கைட்டின் முதல் படத்தை (டீஸர்) டாடா மீண்டும் வெளியிட்டது: ஓட்டுநர் சீட்டில் லியோனல் மெஸ்ஸி!
ஜெய்ப்பூர்:
தனது புத்தம் புதிய தயாரிப்பின் உருவாக்கம் குறித்த ஒரு புதிய வீடியோவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் புதிய சர்வதேச அளவிலான விளம்பரத் தூதரான பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி உடன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில், கைட் என்ற குறியீட்டுப் பெயரில் அறியப்பட்டு, போல்ட் காருக்கு அடுத்தப்படியில் அமைந்து, அடுத்து வரவுள்ள ஹேட்ச்பேக் கார் மறைமுகமாக காட்டப்படுகிறது. இந்த காருக்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், இனிவரும் சில வாரங்களில் இதன் பெயர் வெளியிடப்பட்டு, அதன்பிறகு இதன் அறிமுகம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் உடன்பிறப்பான கச்சிதமான சேடனை தொடர்ந்து, இந்த கைட் ஹேட்ச்பேக் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவ்விரு வாகனங்களும், பிரபல கார்களான இன்டிகா eV2 மற்றும் இன்டிகொ eCS ஆகியவற்றிற்கு மாற்றாக அமையலாம். ஏனெனில் இவ்விரு வாகனங்களும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நிலையில், மேற்கூறிய இரு பிரபல கார்களின் தயாரிப்புகளையும், அந்நிறுவனம் நிறுத்தலாம் என்று தெரிகிறது.
இயந்திரவியலில், அடுத்து வரவுள்ள இந்த கைட் இரட்டைகளின் என்ஜின்களை குறித்து எந்த விபரங்களையும், வாகன தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்த வாகனங்கள், ஒரு 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஒரு 1.05-லிட்டர் டீசல் மோட்டாரை பெற்று, இவ்விரண்டும் 3-சிலிண்டரை கொண்டு செயல்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த கைட் காரில் ஒரு AMT (ஆட்டோமெட்டடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்) தேர்வு – 5-ஸ்பீடு MT என்று அறியப்படும் டாடாவின் F-ட்ரோனிக்கை அடிப்படையாக கொண்ட மேக்னிட்டி மேர்லி AMT-யைக் கொண்டிருக்கலாம் என்பது வெளிப்படையானது ஆகும். அதே நேரத்தில் இவ்விரு மோட்டார்களுக்கும் 5-ஸ்பீடு மேனுவல் தரமானதாக அமையும். இந்த டீசல் என்ஜினின் எரிபொருள் திறன் வெளிப்பாடு, மாருதி சுசுகி சிலிரியோவின் 800 cc 2-சிலிண்டர் ஆயில் பர்னர் அளிக்கும் புள்ளிவிபரங்களை ஒத்து காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் உள்ள அம்சங்களை குறித்து பார்க்கும் போது, சிஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய கார்களில், ஹார்மேன் செயல்படுத்தும் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற சில அம்சங்களை, டாடா கைட் பகிர்ந்து கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பை பொறுத்த வரை, இதில் ABS+EBD உடன் கூடிய இரட்டை ஏர்பேக்களை, வாகன தயாரிப்பாளர் தரப்பில் அளிக்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்