டொயோடா நிறுவனம் டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்புடன் கூடிய இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் கார்களை அறிமுகப்படுத்தியது.
டொயோட்டா இடியோஸ் க்கு published on aug 11, 2015 11:08 am by raunak
- 22 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
கண்கவரும் புதிய நீல நிறம், நேவிகஷன் வசதியுடன் கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட், நேர்த்தியான விரிப்புகள் மற்றும் மரத்தினால் ஆன டேஷ் போர்ட் வேலைப்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் வகைகள்.
டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் (டிகேஎம்) இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் கார்களை லேசான உட்புறம் மற்றும் வெளிப்புற மாற்றங்களுகன் வெளியிட்டுள்ளது. 1. 5 லிட்டர் பெட்ரோல் மாடல்கள் ரூ. 782,215 என்ற விலைக்கும் (1.4 லிட்டர் டீசல் என்ஜின் மாடல்கள் ரூ. 892,965 என்ற விலைக்கும் விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளன. இந்த விலைகள் டெல்லி எக்ஸ் - ஷோரூம் விலைகளாகும்.
புதிதாக என்ன?
- இந்த புதிய இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் சிறப்பு பதிப்பு ( ஸ்பெஷல் எடிஷன்) கார்கள் கண்கவரும் மெட்டாலிக் நீல வண்ணத்தில் மிளிர்வதோடு எக்ஸ்க்லூசிவ் என்ற பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
- கதவு பக்கவாட்டு வைசர்கள் மற்றும் குரோம் பூச்சுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள்.
- உட்புறத்தை பொறுத்த வரை இன்ஸ்ட்ருமென்டேஷன் பேனல் மற்றும் ஆர்ம்ரெஸ்ட் களுக்கு மரப் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதைத் தவிர இரண்டு வண்ணம் கலந்த சீலைகளும் உட்புறத்திற்கு கூடுதல் அழகை தருகின்றன.
- இவை அனைத்தையும் விட சிறப்பான விஷயம் என்னவென்றால் கை செய்கைகளால் இயக்கக்கூடிய டச் ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், ப்ளுடூத் தொடர்பு, வாய்ஸ் பன்க்க்ஷன் மற்றும் ஸ்மார்ட் போன் மூலம் நேவிகேஷன் வசதி என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
இந்த அறிமுக விழாவில் பேசிய திரு. ராஜா ( டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் பி. லிமிடெட் டின் இயக்குனர் மற்றும் துணைத்தலைவர் ( விற்பனை மற்றும் மார்க்கெடிங்) ) பின்வருமாறு கூறினார். “ இந்த இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் கார்களை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாடிக்கையாளரின் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் ரசனைக்கு ஏற்ப எண்கள் தயாரிப்புக்களில் நாங்கள் தொடர்ந்து மாற்றங்கள் செய்து அவைகளை மேம்படுத்திக்கொண்டே இருக்கிறோம். இந்த புதிய இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் கார்களில் சேர்க்கப்பட்டுள்ள சிறப்பம்சங்கள் வாடிக்கையாளரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் என்று தான் உறுதியாக நம்புகிறோம்.
இந்த தருணத்தில் கடந்த சில வருடங்களாக எங்கள் ப்ரேன்ட் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும் அளித்து வரும் ஆதரவுக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். புதுமை புகுத்துதல் என்ற பெயரில் வெறும் தொழில் நுட்ப சிறப்புகளை மட்டும் வாகனங்களில் சேர்த்துக்கொண்டே செல்வ5து மட்டும் போதாது. அதே அளவு முக்கியத்துவம் பாதுகாப்பு அமசங்களுக்கும் கொடுக்கப் பட வேண்டும் என்பதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். ஆகவே பாதுகாப்பு அம்சங்களுக்கு உச்ச கட்ட முக்கியத்துவம் தரப்படும் என்று உத்திரவாதம் தருகிறோம்".
எஞ்சினைப் பொறுத்தவரை மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இட்டியோஸ் எக்ஸ்க்லூசிவ் கார்கள் 1. 5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் D – 4D டீசல் எஞ்சின்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டிலுமே 5 ஸ்பீட் (கைகளால் இயக்கக்கூடிய) கியர் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது. மேலும் ஈடியோஸ் கார்களின் எல்லா மாடல்களிலும் முன்புறம் இரண்டு காற்று பைகளும் (ஏயர் பாக்) பொருத்தப்பட்டுள்ளது.
- Renew Toyota Platinum Etios Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful