டாடா ஸிகாவின் அறிமுக தேதி மாற்றப்பட்டுள்ளது: பிப்ரவரி மத்தியில் அறிமுகம்
published on ஜனவரி 11, 2016 07:18 pm by manish
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடாவின் புதிய ஸிகா, சந்தையில் அறிமுகமாகும் தேதியில் மீண்டும் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. உண்மையில், புத்தம் புதிய தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் டாடா கார் எப்போது வரும் என்று எதிர்பார்த்திருந்த கார் பிரியர்களுக்கு இது ஒரு ஏமாற்றம். ஏற்கனவே, இந்த கார் ஜனவரி 19 –ஆம் தேதி வெளிவரும் என்றும், 20 –ஆம் தேதி வெளிவரும் என்றும், கூறிய வதந்திகள் தற்போது பொய்யாகின, ஏனெனில், இந்த கார் பிப்ரவரி மாத மத்தியில்தான் சந்தைக்கு வரும் என்று தற்போது வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனவரி மாதம் அறிமுகமாகிவிடும் என்ற ஆட்டோகார் வலைதளத்தின் யூகம் தவறாகி, ஸிகாவின் அறிமுகம் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஸிகா காருக்கான முன்பதிவு 2016 பிப்ரவரி மாதம் 5 –ஆம் தேதியில் இருந்து 9 –ஆம் தேதி வரை நடக்கவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் இருந்து தொடங்கும் என்று சமீபத்திய நம்பிக்கையான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், டாடாவின் மற்றொரு சிறந்த படைப்பான ஹெக்ஸா க்ராஸ் ஓவர் காரும், இந்த ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் டாடா ஸிகாவுடன் இணைந்து காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
டாடா ஸிகாவின் அடிப்படை தொழில்நுட்பம், இண்டிகாவில் இருந்து பெறப்பட்டிருந்தாலும், மற்ற அனைத்து அம்சங்களும், அமைப்புகளும் புதுமைப்படுத்தப்பட்டு, ஸிகா அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் தனது தயாரிப்பான ரெவோடார்க் டீசல் இஞ்ஜின்களை முதல் முறையாக ஸிகாவில் பொருத்தி அறிமுகப்படுத்தவிருக்கிறது. 1.05 லிட்டர் 3 சிலிண்டர் ரெவோடார்க் டீசல் இஞ்ஜின், 69 bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 140 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லதாகும். அதே போல, ஸிகாவின் 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின், 84 bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 114 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும். மாருதி செலேரியோ மற்றும் செவ்ரோலெட் பீட் போன்ற கார்களில் உள்ள இஞ்ஜின்களை ஒப்பிடும் போது, ஸிகாவில் உள்ள இத்தகைய செயல்திறன் மிகுந்த உறுதியான இஞ்ஜின்கள், இந்த காரை டாடாவின் வெற்றி வரலாற்றில் ஒரு வெற்றிச் சின்னமாக மாற்றும் வல்லமை கொண்டவைகளாக உள்ளன. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இந்த இஞ்ஜின் இணைக்கப்படும். மேலும், இந்த காரின் அடுத்தடுத்த மேம்பாடுகளில், AMT வேரியண்ட்டையும் அறிமுகப்படுத்தப் போவதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
டாடா நிறுவனம், முதல் முறையாக பல சிறப்பம்சங்களை இந்திய கார் சந்தையில், ஸிகா காரின் மூலம் அறிமுகப்படுத்தவுள்ளது. ஜுக்-கார் ஆப் (Juke-car) மற்றும் நேவிகேஷன் அமைப்பு போன்றவை இந்த காரில் இடம்பெறுகின்றன. பயணிகள், ஹாட்ஸ்பாட் மூலம் தங்களது பிளே லிஸ்ட்டில் உள்ள பாட்டுகளை வயர்லெஸ் முறையில் கேட்கவும், மாற்றிக் கொள்ளவும், ஷேர் செய்யவும் முடியும். உலகப் பிரசித்தி பெற்ற ஹார்மென் நிறுவனத்தின் 8 ஸ்பீக்கர்களைக் கொண்ட இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டமும் இந்த காரில் இடம்பிடித்துள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களான முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ABS அமைப்பு ஆகிய அனைத்தும் பொருத்தப்பட்டு, எக்ஸ்-ஷோரூம் விலையாக சுமார் ரூ. 3.75 லட்சங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டு இந்த கார் வெளிவரவுள்ளது.
டாடா ஸிகாவின் ஃபர்ஸ்ட் ட்ரைவ் வீடியோவைப் பாருங்கள்:
மேலும் வாசிக்க