மாருதி எர்டிகா சிஎன்ஜி முன்பைவிட மிகவும் சிறப்பானது!
published on பிப்ரவரி 12, 2020 04:08 pm by rohit for மாருதி எர்டிகா 2015-2022
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஆற்றல் மற்றும் முறுக்கு திறன் அளவுகள் அப்படியே இருக்கும்போது, பிஎஸ் 6 மேம்படுத்தப் பட்ட மாதிரி எர்டிகா சிஎன்ஜியின் எரிபொருள் செயல்திறனை 0.12 கிமீ/கிலோ குறைத்துள்ளது
-
பிஎஸ் 6 எர்டிகா பெட்ரோல் இயந்திரத்தை தொடர்ந்து, மாருதி நிறுவனம் 2019 ஜூலையில் எர்டிகா சிஎன்ஜி யை அறிமுகம் செய்தது.
-
எம்பிவியின் விஎக்ஸ்ஐ வகையில் சிஎன்ஜி கிட் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
-
இது 92பிஎஸ் மற்றும் 122என்எம் முறுக்கு திறனை வெளியேற்றுகிறது, இது 5 வேக எம்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது.
-
முன்பு போலவே அதே சிறப்பம்சங்களுடன் இது தொடர்ந்து வழங்கப்படுகிறது.
மாருதி எர்டிகா சிஎன்ஜியை 2019 ஜூலை மாதம் விஎக்ஸி வகையை அறிமுகம் செய்தது. தற்போது, கார் தயாரிப்பாளர் எர்டிகா சிஎன்ஜியின் பிஎஸ்6-இணக்கமான மாதிரியை ரூபாய் 8.95 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) அறிமுகப்படுத்தியுள்ளது. சிஎன்ஜி கிட் முன்பு இருந்த அதே விஎக்ஸ்ஐ வகையில் தொடர்ந்து வழங்கப்படுகிறது.
இயந்திரம் கூட முன்பு இருந்தது போலவே உள்ளது- 1.5-லிட்டர் கே 15 மோட்டார் 5-ஸ்பீட் கைமுறை பற்சக்கர பெட்டி பொருத்தப்பட்டது. பிஎஸ் 6 விதிகளுக்காக மேம்படுத்தப்பட்ட போதிலும், அதன் வெளியீட்டு அளவுகள் பாதிக்கப்படாமல் இருந்தன. அதாவது இது தொடர்ந்து 92பிஎஸ் ஆற்றலையும் 122என்எம் முறுக்கு திறனையும் அளிக்கிறது. இருப்பினும், அதன் எரிபொருள் செயல்திறன் 26.20 கிமீ / கிலோவிலிருந்து 26.08 கிமீ/கிலோவாக குறைந்துள்ளது.
இதையும் காண்க: ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் மாருதி சுசுகி ஜிம்னி: விரிவான படங்கள்
சிறப்பம்சங்களைப் பொருத்தவரை, இது முன்பு இருந்த சாதனங்களின் பட்டியலுடன் தொடர்ந்து வருகிறது. இதில் பல தகவல் முகப்பு (ஒரே வண்ணமுடைய டிஎஃப்டி), சாவியில்லா நுழைவு மற்றும் திசைத்திருப்பியில் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் அழைப்புக் கட்டுப்பாடுகளைக் கொண்ட ஆடியோ அமைப்பு ஆகியவை அடங்கும். பாதுகாப்பைப் பொறுத்தவரை, எம்பிவியின் சிஎன்ஜி வகை இரட்டை முன்புற காற்றுப்பைகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், ஐஎஸ்ஃபிக்ஸ் குழந்தை இருக்கை நிலைத்தாங்கிகள், வேக எச்சரிக்கை, பின்புறம் காரை நிறுத்துவதற்கான உணர்விகள் மற்றும் முன் இருக்கை பட்டி நினைவூட்டல் ஆகியவற்றை நிலையாகப் பெறுகிறது.
இதற்கிடையில், எஸ்-பிரஸ்ஸோவின் சிஎன்ஜி மாதிரியை விரைவில் அறிமுகம் செய்ய மாருதி தயாராக இருக்கின்றது. பிஎஸ் 6 வரலாற்றில் டீசல் கார்களை வழங்காததால், அதன் தயாரிப்புகளை பிஎஸ் 6 பதிப்புகளை அறிமுகப்படுத்தும் செயல்முறையை இது துரிதப்படுத்துகிறது.
மேலும் படிக்க: மாருதி எர்டிகா டீசல்
0 out of 0 found this helpful