டாடா மோட்டார்ஸ் 2.0 லிட்டருக்கு குறைவான அளவுடைய இஞ்சின் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
டீசல் வாகனங்களுக்கு டெல்லியில் ஒரு மாதத்திற்கு முன் விதிக்கப்பட்ட தடையை சமாளித்து தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள டாடா நிறுவனம் முயன்று வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக 2.0 லிட்டருக்கு குறைவான டீசல் என்ஜின் தயாரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. தற்போது தன்னுடைய செனான் , சபாரி டெக்கார், சஃபாரி ஸ்டார்ம் மற்றும் ஆரியா வாகனங்களில் 2,179 cc டீசல் என்ஜினை பயன்படுத்தி வருகிறது. சுமோ கோல்ட் வாகனங்களில் இன்னமும் கூடுதல் திறன் கொண்ட 2,956cc என்ஜினை பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. .
2,000cc மற்றும் அதற்கு கூடுதல் திறன் கொண்ட டீசல் எஞ்சினுக்கு டெல்லியில் மூன்று மாத தடைஉத்தரவு தற்போது அமலில் உள்ளது. நமது இந்திய தலை நகரத்தில் காற்று மிகவும் அசுத்தமடைந்து சுட்புற சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இந்த சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. என்று டெல்லி வாட்டாரங்கள் கூறுகிறது. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த தடையை சமாளிக்க மாற்று வழிகளை தீவிரமாக யோசிக்க தொடங்கி உள்ள நிலையில் , இந்த தடை மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிய வருகிறது. மஹிந்திரா நிறுவனம் தங்களது XUV 500 மற்றும் ஸ்கார்பியோ வாகனங்களில் 1.99 - லிட்டர் டீசல் யூனிட்களை பொருத்த தொடங்கி உள்ளது. டொயோடா நிறுவனமும் தங்களது மிகப் பிரபலமான இன்னோவா கார்களின் பெட்ரோல் வேரியன்ட்களை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறது.
இந்த டீசல் என்ஜின்கள் மீதான தடை உத்தரவு நிறைய முரண்பாடுகள் கொண்டதாகவே தோன்றுகிறது . காரணம் என்ஜின் திறனை வைத்து மட்டுமே எமிஷன் அளவை கணக்கிடுவது சரியான ஒரு முறையாக இருக்காது என்று பல கார் தயாரிப்பாளர்கள் வாதிடுகின்றனர். ஜாகுவார் நிறுவனம் ஒரு படி மேலே சென்று தங்கள் வாகனங்களில் பயன்படுத்தி வரும் அதிநவீன உயர் தொழில் நுட்பம் கொண்ட அமைப்பு காற்றை மாசுபடுத்துகிறது என்று சொல்வதை விட காற்றை தூய்மை படுத்துகிறது என்றே சொல்கிறது. மற்ற கார் தயாரிப்பாளர்களும் இதே போல் இந்த தடை உத்தரவுக்கு எதிரான தங்கள் ஆட்சேபங்களை தெரிவித்து உள்ளனர். இஞ்சின் திறனை விட அது வெளியிடும் புகையில் உள்ள மாசு துகள்களின் அளவை மட்டுமே கணக்கிட்டு முடிவு செய்ய வேண்டும் என்றும் பல வாகன தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் வாசிக்க