• English
  • Login / Register

S-FR துவக்க நிலை ஸ்போர்ட்ஸ் கார் தொழில்நுட்பத்தை டொயோட்டா வெளியிடுகிறது: அது இந்தியாவிற்கு ஏற்றதாக தெரிகிறது!

modified on அக்டோபர் 09, 2015 02:18 pm by அபிஜித்

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

இந்த மாதம் நடைபெற உள்ள டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட உள்ள S-FR என்று பெயரிடப்பட்டுள்ள டொயோட்டாவின் துவக்க நிலை ஸ்போர்ட்ஸ் கார் தொழிற்நுட்பத்தின் படங்களையும், தகவல்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. எடைக் குறைவான முன்பக்க என்ஜினை அடிப்படையாக கொண்ட இந்த சிறிய அளவிலான கார், பின்புற வீல் டிரைவ் தன்மையை பெற்றுள்ளது. இந்த காரின் தயாரிப்பு பதிப்பு, வரும் 2018 ஆம் ஆண்டு முதல் துவங்கும்.

இந்த S-FR தொழிற்நுட்பத்தின் பரிணாமத்தை பொறுத்த வரை, 3990 mm நீளம், 1695 mm அகலம், 1320 mm உயரம் மட்டுமே கொண்டு, 2480 mm வீல்பேஸ் அளவாகவும், கேபின் உள்ளே 4 சீட்களையும் பெற்றுள்ளது. இந்த பண்புகளை வைத்து பார்க்கும் போது, இந்தியாவில் உள்ள பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களான எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகியவற்றை ஏறக்குறைய ஒத்ததாக இருக்கும். இந்த கச்சிதமான பரிணாமம் திடீர்திருப்பத்திற்கு ஏற்றதாகவும், பார்வைக்கு எளிமையாகவும் காட்சி அளிக்கிறது.

இந்த காரின் வடிவமைப்பு திட்டத்தை பார்த்தால், நீண்ட வாகன முகடு கொண்ட ஒரு பழைய ஹார்டுடாப் கூபே-யின் அமைப்பை தழுவியதாகவும், ஒரு கச்சிதமான கேபின் உடன் சாய்வான ரூஃப்லைனையும் பெற்றுள்ளது. முன்பக்கத்தில் வட்டமான ஃபேக்லெம்ப் சூழ்ந்திருக்க, இடைவெளி கொண்ட வலைப்பின்னலை போன்ற முன்பக்க கிரில் காணப்பட, நீள்வாக்கில் பின்நோக்கி செல்லும் ஹெட்லெம்ப்கள் உடன் சற்று உயர்ந்த தனித்தன்மை வாய்ந்த DRL லேஅவுட்டை கொண்டு, தட்டையான மூடியால் மூடப்பட்டு, மீண்டும் ஒரு பழைய ஸ்போர்ட்ஸ் காரின் அமைப்புகளை பெற்றுள்ளது. பக்கவாட்டு பகுதியில், நுட்பமான தோள் பகுதி மடிப்பு கோடு மற்றும் கதவின் பக்கவாட்டில் ஏறி செல்வது போன்ற பின்பக்கத்தை பார்க்க உதவும் மிரர்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும் ஒரு ஜோடி டைமண்ட் கட் 8 ஸ்போக் அலாய் வீல்கள் கவனிக்கப்பட வேண்டியவை. காரின் பின்புறத்தில், அடர்ந்த கருப்பு நிறத்திலான வட்டங்களை கொண்ட டெயில்லெம்ப் கொத்தாகவும், தெளிவான கண்ணாடியையும் காண முடிகிறது. ஒரு ஒருங்கிணைந்த ஸ்பாய்லர், ஏரோடைனாமிக்ஸை கட்டுப்படுத்துகிறது. ஒரு விரைவி தன்மை கொண்ட பின்புற பம்பர், பார்வைக்கு ஒரு ஸ்போர்ட்டியான தோற்றத்தை அளிக்கிறது.

தெரிந்து கொள்ளுங்கள் : நான்காம் தலைமுறை ப்ரியஸ்IAA 2015  ல் காட்சிக்கு வைக்கப்பட்டது.

காரின் உள்ளேயும் வெளிபுறத்தை போலவே, எளிமையை கையாள டொயோட்டா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனால் டேஷில் ஓட்டுநரை சார்ந்த சென்ட்ரல் கன்ஸ்சோல் மற்றும் ஒருசில பொருட்கள் வைக்கும் இடங்கள் ஆகியவை தவிர, பெரிய அளவில் எதையும் காண முடியவில்லை. வெளிபுறத்தின் மஞ்சள் நிறத்தை காட்டும் வகையில், உள்ளே மஞ்சள் நிறத்திலான பைபிங், சீட் மற்றும் சென்ட்ரல் கன்ஸ்சோலில் டிரிம்கள் ஆகியவற்றில் காண முடிகிறது. இதில் உள்ள மல்டிஃபங்க்ஷனல் ஸ்டீயரிங் வீல்லில் கன்ட்ரோல்களை கொண்ட டிராக்பேட் மற்றும் அதற்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒரு முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரானி ஸ்டிக்கை கூட பெற்றுள்ளது. ஆனால் இந்த அமைப்புகள் எந்த மாதிரியான என்ஜினுடன் இணைந்து செயலாற்ற போகிறது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

காரின் மோட்டாரை குறித்து, டொயோட்டா நிறுவனத்திடம் இருந்து இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படாத நிலையில், இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான ஒரு வதந்தியில், இந்த தயாரிப்பாளர் GT86 ஸ்போர்ட்ஸ் காருக்கு கீழே அமையும் வகையில் 980 கிலோ எடை கொண்ட ஒரு ஸ்போர்ட்ஸ் காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது 130 Bhp 1.5-லிட்டர் என்ஜின் மூலம் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: மூன்றாவது டொயோடா எடியாஸ் மோட்டார் ரேசிங் பற்றிய  அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்தியாவிற்கு எந்த வகையில் ஏற்றது?

S-FR காருக்கு அளிக்கப்பட்டுள்ள கச்சிதமான அளவு மற்றும் எதிர்பார்ப்பில் உள்ள 1.5-லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆகியவை மூலம் இது ஒரு எளிய செலவு குறைந்த காராக, அதாவது நம் நாட்டு பண மதிப்பில் ஏறக்குறைய 12-ல் இருந்து 15 லட்சத்திற்குள் விலை அமையலாம். போலோ GT TSI, ஃபோர்டு ஃபிகோ 1.5 TiVCT மற்றும் அடுத்து வர உள்ள அபார்த் ஸ்டிங்கர் மற்றும் புண்டோ இவோ ஆகியவை இந்தியாவில் மெதுவாக தங்கள் இடத்தை பிடித்து வரும் நிலையில், S-FR போன்ற ஒன்றை அங்கே கொண்டு வர டொயோட்டா நிறுவனம் நினைக்கலாம். மேலும் நம் நாட்டு மக்களுக்கு செயல்திறன் கொண்ட கார்களின் மீதான விருப்பம் அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு, AMG, M-பிரிவு மற்றும் ஆடி RS வரிசையில் அமைந்த கார்கள் போன்ற தயாரிப்புகளை வெளியிட அதிக தயாரிப்பாளர்களும் செயல்பட ஆரம்பித்துள்ளனர்.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience