தென்னாப்பிரிக்காவில் அறிமுகமானது Toyota Fortuner மைல்ட்-ஹைப்ரிட் வேரியன்ட்
published on ஏப்ரல் 22, 2024 08:20 pm by anonymous for டொயோட்டா ஃபார்ச்சூனர்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
டொயோட்டா அதன் ஃபார்ச்சூனர் காரை தென்னாப்பிரிக்காவில் ஒரு மைல்டு-ஹைபிரிட் இன்ஜினுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஹைலக்ஸ் மைல்ட்-ஹைப்ரிட் பிக்-அப் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டும் ஒரே 2.8 லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகின்றன, இது 204 PS அவுட்புட்டை கொடுக்கின்றன. மைல்டு ஹைபிரிட் செட்டப்பை கொண்ட ஃபார்ச்சூனர் இந்தியாவிற்கு பின்னர் வரக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள மைல்ட்-ஹைப்ரிட் ஃபார்ச்சூனர் இப்போது 48V மைல்ட்-ஹைப்ரிட் செட்டப்பை கொண்டுள்ளது. டொயோட்டாவின் கூற்றுப்படி, இது அதிக சக்தி வாய்ந்தது மற்றும் குறைந்த எரிபொருளை பயன்படுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம் இன்ஜின் 16 ஹார்ஸ் பவர் மற்றும் 65 Nm அதிக டார்க்கை வழங்க முடியும் என்று டொயோட்டா கூறுகின்றது. இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே கிடைக்கும். இந்த ஹைபிரிட் செட்டப் வழக்கமான டீசல் இன்ஜின்களை விட 5 சதவீதம் அதிக மைலேஜ் கொடுக்கக்கூடியது.
மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டம் தவிர தென்னாப்பிரிக்க ஃபார்ச்சூனர் 360 டிகிரி கேமரா, லேன் டிபார்ச்சர் அலர்ட் மற்றும் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற பல கூடுதல் அம்சங்களையும் கொண்டுள்ளது. உள்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேக்கான இணைப்புடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆடம்பரமான 11-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
மைல்ட்-ஹைப்ரிட் ஃபார்ச்சூனரை இந்தியாவுக்குக் கொண்டு வரப்படுமா என்பதை டொயோட்டா உறுதிப்படுத்தவில்லை. ஆனால் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்ற. தற்போதைய நிலவரப்படி நம் நாட்டில் ஃபார்ச்சூனர் விலை ரூ. 33.43 லட்சம் முதல் ரூ. 42.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. எம்ஜி குளோஸ்டர் -க்கு போட்டியாக இது இருக்கும்.
மேலும் படிக்க: ஃபார்ச்சூனர் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful