டாடா சிஸ்ட் ஆண்டுவிழா பதிப்பு அறிமுகம்: இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
published on செப் 09, 2015 11:35 am by manish for டாடா சிஸ்ட்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
தீபாவளி கொண்டாட்டத்தை ஒட்டி அறிமுகம் செய்யும் படலம் இன்னும் தொடர்கிறது. இதில் டாடா மோட்டார்ஸிடம் இருந்தும் ஒரு வெளியீடு இணைந்துள்ளது. இருப்பினும், இது மற்றவை போல இல்லாமல், ஒரு தற்செயலான ஆண்டுவிழா பதிப்பாகும். இந்த சிஸ்ட் சிறப்பு பதிப்பில், இப்போது வோகல் வைட் நிற திட்டம் மற்றும் பியானோ பிளாக் ORVMs உள்ளிட்ட பல விஷுவல் மேம்படுத்துதல்களை தாங்கி வருகிறது. இந்த காரில் ஆண்டுவிழா தீம் பாடி கிராஃபிக்ஸ் மற்றும் C பில்லர் மீது ஒரு மெட்டல் பேட்ஜ் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. உட்புறத்தை பொறுத்த வரை, ரிமோட் கன்ட்ரோல் உடன் கூடிய பின்புற விண்டுஷில்டு பவர் கர்ட்டன் மற்றும் தரை பணியகத்தில் (பிளோர் கன்சோல்) ஒரு பாட்டில் ஹோல்டர் ஆகிய ஆடம்பர உதிரிபாகங்களை கொண்டுள்ளது.
நீங்கள் காரின் கதவை திறந்தவுடன், சக்கரங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ஒளிரும் தகடுகள், உங்களை வரவேற்பது போல அமைந்து, அதில் புதிய வீல் கவர்களை பெற்றுள்ளது. முன்பக்க சீட்களை மூடிய வண்ணம், ஆண்டுவிழா பதிப்பிற்கான எம்பிராய்டரி காணப்படுகிறது. இந்த சிஸ்ட் ஆண்டு விழா பதிப்பு, ரூ.31,000 மதிப்புள்ள பல அம்சங்களை கொண்டு வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியடைய செய்தாலும், XMS வகை உடன் ஒப்பிட்டால், வெறும் ரூ.15,000 மட்டுமே விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அம்சங்களை தாங்கி வரும் வாகனங்களை, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த கவர்ச்சிகரமான விலை மதிப்பில் அந்நிறுவனம் அளிக்க உள்ளது. இயந்திரவியலை பொறுத்த வரை, காரில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் நீல வரிகளை கொண்ட இந்த கார், சாதாரண சிஸ்ட் காரை விட உங்கள் பயணங்களில் அதிக மகிழ்ச்சியை அளிக்க ஒரு மாற்றாக அமையும்.
விலைப் பட்டியல்
மாடல் - வகை |
ESP டெல்லி |
ஆண்டுவிழா பதிப்பிற்கு இடையிலான வேறுபாடு |
சிஸ்ட் XMS பெட்ரோல் |
572,512 |
15000 |
சிஸ்ட் ஆண்டுவிழா பதிப்பு பெட்ரோல் |
587,512 |
- |
சிஸ்ட் XT பெட்ரோல் |
630,544 |
43,092 |
சிஸ்ட் XMS டீசல் |
678,495 |
15,000 |
சிஸ்ட் ஆண்டு விழா பதிப்பு டீசல் |
693,495 |
- |
சிஸ்ட் XT டீசல் |
734,493 |
40,998 |