இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்திய கார்கள் ஏலத்தை துவக்குகிறது டொயோட்டா
manish ஆல் ஆகஸ்ட் 11, 2015 10:12 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை ஏலம் விடும் வியாபாரத்தை உலகமெங்கும் நடத்தி வரும் டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன், இந்தியாவில் தனது வியாபாரத்தை வளர்க்கும் வகையில், இங்கேயும் பயன்படுத்தப்பட்ட கார்களின் ஏலத்தை துவக்க திட்டமிட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக உள்ள டொயோட்டா, அதன் பெரும்பாலான நேரத்தில் தனது விற்பனை இலக்கை எட்டவில்லை.
அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தியாவில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையை, நுகர்வோருக்கு இன்னும் நம்பிக்கைக்கு உரியதாகவும், வெளிப்படையாகவும் அமைக்க வேண்டும் என்பதே டொயோட்டாவின் லட்சியம் ஆகும். இதை மனதில் வைத்துக் கொண்டு, இந்தாண்டு செப்டம்பர் மாதம் பெங்களூருவில் டொயோட்டா ஏலம் சந்தையை (டொயோட்டா ஆயுக்சன் மார்ட்) துவக்கி, எல்லா பிராண்டுகளை சேர்ந்த ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களை, டொயோட்டாவின் பயிற்சி பெற்ற வல்லுநர்கள் ஆய்வு செய்து, ஏலத்திற்கு முன்பு அதற்கு சான்றிதழ் வழங்குவார்கள்.” என்றார்.
டொயோட்டாவிற்கு சொந்தமான, ஜப்பானில் காணப்படும் டொயோட்டா ஆட்டோ ஆக்ஷன் மற்றும் ச்சுபூ ஆட்டோ ஆக்ஷன், தைய்வானில் உள்ள ஹோடய் ஆட்டோ ஆக்ஷன் ஆகிய கம்பெனிகளை பயன்படுத்தி, தனது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனையில் ஈடுபடும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை (செக்ன்டு ஹேண்டு மார்க்கெட்), வாகன தயாரிப்பாளர்களுக்கு அதிக வருமானத்திற்கு வழிவகுத்து கொடுப்பதால், புதிய கார்களின் வியாபாரம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மந்த நிலையில் உள்ளது. ஏலம் எடுக்கும் பயன்படுத்தப்பட்ட கார்களின் மீது நுகர்வோருக்கு முழுமையான அதிகாரம் கிடைக்கிறது என்பதை சுட்டி காட்டி நுகர்வோரிடம் நம்பிக்கையை விதைக்க முடிகிறது.
மற்ற முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார், வோல்ஸ்வேகன், ஹோண்டா மற்றும் சொகுசு கார் தயாரிப்பாளர்களான ஆடி, பிஎன்டபில்யூ, மெர்ஸிடிஸ்-பென்ஸ் ஆகியோரை போல டொயோட்டாவும் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் வியாபாரத்தில், டொயோட்டா யூ-டிரஸ்ட் என்பதன் கீழ் செயல்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் அதிகாரி மேலும் கூறுகையில், “இந்த செயல்நுட்பமுடைய வியாபாரத்தை இன்னும் மேம்படுத்தும் வகையில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் மூலம் பெங்களூரு-மைசூர் எக்ஸ்பிரஸ்வே-யில் உள்ள பிடாடி என்ற நகரில் ஏலத்திற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா யூ-டிரஸ்ட், 19 மாநிலங்களில் உள்ள 56 சந்தைகளை உட்கொண்டுள்ளது. எனவே யூ-டிரஸ்ட் மூலம் தளர்ந்த நிலையில் உள்ள தனது விற்பனையை மாற்றியமைக்க அந்நிறுவனம் விரும்புகிறது. அந்நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏலத்திற்கு வரும் வாகனங்களை நிறுவன என்ஜினியர்கள், 203 அளவுகோல்களின் அடிப்படையில் வகை பிரித்து, அதன் மதிப்பு மற்றும் விலை ஆகியவற்றை நிர்ணயிப்பார்கள். இந்த முறை, பழைய கார்களை வாங்கும் டீலர்கள், அவற்றை திறமையற்ற முறையில் விலை நிர்ணயம் செய்யும் தற்போதைய முறைமையில் இருந்து, முற்றிலும் மாறுப்பட்டு காணப்படுகிறது” என்றார்.
மாருதி நிறுவனத்தின் மூலம் 2001 ஆம் ஆண்டு ஏற்கனவே பயன்படுத்த கார்களின் விற்பனை பிராண்டான ‘ட்ரூ வேல்யூ’ துவக்கப்பட்டது. அது தற்போது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் விற்பனையாகும் அந்நிறுவனத்தின் 1.1 மில்லியன் புதிய வாகனங்களின் விற்பனைக்கு, ஏறக்குறைய கால் பங்குக்கு நிகராக உள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை சந்தையை பொறுத்த வரை, நம்பகரமான விரிவாக்கமும், வருமானத்திற்கு வாய்ப்பு மிகுந்ததாகவும் உள்ளது.
தொழில் வல்லுநர்களை பொறுத்த வரை, இந்தியாவில் ஆண்டுதோறும் 2.5 மில்லியன் புதிய கார்கள் விற்பனையாகிறது. ஆனால் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை இதை காட்டிலும் 1.3 மடங்கு அதிகமாகவும், அதன் வளர்ச்சி விகிதம் மிக வேகமாகவும் உள்ளது. இந்திய சந்தையில், மிக பெரிய மற்றும் பலதரப்பட்ட பிராண்டுகளின் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாளரான மஹிந்திரா பஸ்ட் சாய்ஸ்-யை பொறுத்த வரை, நாட்டில் 3 மில்லியன் வாகனங்களுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் டொயோட்டாவும், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை சந்தையில் மிக தீவிரமாக களமிறங்குவதன் மூலம், உள்ளூர் விற்பனையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2015 நிதியாண்டில் 141,347 வாகனங்களை விற்று, சந்தையில் 5 சதவீதத்திற்கும் சற்று அதிகமான பங்கை பெற்றது. கடந்த ஒரு ஆண்டில் 9 சதவீத வளர்ச்சியை பெற்ற அந்நிறுவனம், அதன் முதல் காலாண்டில் 34,300 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்த ஏலம் மூலம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை, அதிக நம்பிக்கைக்குரியதாகவும், வெளிப்படையாகவும் மாற வாய்ப்புள்ளது.