• English
  • Login / Register

டொயோட்டா இந்தியாவின் Q சர்வீஸ் பண்டிகை கொண்டாட்டம் அறிமுகம்

published on அக்டோபர் 06, 2015 06:56 pm by raunak

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான பண்டிகை காலம் முழுவதும் இந்த முகாம் நடைபெறும்.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனம், ‘Q சர்வீஸ் பண்டிகை கொண்டாட்டம்’ என்ற முகாமை, இந்தியா முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டொயோட்டா டீலர்ஷிப்களில் அறிமுகம் செய்துள்ளது. இந்த முகாம் மூலம், வரவிருக்கும் பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள் மற்றும் பரிசுகள் அளிக்கப்பட உள்ளது. இம்மாதம் 1 ஆம் தேதி துவங்கிய இந்த ‘Q சர்வீஸ் பண்டிகை கொண்டாட்டம்’, நவம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடையும்.

இந்த முகாமின் பேக்கேஜ்கள் மற்றும் சலுகைகள்

  • அதிர்ஷ்ட வாடிக்கையாளர்களுக்கு துபாய் செல்வதற்கான பேக்கேஜ்
  • EM 60-ல் (60 நிமிடங்களில் எக்ஸ்பிரஸ் பராமரிப்பு) வார அதிர்ஷ்ட குலுக்கல்
  • 3வது வாகன ஆண்டு விழா கொண்டாடும் ஈடியோஸ் வாடிக்கையாளர்களுக்கான சலுகைகள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகள்
  • கார் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தில் 35% கழிவு
  • தேர்விற்குட்பட்ட உதிரிப் பாகங்களின் பேக்கேஜ்களுக்கு 60% வரை தள்ளுபடி
  • டயர்கள் மற்றும் பேட்டரிகள் வாங்கும் போது, பரிசுகள் உறுதி
  • U-டிரஸ்ட் மீது அட்டகாசமான சலுகைகள்
  • ரோடு சைடு அசிஸ்ட்டென்ஸ் [RSA] மீது 5% தள்ளுபடி

வாய்ப்பை நழுவ விடாதீர்கள்

டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உடன் கூடிய ஈடியோஸ் எக்ஸ்க்ளூசிவ்-வை டொயோட்டா அறிமுகம் செய்கிறது

இந்த பண்டிகை முகாமின் அறிமுகத்தில் பேசிய டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் வாடிக்கையாளர் சேவைக் குழுவின் துணைத் தலைவர் திரு. B.பத்மநாபன் கூறுகையில், “டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் என்பது ஒரு வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட நிறுவனம் என்பதால், எங்களின் ஒவ்வொரு செயலிலும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதில் அதிக கவனம் செலுத்தி, அதில் புதுமையையும், வளர்ச்சியையும் தொடர்ந்து அளித்து வருகிறோம். இந்த ‘Q சர்வீஸ் பண்டிகை கொண்டாட்ட முகாமை’ அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் தயாரிப்பு மற்றும் சேவைகள் ஆகியவற்றின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும், போற்றுதலையும் எண்ணி, அதற்கு நன்றி தெரிவிப்பதற்கான ஒரு வழியாக, எங்களின் பரவசமூட்டும் சலுகைகள் அமையும். எங்களின் வாடிக்கையாளர்களின் மனதிருப்தி, வாகனங்களை வாங்கும் போது மட்டுமின்றி, அந்த வாகனத்திற்கு உரிமையாளராக இருக்கும் காலம் முழுவதும் அது நீடித்திருக்க வேண்டும் என்பதை டொயோட்டா நிறுவனத்தினரான நாங்கள் எப்போது உறுதிப்படுத்தி செயல்படுகிறோம். ஒரு சிறப்பான பண்டிகை காலத்தை நாம் முன்னோக்கி உள்ள நிலையில், எங்கள் வாடிக்கையாளர்களின் கொண்டாட்டத்திற்கு ஏற்ப எங்களின் சிறப்பான சலுகைகள் அமையும் என்பதை நிச்சயமாக நம்புகிறோம்” என்றார்.

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    ஆடி ஆர்எஸ் க்யூ8 2025
    Rs.2.30 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • வோல்வோ எக்ஸ்சி90 2025
    வோல்வோ எக்ஸ்சி90 2025
    Rs.1.05 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience