டாடா ஸிகா கார்களின் பிரத்தியேக புகைப்பட தொகுப்பு
published on டிசம்பர் 08, 2015 03:26 pm by nabeel
- 17 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய ஹேட்ச்பேக் பிரிவு காரான இண்டிகா பெற்ற வெற்றிக்கு பிறகு அதே போன்ற பெரிய பாதிப்பை தரக்கூடிய காரை இந்த பிரிவில் நிலை நிறுத்த திணறி வருகிறது. வருடத்தின் பிற்பாதியில் டாடா நிறுவனம் அறிமுகபடுத்திய போல்ட் மற்றும் செஸ்ட் கார்கள் இளைய தலைமுறைக்கான புதிய வாகனம் என்ற அளவிற்கு டாடா நிறுவனத்தின் பெயரை காப்பாற்றியது என்றாலும் ஒரு முழுமையான வெற்றியை பெறவில்லை.இந்நிலையில் டாடா அறிமுகப்படுத்தவுள்ள ஸிகா கார்கள் மீது அனைவரின் பார்வையும் திரும்பி உள்ளது மட்டுமின்றி அதன் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாகியுள்ளது. முற்றிலும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஹேட்ச்பேக் கார்கள் நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸிகா கார்கள் அழகிய தோற்றத்தை மட்டும் பெற்றிராமல் , தற்போதைய கார்களில் காணப்படும் அனைத்து விதமான நவீன தொழில்நுட்ப வசதிகளையும் தன்னுள்ளே கொண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும் . முதலில் இந்த காரின் அழகிய தோற்றத்தைப் பார்போம்.
மேலும் வாசிக்க