ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண நிகழ்வில் இடம் பிடித்த சிறந்த 7 சொகுசு கார்கள்
திருமணம் நடக்கும் நிகழ்வுக்கு ஆனந்த் அம்பானியை ஏற்றிச் சென்ற கார் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II கார் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரின் மகன் திருமண நிகழ்வில் எவற்றையெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம்? பிரபலமான விருந்தினர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் நேர்த்தியான கார்களின் அணிவகுப்பு. சமீபத்தில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமண விழாவும் அப்படிதான் இருந்தது. உலகளாவிய பிரபலங்களை நிகழ்வில் பார்க்க முடிந்ததோடு மட்டுமல்லாமல், மும்பையில் உள்ள கார் ஆர்வலர்கள் ஒரே இடத்தில் மட்டுமே பார்க்கும் வகையில் சொகுசு கார்களும் இந்த நிகழ்வில் இடம்பெற்றன. ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, ஃபெராரி மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிறைய மாடல்களை பார்க்க முடிந்தது. அவற்றில் சிறப்பான 7 கார்களின் பட்டியல் இங்கே:
ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II
மாப்பிள்ளையை நிகழ்விடத்துக்கு அழைத்து வந்தது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சீரிஸ் II கார். திருமணத் அணிவகுப்பில் இடம்பெற்ற மிகவும் நேர்த்தியான மாடல்களில் ஒன்றாகும். இந்த ஆரஞ்சு கல்லினன் 600PS மற்றும் 900Nm அவுட்புட்டை கொடுக்கும் 6.75 லிட்டர் V12 இன்ஜினை கொண்டுள்ளது. கல்லினன் பிரமாண்டமாக காட்சியளித்தது மற்றும் பூக்களால் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த சொகுசு காரின் விலை ரூ.6.95 கோடியில் இருந்து தொடங்குகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம்
பர்ப்பிள் கலர் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் கார் மணமகளின் கல்லினன் காருக்கு பின்னால் மிதந்தபடி வந்தது. பாண்டம் காரில் 6.75 லிட்டர் ட்வின்-டர்போ V12 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 571PS மற்றும் 900Nm அவுட்புட் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது. விற்பனையில் உள்ள மிக ஆடம்பரமான கார்களில் ஒன்றான பாண்டம் காரின் விலை ரூ.8.99 கோடியில் இருந்து தொடங்குகிறது.
பென்ட்லி பெண்டாய்கா எக்ஸ்டென்டட் வீல்பேஸ்
பென்ட்லி பெண்டாய்கா எக்ஸ்டென்டட் வீல்பேஸ் உடன் பச்சை நிற ஷேடில் திருமண அணிவகுப்பில் இடம்பெற்றது. நீண்ட வீல்பேஸ் வேரியன்ட் என்பதால் பின்புறத்தில் வசதியாக கால்களை நீட்டி அமர்வதற்கு உங்களுக்கு நிறைய இடம் கிடைக்கும். அதே சமயம் உள்ளே உள்ள ஆடம்பர வசதிகள் அனைத்தும் உங்களைக் கவரும். இந்த எஸ்யூவி 4-லிட்டர் V8 பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 550 PS பவர் மற்றும் 770 Nm அவுட்புட் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பென்ட்லி பெண்டாய்கா EWB காரின் விலை ரூ.6 கோடியில் இருந்து தொடங்குகிறது.
லெக்ஸஸ் LM
மணமகள் லெக்ஸஸ் LM காரில் திருமண நிகழ்வுக்கு சென்றதை பார்க்க முடிந்தது. இந்த சொகுசு MPV ஆனது 2.5 லிட்டர் ஸ்ட்ராங்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜினை கொண்டுள்ளது. இது 250 PS என்ற இன்டெகிரேட்டட் அவுட்புட்டை கொடுக்கிறது. 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்,, 23-ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம், 48-இன்ச் பின்புற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹீட்டட் ஸ்டீயரிங் மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின்புற சீட்களை கொண்டுள்ளது. LM காரின் விலை ரூ.2 கோடி முதல் ரூ.2.50 கோடி வரை இருக்கிறது
ஃபெராரி புரோசாங்கே
ஃபெராரியின் முதல் எஸ்யூவி -யான புரோசாங்கே திருமணஅணிவகுப்பில் பிரகாசமான சிவப்பு நிற ஷேடில் அதன் பிரபலத்தை காட்டியது. இது 725PS மற்றும் 715Nm அவுட்புட்டை கொடுக்கும் 6.5-லிட்டர் V12 இன்ஜினை கொண்டுள்ளது. இது 8-ஸ்பீடு DCT உடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. இது நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது, இது 0-100 கிமீ/மணி நேரம் 3.3 வினாடிகள் ஆகும். முன்புறத்தில் 10.2-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் பயணிகளுக்கான தனி இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் முன் இருக்கைகளுக்கு மசாஜ் ஃபங்ஷன் ஆகிய வசதிகளை இந்த கார் கொண்டுள்ளது. இந்த ஃபெராரி எஸ்யூவி -யின் விலை ரூ.10.50 கோடியில் இருந்து தொடங்குகிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் S680 கார்டு
மெர்சிடிஸ்-பென்ஸ் S680 கார்டு, அம்பானி கேரேஜில் இணைந்த லேட்டஸ்ட் கார்களில் ஒன்றாகும். இந்த சொகுசு செடான் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். இந்த எஸ்-கிளாஸ் செடான் VPAM VR 10 சான்றிதழைப் பெறுகிறது. இது காரை வெடிகுண்டு தாக்குதல் மற்றும் சிறிய துப்பாக்கிகளில் இருந்து பாதுகாக்கிறது. இது பிளாட்-ரன் டயர்கள், வலுவூட்டப்பட்ட பாடிஷெல் மற்றும் பல லேயர்டு கிளாஸ் ஆகியவற்றைப் பெறுகிறது. இந்த குறிப்பிட்ட மாடல் காரின் விலை சுமார் 10 கோடி ரூபாய் ஆக இருக்கிறது.
மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G63
ஒரு ஜோடிக்கு மேல் மெர்சிடிஸ்-AMG G63 மாடல்கள் அணிவகுப்பில் பங்கு பெற்றன. இவை முந்தைய தலைமுறை ஜி-கிளாஸ் ஆகும். இது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜினை கொண்டுள்ளது பெற்றது, இது 585 PS மற்றும் 850 Nm அளவுக்கு அவுட்புட்டை கொடுக்கிறது. 2018 மெர்சிடிஸ்-AMG G63 காரின் விலை ரூ.2.19 கோடியில் இருந்து தொடங்குகிறது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் மிக ஆடம்பரமான திருமணத்தில் உங்கள் கவர்ந்த கார் எது? கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கானவை
கார்கள் தொடர்பாக உடனடி அப்டேட் வேண்டுமா கார்தேக்கோ வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்து கொள்ளவும்
மேலும் படிக்க: ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆட்டோமெட்டிக்