சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாடா ஸீகாவின் விலை, எங்கிருந்து துவங்கும்?

published on ஜனவரி 06, 2016 10:06 am by raunak

ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் பிரிவினுள் அடுத்த வரவுள்ள ஸீகாவை மூலம் டாடா நிறுவனம் மீண்டும் நுழைய தயாராகி வருகிறது. போல்ட்டை விட தாழ்ந்து காணப்படும் இந்த புதிய வாகனம், முக்கியமாக மாருதி சுசுகி செலரியோ, செவ்ரோலேட் பீட் மற்றும் பல வாகனங்களுடன் போட்டியிட உள்ளது. இந்த ஸீகாவை தவிர, அதே பிளாட்பாமை அடிப்படையாக கொண்ட ஒரு கச்சிதமான சேடனையும், டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இவ்விரு தயாரிப்புகளும் தொழிற்நுட்ப ரீதியாக, இன்டிகா (eV2) மற்றும் நம் நாட்டின் முதல் கச்சிதமான சேடனான இன்டிகொ CS (eCS) ஆகிய டாடாவின் இரு மாடல்களின் வாரிசுகள் ஆகும். டாடா ஸீகாவின் விலையை ஆராயும் வகையில், இதன் போட்டியாளர்களுக்கு எதிராக நிறுத்துகிறோம்.

இதன் இரட்டை கச்சிதமான சேடனிற்கு முன்னதாக, இம்மாதமே இந்த ஹேட்ச்சின் அறிமுகம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போவில் இவ்விரு மாடல்களையும், டாடா நிறுவனம் அறிமுகம் செய்யவும் வாய்ப்புள்ளது. அடுத்து வரவுள்ள ஸீகாவை பிரபலமாக்க தேவையான அனைத்து கூறுகளையும், டாடா இதில் செய்துள்ளது. இப்பிரிவில் உள்ள மற்ற வாகனங்களோடு ஒப்பிட்டால், இவ்வாகனத்தின் விளிம்பு வரை அம்சங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மேலும் இது தரமான புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை பெற்று வெளி வருகிறது. இதன் பரிமாணங்களை குறித்து பார்க்கும் போது, இப்பிரிவிலேயே மிக நீளமான காராக இருப்பது ஸீகா தான். அதுமட்டுமின்றி, அதற்கு நிர்ணயிக்கப்படும் சரியான விலையும் பெரிய அளவிலான வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதால், இதன் முக்கிய போட்டியாளரான மாருதி சுசுகி செலரியோவை விட குறைவானதாக டாடா நிறுவனம் மூலம் விலை நிர்ணயிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸிப்பி காருக்கு, டாடா நிறுவனம் எப்படி விலை நிர்ணயிக்கிறது என்பதை காண்போம். கூடுதல் விவரங்களுக்கு எங்களோடு இணைந்திருங்கள்!

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை