டாடா ஸிகாவில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
published on நவ 25, 2015 05:43 pm by raunak
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
டாடாவின் நானோ மற்றும் போல்ட் ஆகிய கார்களுக்கு இடையிலான இடைவெளியை, கடந்த 15 ஆண்டுகளாக நிரப்பி வரும் தற்போதைய இன்டிகாவின் (தற்போது இன்டிகா eV2 என்று அறியப்படுகிறது), இடத்தை டாடா ஸிகா நிரப்ப உள்ளது. இந்த வாகனத்திற்கு உள்ளான முறையில் கைட் என்ற சங்கேத பெயர் இடப்பட்டுள்ளது.
இது இன்டிகாவின் புனைப்பெயர் உடன் அமையாது. ஏனெனில் அப்படி அமைந்திருந்தால், அதற்கு இன்டிகா என்று மகிழ்ச்சியுடன் டாடா நிறுவனம் பெயரிட்டிருக்கும். ஆனால் ஸிகா கார், அடி முதல் முடி வரை முழுமையான ஒரு புதிய தயாரிப்பாகும். செஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய கார்கள் விஸ்டா உடன் சற்று சார்ந்திருப்பது போல இல்லாமல், இதுவரை வெளியான எந்த டாடாவின் தயாரிப்புடனும் ஸிகா சார்ந்திருப்பதாக தெரியவில்லை. எனவே இது முழுக்க முழுக்க ஒரு புத்தம் புதிய வடிவமைப்பு ஆகும். ஸிகாவின் முதல் படங்களை (டீஸர்) வைத்து பார்க்கும் போது, இது ஃபோர்டு ஃபிகோ உடன் மறைமுகமான தோற்ற பொருத்தம் கொண்டுள்ளதை அறிய முடிகிறது. ஆனால் இந்த பிரிவில் இதுவரை அப்படிப்பட்ட எந்த மாடலும் வெளி வரவில்லை என்பது ஒரு சுவாரஸ்சியமான செய்தியாகும்.
தற்போது டாடாவிற்கு ஒரு சரியான பலனை தராத போல்ட் மற்றும் நானோ ஆகிய இரு ஹேட்ச்களின் இடைப்பட்ட நிலையில் ஸிகா களமிறக்கப்படுவது மற்றொரு சுவாரஸ்சியமான தகவலாகும். எனவே ஸிகாவின் அறிமுகத்திற்கு பிறகு, அது சந்தையில் எந்த மாதிரியான விளைவை ஏற்படுத்தும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இந்த வாகனம் வெளியிடப்படும் என்றாலும், அதன் அதிகாரபூர்வமான அறிமுகம் 2016 ஜனவரி மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி செலரியோ, செவ்ரோலேட் பீட், ஹூண்டாய் i10, நிசான் மைக்ரா ஆக்டிவ் மற்றும் பல கார்களுடன், ஸிகா போட்டியிட உள்ளது.
வடிவமைப்பு
முதல் படத்தில் வந்துள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து பார்க்கும் போது, டாடாவின் டிசைன்நெக்ஸ்ட் வடிவமைப்பு திறனின் முழுவெளிப்படையும் இந்த வாகனத்தின் தோற்றத்தில் உள்ள வடிவமைப்பில் காண முடிகிறது. கிரிலை டாடா உருவாக்கியுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அது நுட்பமாகவும் மெல்லியதாகவும் அமைந்து, செஸ்ட் / போல்ட் ஆகியவற்றில் உள்ளது போல சாய்வான ஒன்றாக இல்லாமல், ஸிகாவில் உள்ள கிரில் செங்குத்தாக அமைக்கப் பெற்று, மூக்கு சற்று சரிந்ததாக உள்ளது. இந்த தன்மையின் மூலம், இதன் உறவு முறையில் அமைந்த மற்ற வாகனங்களோடு ஒப்பிடும் போது, இதற்கு கூடுதல் சிறப்பு கிடைக்கிறது. முதல் படங்களில் பார்க்கும் போது, ஹெட்லெம்ப்கள் அமர்த்தப்பட்ட நிலையிலும், பின்பக்கத்தில் உள்ள டெயில்லெம்ப்கள் மூடப்பட்ட நிலையிலும் அமைக்கப்பட்டு, வாகனத்தின் தோற்றத்திற்கு ஏற்ப அமைந்துள்ளது.
என்ஜின்கள்
டாடா மோட்டார்ஸிடம் இருந்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் வெளிவராத நிலையில், சந்தையில் வெளியாகியுள்ள ஒரு செய்தியின் மூலம் இந்த வாகனத்தை இயக்கும் பணியில் ஒரு ஜோடி புதிய பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்கள் ஈடுபடும் என்று தெரிய வருகிறது. இதில் டீசல் வகையில் 1.05-லிட்டர் கொண்ட 3-சிலிண்டர் யூனிட்டை பெற்று, 65-70 bhp-க்கு இடைப்பட்ட ஆற்றலையும், 150 Nm-க்கும் குறைவான முடுக்குவிசையையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செலரியோவின் பலவீனமான 800cc 2-சிலிண்டர் டீசல் யூனிட் உடன் ஒப்பிட்டால், இது எந்த வகையிலும் ஆற்றல் குறைந்ததாக தெரியாமல், சிறந்த செயல்திறன் மிகுந்த புள்ளிவிபரங்களையே தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் வகையில் ஒரு 1.2-லிட்டர் யூனிட்டை பெற்று, பெரும்பாலும் நாட்டிலுள்ள மற்ற 1.2-லிட்டர் யூனிட்கள் அளிக்கும் ஆற்றலை ஒத்திருக்கும். 80 bhp-யை விட அதிகமாகவும், ஏறக்குறைய 110 Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. மேலும் ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் கூடிய AMT ஆட்டோ தேர்வையும் டாடா நிறுவனம் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அம்சங்கள்
செஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய கார்களுக்கு அடுத்தபடியாக, இந்த பிரிவில் உள்ள போட்டியை மனதில் கொண்டு, பல அம்சங்களை இந்த வாகனம் பெற்றிருக்கும் என்ற அதிகளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதன் துவக்கமாக, செஸ்ட் மற்றும் போல்ட் ஆகியவற்றை ஒத்தது போன்று, இந்த பிரிவின் கட்டமைப்பில் உட்படாத ஒலிப் பெருக்கிகளுடன் கூடிய ஒரு ஹார்மேனால் இயக்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் காணப்படலாம். பாதுகாப்பு வசதிகளுக்காக, இதில் இரட்டை முன்பக்க ஏர்பேக்கள் உடன் கூடிய ABS மற்றும் EBD-யும், செஸ்ட் / போல்ட் ஆகியவற்றில் உள்ளது போன்ற CSC – கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் அமைப்பையும் கொண்டிருக்க வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful