• English
  • Login / Register

டொயோடா நிறுவனம் இந்தியாவில் சாலை பாதுகாப்பை மேம்படுத்த புதிய செயல் திட்டங்களை வகுத்துள்ளது

published on ஜூலை 10, 2015 11:44 am by அபிஜித்

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நம் நாட்டின் விபத்து புள்ளிவிவரத்தின் அடிப்படையில், நமது நாட்டில் நடக்கும் 1.4லட்ச விபத்துகளில், அபாயகரமான விபத்துகள் ஒவ்வொரு 4 நிமிடங்களில் நிகழ்வதாக நம்ப படுகிறது. எனவே, டொயொட்டோ நிறுவனம் வாகன ஓட்டுனர்களின் மத்தியில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஒரு புதிய விழிப்புணர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது போன்ற அபாயகரமான விபத்துகள்  நடப்பதற்கு முக்கிய காரணம் தக்க பயிற்சியும், தெளிவான வாகனநுட்ப அறிவும் இல்லாமையே ஆகும். இவற்றை குறைப்பதற்கு டொயொட்டோ நிறுவனம் இந்தியாவிற்குப் பாதுகாப்பு மிக்க கார்களை உற்பத்தி செய்து சந்தை பாடுத்துவதிலும், பாதுகாப்பாக வாகனத்தை இயக்கும் கலாச்சாரத்தை உருவாக்குவதிலும் உறுதியாகவுள்ளது.

டொயொட்டோ உற்பத்தியாளர் சமீபத்தில் அதன் முதல் ஓட்டுநர் பயிற்சி பள்ளியான  டொயோட்டா டிரைவிங் ஸ்கூல் (TDS) கொச்சியில் ஆரம்பித்துள்ளது. இதன்மூலம், முதன்முறையாக பாதுகாப்பான மற்றும்  பொறுப்பான ஓட்டுனர்களை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். இங்கு, ஜப்பானில் உள்ள "சுபு நிப்பான் டொயோட்டா டிரைவிங் ஸ்கூல்" (Chubu Nippon Toyota Driving School) என்ற ஓட்டுனர் பள்ளியின் அடிப்படை பயிற்சிகளை  பின்பற்றுகிறார்கள். சுபு நிப்பான் டொயோட்டா டிரைவிங் ஸ்கூல் ஓட்டுனர்களை பயிற்சி செய்வதற்கும், வாகனங்களை ஆராய்வதற்கும் மிகவும் பிரசித்தி பெற்றது.

டொயொட்டோ நிறுவனம், தனது ஓட்டுநர் பள்ளி பாடத்திட்டதில் முழுமையான, உயர் தரமான, எளிய நடைமுறை பயிற்சியும், எதிர்கால தேவைக்குரிய பயிற்சி முறைகளையும் விரிவாக தொகுத்து பாவனை முறையில் (driver simulator mechanism) வழங்குகிறது. ஓட்டுநர்கள் உண்மையான சாலையில் செல்லும் முன்னர் அவர்கள் அனைத்து கட்டுபாடு உபகரணகளான ஆக்ஸிலேட்டர்,  கியர்,  பிரேக்,  ஸ்டியரிங் ஆகியவற்றில் முழுமையாக  பாவனை முறையில் பயிற்சி பெறுகின்றனர். மேலும், பாவனை முறை கல்வியில், பனி, மங்கலான வெளிச்சம், மலை ஏற்றம் மற்றும் இறக்கம் ஆகியவையும் உண்டு. பலதரப்பட்ட சூழ்நிலைகளில் ஓட்டி பழகும்பொழுது, மாணவ ஓட்டுனர்கள், சரியாகவும், முறையாகவும், பாதுகாப்பாகவும் வண்டி ஓட்ட அடிப்படையிலிருந்து கற்றுக்கொள்கின்றனர்.

மேலும், நாம் எல்லோரும் நன்கு அறிந்த உண்மையென்னவென்றால், டொயோடா நிறுவனம் எப்பொழுதும்போல் ஓட்டுனர் மற்றும் முன்னிருக்கையில் அமருபவருக்கு தன் எட்டிஒஸ், எட்டிஒஸ் லிவா மற்றும் எட்டிஒஸ் க்ராஸ் போன்ற அனைத்து வடிவங்களிலும் காற்றுப்பை பொருத்தி பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • மாருதி இவிஎக்ஸ்
    மாருதி இவிஎக்ஸ்
    Rs.22 - 25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev6 2025
    க்யா ev6 2025
    Rs.63 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience