Save Car News About UsFAQsAdvertise with UsCareersFeedbackCustomer CarePrivacy PolicyTips And AdviceContact UsTerms and ConditionsCar AccessoriesForum Download CarDekho Mobile Apps Android App iOS App Windows App Copyright 2008-2015 Powered By Girnar Software Pvt. Ltd. All Rights Reserved.Follow us:
0 out of 0 found this helpful