டாடா ஜிக்காவின் அதிகாரபூர்வ புகைபடங்கள் வெளியிடப்பட்டது
published on டிசம்பர் 01, 2015 11:14 am by raunak
- 19 Views
- 26 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜிக்காவின் தோற்றத்தில், வழக்கமான இண்டிகா மாடலின் சாயலே இல்லாமல், முற்றிலும் வித்தியாசமாகவும் அழகாகவும் உள்ளது. 2016 -ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்.
டாடா நிறுவனம், தான் அடுத்ததாக வெளியிடவுள்ள ஜிக்கா ஹாட்ச் பேக் காரின் அதிகாரபூர்வ புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன் விலை, நானோ மற்றும் போல்ட் கார்களின் விலைகளின் இடையே நிர்ணயிக்கப்படும். காரின் டிசைனை நவீனப்படுத்தியது போலவே, டாடா நிறுவனம் தனது விற்பனை உத்தியையும் மாற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உலகில் சிறந்த கால்பந்து வீரர் லியோநெல் மெஸ்ஸியை தனது உலகளாவிய விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. ஜிக்கா மாடல், வரும் 2016 –ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது சந்தையில் வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கும் என்ட்ரி லெவல் B பிரிவு ஹாட்ச் பேக் கார்களான மாருதி சுசுகி செலேரியோ, ஹுண்டாய் i10, செவ்ரோலெட் பீட் மற்றும் பல கார்களுடன் போட்டியிடும்.
ஜிக்காவின் வெளிப்புறம், நிச்சயமாக இதற்கு முன் வெளியான டாடா கார்களைப் போல இல்லாமல், முழுவதுமாக மாறுபட்டு தோற்றமளிக்கிறது. ஆனால், டெக்னிகலாகப் பார்க்கும் போது, 10 வருடத்திற்கும் மேலான இண்டிகா காரை ஒத்திருக்கிறது என்று கூறலாம். எனினும், நிச்சயமாக இந்த கார் மிகவும் சிறப்பாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்றே கூறவேண்டும். ஏனெனில், ஒவ்வொரு வடிவங்களும் நேர்த்தியாகவும், தெள்ளத் தெளிவானதாகவும் உள்ளன. டாடா இதன் கிரில்லை சற்றே செங்குத்தாக மாற்றியமைத்துள்ளது. மேலும், வழக்கமான முறையில் இல்லாமல், மேலே பொருத்தப்பட்டுள்ளதால், இதன் முனைப் பகுதி சரிந்து காணப்படுகிறது. இந்த கிரில் தேன்கூடு போன்ற வடிவத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கிரில்லின் கீழே ஹியூமானிட்டி லைன் நளினமாகச் சென்று, சற்றே பின்வாங்கியுள்ள ஹெட் லாம்ப்களுடன் இணைகிறது. இவற்றின் கீழே, பெரிய ஏர் டேம் பொருத்தப்பட்டுள்ளது. அதுவும் தேன்கூடு வடிவத்திலேயே உள்ளது. ஏர் டேமின் இரண்டு விளிம்பிலும் பனி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பின்புறத்தில், ராப் அரௌண்ட் டெய்ல் லாம்ப்கள் உள்ளன. ஜிக்காவில் ஆச்சர்யம் தரும் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பிரிவில் முதல் முறையாக ரியர் பார்க்கிங் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இன்று டாடா அதிகாரப்பூர்வமாக ஜிக்காவின் புகைபடங்களை வெளியிடுவதற்கு முன்பே உளவாளிகள் அவற்றை வெளியிட்டுவிட்டனர். வெளிப்புறத் தோற்றத்தைப் போலவே, இதன் உட்புறமும் நவீனமாக உள்ளது. உட்புறத்தில், கருப்பு மற்றும் க்ரே என்ற இரண்டு வண்ணங்களும் இணைந்து மெருகூட்டுகின்றன. இரண்டு வண்ணங்கள் தவிர, ஆங்காங்கே க்ரோமிய வேலைப்பாடுகள் மற்றும் சில இடங்களில் பியானோ கருப்பு நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் உளவாளிகள் வெளியிட்ட புகைப்படத்தில் இடம் பெற்றது, ஜிக்காவின் உயர்தர மாடலாக இருக்க வேண்டும். உட்புறத்தில் உள்ள போர்டில் புளு டூத் வசதி இணைந்த டபுள்-டின் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரிவில் முதல் முறையாக டாடா நிறுவனம் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 4 ட்வீட்டர்கள் இணைந்த ஹார்மேன் சிஸ்டத்தைப் பொருத்தி உள்ளது.
ஜிக்காவில் உள்ள ஏர் கண்டிஷனை மேனுவலாக இயக்க வேண்டும், ஆட்டோமெட்டிக் வசதி இல்லை. ஜிக்கா மாடலில், கருப்பு வண்ணத்தில் வெள்ளி ஷேட் கொண்ட டிவின் பாட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் க்லஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், AC லௌவரிலும், கதவு கைப்பிடியிலும் க்ரோமிய வேலைப்பாடுகள் மிண்ணுகின்றன. ஜெஸ்ட் மற்றும் போல்ட் கார்களில் உள்ள ஸ்டியரிங் வீலை அப்படியே, எந்தவித மாற்றமும் இன்றி, இந்த காரிலும் பொருத்தி உள்ளனர். இஞ்ஜின் விவரங்கள் என்று பார்த்தால், ஜிக்கா மாடல் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வருகின்றன. இரண்டுமே 3 சிலிண்டர் அமைப்புகளைக் கொண்டதாக உள்ளன. ஜிக்காவின் ரோட் டெஸ்ட் விமர்சனம், இந்த வாரத்தில் வெளியிடப்படும். எனவே, எப்போதும் எங்களுடன் இணைந்து இருங்கள்.
இதையும் படியுங்கள்
- டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பர தூதவராக லியோனல் மெஸ்ஸி ஒப்பந்தம் செயப்பட்டார்
- அதிக சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்டார்ம், ரூ.13.52 லட்சத்தில் அறிமுகம்