சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Toyota Hilux Black எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது

dipan ஆல் மார்ச் 07, 2025 07:19 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
67 Views

டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷன், 4x4 AT செட்டப் உடன் வரக்கூடிய டாப்-ஸ்பெக் 'ஹை' டிரிம் அடிப்படையிலானது. இது வழக்கமான வேரியன்ட்டின் விலையிலேயே கிடைக்கும்.

  • ஹைலக்ஸ் பிளாக் எடிஷன் பிளாக்-அவுட் கிரில், அலாய் வீல்கள், ஓவிஆர்எம் -கள், புட் ஸ்டெப்ஸ் மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

  • இது குரோம் பின்புற பம்பருடன் தொடர்ந்து வருகிறது.

  • உள்ளே இது ஆல் பிளாக் கேபின் தீம் மற்றும் கறுப்பு நிறத்தில் சீட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • 8-இன்ச் டச் ஸ்கிரீன், அனலாக் டயல்களுடன் கூடிய மல்டி இன்ஃபார்மேஷன் டிஸ்பிளே மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகிய வசதிகள் கிடைக்கும்.

  • பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற கேமரா ஆகியவையும் உள்ளன.

  • இது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் 2.8 லிட்டர் டர்போ-டீசல் இன்ஜினுடன் வருகிறது.

டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷன் ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது ரூ. 37.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது ஃபுல்லி லோடட் ஹையர் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இது ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உடன் மட்டுமே கிடைக்கும். இது ஆல் பிளாக் எக்ஸ்ட்டீரியர் வெளிப்புறத்தை கொண்டுள்ளது. அதே நேரத்தில் உட்புறமானது வழக்கமான மாடலின் ஆல் பிளாக் தீம் விஷயங்களையும் கொண்டுள்ளது. விலை தொடங்கி, வழக்கமான மாடல் உடன் ஒப்பிடும் போது பிளாக் எடிஷனில் உள்ள அனைத்து வேறுபாடுகளையும் இங்கே பார்க்கலாம்.

விலை விவரங்கள்

டொயோட்டா ஹைலக்ஸ் இரண்டு வேரியன்ட்களில் வருகிறது. இவை இரண்டும் 4x4 (4-வீல்-டிரைவ்) செட்டப்பை கொண்டுள்ளன. விலை விவரங்கள் இங்கே:

வேரியன்ட்

விலை

ஸ்டாண்டர்டு எம்டி

ரூ.30.40 லட்சம்

ஹை எம்டி

ரூ.37.15 லட்சம்

ஹை AT

ரூ.37.90 லட்சம்

பிளாக் எடிஷன் AT (புதியது)

ரூ.37.90 லட்சம்

அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

அட்டவணை குறிப்பிடுவது போல ஹைலக்ஸ் பிளாக் பதிப்பும் டாப்-ஸ்பெக் ஹையர் வேரியன்ட்டின் அதே விலையில் கிடைக்கும்.

காரில் உள்ள மாற்றங்கள் என்ன

டொயோட்டா ஹைலக்ஸ் பிளாக் எடிஷன் அனைத்து பிளாக் எக்ஸ்ட்டீரியர் தீம் மற்றும் மிரட்டலான பிரீமியம் கவர்ச்சியை கொடுக்கும் பிளாக் எலமென்ட்களை இது கொண்டுள்ளது.

இந்த பிளாக்-அவுட் எலமென்ட்களில் அலாய் வீல்கள், கிரில், சைடு ஃபுட் ஸ்டெப்ஸ், வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVM -கள்) மற்றும் டோர் ஹேண்டில்கள் ஆகியவையும் உள்ளன. இந்த அனைத்து எலமென்ட்களும் வழக்கமான காரின் குரோம் ஃபினிஷிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஹைலக்ஸ் பிளாக் எடிஷனின் பின்பக்க பம்பர் குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

ப்ரொஜெக்டர்-எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டெயில் லைட்ஸ் மற்றும் டெயில்கேட்டில் உள்ள ‘டொயோட்டா’ எழுத்துகள் உள்ளிட்ட மற்ற வடிவமைப்பு எலமென்ட்கள் வழக்கமான ஹைலக்ஸ் போலவே உள்ளன. மேலும் வழக்கமான வேரியன்ட்களில் பிளாக் கலரில் இருக்கும் உட்புற அமைப்பு மற்றும் தீம் இரண்டும் ஹைலக்ஸில் ஒரே மாதிரி இருக்கும்.

மேலும் படிக்க: மஹிந்திரா தார் ரோக்ஸின் மோச்சா பிரவுன் உட்புறம் ஐவரி ஒயிட் தீமுடன் ஒப்பிடும் போது எப்படி வித்தியாசமாக உள்ளது ?

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

டொயோட்டா ஹைலக்ஸ் 8 இன்ச் டச் ஸ்கிரீன், அனலாக் டயல்கள் மற்றும் கலர்டு மல்டி இன்ஃபார்மேஷன் டிஸ்பிளே (எம்ஐடி), 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பின்புற வென்ட்கள் கொண்ட டூயல் ஜோன் ஆட்டோ ஏசி, பவர்டு டிரைவர் சீட் மற்றும் கூல்டு க்ளோவ்பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவையும் உள்ளன.

பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), பிரேக் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), பின்புற பார்க்கிங் கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை உள்ளன.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

டொயோட்டா ஹைலக்ஸ் 2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் வருகிறது. அதன் விவரங்கள் இங்கே:

இன்ஜின்

2.8 லிட்டர் டீசல் இன்ஜின்

பவர்

204 PS

டார்க்

500 Nm வரை

டிரான்ஸ்மிஷன்

6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT*

டிரைவ்டிரெய்ன்

4WD

*AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

இந்த இன்ஜின் மேனுவல் ஆப்ஷனுடன் 420 Nm (இது ஹைலக்ஸ் பிளாக் எடிஷனில் கிடைக்காது) அதே நேரத்தில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலம் 500 Nm பவரை கொடுக்கிறது.

போட்டியாளர்கள்

டொயோட்டா பிளாக் எடிஷன் ஆனது அதன் வழக்கமான மாடல் போலவே இசுஸூ வி-கிராஸ் -க்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your Comment on Toyota ஹைலக்ஸ்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் பிக்அப் டிரக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை